சிலை சொல்லும் செய்தி –இரண்டு – எழுத்துச்சித்தர் பார்வையில்
கலையும், கலைஞனும் அவன் வடித்த சிலையும் எங்கணம் காலங்களைத் தாண்டி நின்று நம் பழந்தமிழ் நாகரீகத்தின், சிற்பக்கலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன என்பதை பனிரெண்டாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட யானை உரி போர்த்த சிவன் சிலை சொல்லும் செய்தியை அதன் புறக்காரணங்களைத்தாண்டி அகழ்ந்தாய்ந்து தருகிறார் எழுத்துச்சித்தர்.
யானை உரி போர்த்த சிவன் பெருமையை கதையாய் அறிந்திருந்த என் போன்றோர்க்கு அதன் உண்மை தத்துவத்தையும், இந்து மத கதைகள் எல்லாம் கதைகள் அல்ல அது பேசும் தத்துவத்தின் குறியீடுகள் என்று மற்றவர்க்கும் உணர்த்தும் வகையில் அமைந்திருந்த இந்த பதிவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
ReplyDeleteசிலை சொல்லும் செய்தி அருமையான முயற்சி. பழமையான சோழர் காலத்தின் சிற்பக்கலையை எண்ணி வியக்கவைக்கிறது. சிற்பியின் கலை நயத்தையும்,திறமையையும் ஐயாவின் அருமையான விளக்கத்தையும் அவரின் கம்பீரமான குரலில் கேட்கும் போது திகைப்பாக உள்ளது.
ReplyDeleteபடமும் அதன் விளக்கமும் கோர்வையாக வருவது நன்றாக உள்ளது. உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
இதிகாச புராண கதைகள் வாழ்க்கைத் தத்துவத்தை நாம் எளிமையாக புரிந்து கொள்வதற்காகவே இருக்கின்றன என்று ஐயா சொல்வார். கதைகள் உண்மையா பொய்யா என்று வாதிடுவதை விட அது சொல்ல வரும் செய்தியை புரிந்து கொண்டு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதே அறிவு என்றும் கூறுவார்.
ReplyDeleteசோழர்கால சிற்பங்களின் நுணுக்கங்களை விவரிப்பதில் அவருக்கு அலாதி ஆனந்தம்........