குதிரைகள் சொல்லும் இன்னொரு பாடமாக எழுத்துச்சித்தரின் புதிய குதிரை கவிதை ….. உங்களுக்காக….
மனிதர்கள் நிமிர்ந்த நேரம்
மிருகத்தை அடிமை செய்தார்.
குரங்கின வழியில் வந்த
கோலத்தை மறந்து போனார்.
தோழமை என்றார் ; ஆனால்
தொல்லைகள் பலவும் தந்தார்.
தோழமை என்றால் என்ன
பரஸ்பரம் மதித்தல் தானே
தான்மட்டும் சிறந்தோர் என்ற
தன்மையை மறத்தல் தானே
மிருகங்கள் நட்பாய் வரினும்
தனித்தனி அளவு கோல்கள்
யானையோ மிரட்டும் உருவம்
சிங்கமோ கர்வம் அதிகம்
புலி சிறுத்தை போக்கிரித்தனம்
நுழைநரி வஞ்சகப் பிராணி
ஒட்டகம் முற்றும் கோணல்
குரங்கது அலையும் தன்மை
கரடியோ அழுக்கு மூட்டை
கழுதைப் புலி அருவறுப்பு
பூனைக்கோ கள்ளம் அதிகம்
நாயது அடிமை புத்தி
குதிரைகள் மட்டுமிங்கே
மனிதருள் நெருக்கமாச்சு.
குதிரைகள் ராஜ ஸ்நேகம்
எவரையும் வெறுக்கா மனது
காமத்தைக் காட்டும் உருவம்
காதலின் உண்மை வேகம்
ஓய்வில்லா தன்மை காட்டும்
உழைப்புக்கு உவமை யாகும்
ஒருமுறை ஸ்நேகம் கொண்டால்
மற்றவை விலகிப் போகும்.
மனிதர்கள் முழுதாய் வளர
குதிரையே பெரிதும் காரணம்
- இது குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் இன்னொரு பாடம்.
"தோழமை என்றால் என்ன
ReplyDeleteபரஸ்பரம் மதித்தல் தானே
தான்மட்டும் சிறந்தோர் என்ற
தன்மையை மறத்தல் தானே" -
பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய கடினமான வாழ்க்கைத்தத்துவங்களை எத்தனை எளிமையாக தந்துள்ளார் எழுத்துச்சித்தர். பரஸ்பர புரிதல் தாண்டி ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்கும் நிலை "தான்" என்ற எண்ணத்தை தாண்டியபின்னரே சாத்தியமாகிறது - நாம் இதை புரிந்து கொள்ளுதல் மட்டுமின்றி பழக்கப்படுத்திக்கொள்ளுதலுமே இக்கவிதையின் நோக்கமாயிருக்க முடியும். நன்றி - வாழ்த்துக்கள்
Nice ‘kavithi’, after reading this I can understand Horse is a Speechless Tutor in all aspects of our life.
ReplyDeleteMy honorable Thanks to Iyya. Balakumaran. Expecting more...
~babu
வணக்கங்கள் பல... என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாவல் 'இரும்புக் குதிரைகள்'... அந்நாவலில் படித்த குதிரைக் கவிதைகள் வாழ்க்கையில் பலவற்றை புரிந்துக் கொள்ள உதவியது... இதற்கு முந்தைய Blogல் வெளியான ஐந்தாவது கவிதையைப் போல இந்த கவிதையும் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... இரும்புக் குதிரைகள் போன்ற இன்னொரு படைப்பை ஐயா தருவார்களா என்று தெரியவில்லை... ஆயினும் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் இப்பொழுது வெளியிட்டுள்ள கவிதை பெரும் ஆறுதல்... உங்கள் சேவை தொடரட்டும்... நன்றி, வணக்கம்...
ReplyDeleteMy view about Horse is changed after reading "Guthirai Kavithaigal". I started to think about Ayya's vedham when i am seeing horse.
ReplyDeleteSincerely,
Jayapradha
CT,USA