Friday, October 10, 2008

சில கேள்விகள் – சில பதில்கள்


ஐயா, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?

ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா. ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா. ஒரு குழந்தைக்கு செவ்வாய் கிரகமும், குருவும் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா. ஆ மெனில் செக்ஸ் கல்வியும் அவசியம்.

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? எனக்கு பல கனவுகள் வருகின்றன. நான் அந்தக் கனவில் கத்துகிறேன் என்று துணைவியார் சொல்கிறார். ஆ னால் எழுந்தப் பிறகு எனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. கனவுகள் பற்றி சற்று விளக்க முடியுமா.

மனதின் இன்னொரு மொழிதான் கனவு. அந்த மொழிக்கு லிபி இல்லை. ஏன் சப்தம் கூட இல்லை. மனதின் மெள ன மொழி நாடகமாக கண் முன்னே விரியும். இயக்கங்களும், ஆ சைகளும், பயங்களும், கோபங்களும் மனதின் மெள ன மொழியில் வெளிப்படும். கனவு காணும் பொழுது விழிப்பாக இருந்தால் விழிக்கும்போது அந்தக் கனவைக் கைபற்றி விடலாம். கனவு காணும் பொழுதே “அட கனவு” என்று எவருக்கு தோன்றுகிறதோ அவர் கனவின் உத்தேசங்களை அறியக் கூடியவர். இதற்கு படுக்கும்பொழுதே என்ன கனவு வந்தாலும் நான் நிதானமாக புரிந்துக் கொள்வேன் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது. உங்கள் உறுதியைப் பொறுத்து கனவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும். கனவு முடிந்த பிறகு, விழிப்பு ஏற்பட்ட பிறகு கனவு காணாமல் போகும். அது தான் இயல்பு. உடனே கனவைத் துரத்தக்கூடாது. என்ன கனவு, என்ன கனவு என்று பதறக்கூடாது. பதறினால் கனவு இன்னும் அடி ஆ ழ த்தில் போய் சொருகிக் கொள்ளும். வெளியே வராது. கனவை மறந்து விடுங்கள். கனவை நோண்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குள் அந்தக் கனவு வந்து நிற்கும் அல்லது அதன் ஏதாவது ஒரு நுனி உங்கள் முன்பு வந்து நிற்கும். அந்த நுனியைப் பிடித்து இழுக்க மொத்தப் புடவையும் வெளியே வந்து விடும். அப்பொழுது கனவின் உத்தேசமும் உங்களுக்கு தெரிந்து விடும். கனவு என்பது சில சமயம் நீங்கள் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யலாம் என்றும் சொல்லக்கூடிய திறம் வாய்ந்தவை. கனவோடு போரிடாமல், கனவு மறுபடியும் நினைவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கனவு காணும்பொழுதே கனவைப் பற்றிய அறிவு வேண்டும் என்று படுக்கும் முன்பு தீர்மானம் செய்யுங்கள். பழக பழக இது எளிதாக கைகூடும்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பார்த்து நீங்கள் கோபப்படுவதை கவனித்திருக்கிறேன். இந்த அவசர யுகத்தில் இந்த விதிகள் எல்லாம் அவசியமா?

அவசரமாக போவதற்கு தான் விதிகள். அலட்சியமாக போவதற்கு அல்ல. அவசரமாகப் போகிறவர் ஆ பத்தில்லாமல் போக வேண்டும் அல்லவா. அவசரமாக வேறு ஏதாவது இடத்திற்கு போவதற்குத் தானே முயற்சிக்கிறார். அவசரமாக மேல் உலகம் போகவா முயற்சிப்பது. அதைப் பார்த்து ஒருவர் பதறக்கூடாதா. ஒருவர் செய்கிற தவறு அவருக்கு மட்டும் மரணம் கொடுக்காமல் மற்றவருக்கும் பெரிய இடைஞ்சல் கொடுத்து விடுகிறது. இடது பக்கம் ஓவர்டேக் செய்வது போன்ற கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை என்பது என் அபிப்ராயம். சந்து முனையில் லாரிகள், கார்கள், ஆ ட்டோகளை நிறுத்துதல் அடுத்தபடியான கேவலம். ஒரு தெருவில் திரும்பும் போது எதிரில் வரும் வண்டியை தெரியாமல் மறைக்க இம்மாதிரியான விஷயங்கள் தடை செய்கின்றன. போக்குவரத்தை மரியாதையாக மதிக்க கற்றுக்கொண்டால், போக்கும் வரத்தும் மிக எளிதாக இருக்கும். இல்லையெனில் நூற்றுகணக்கான விபத்துகள் ஒரு நாளைக்கு நிச்சயம். பட்டாலும் புத்தி வராத மனிதர்கள் இந்தியாவில் தான் நிறைய உண்டு.

நீங்கள் சமீபமாக பார்த்து ரசித்த படம்?



குறுந்தகட்டில் ஹோம் பாக்ஸ் ஆ பிஸ் என்கிற எச்.பி.ஒ.வின் “ரோம்” என்கிற டெலிவிஷன் சீரியல் பார்த்தேன். பன்னிரண்டு அத்தியாய ங்களாக ஜுலியஸ் சீஸர், மார்க் ஆ ண்டனி, புருட்டஸ் என்போரை வைத்து சாதாரண ரோமனிய போர்வீரர்களை மையமாக்கி, ரோமானிய பெண்களை முக்கியமான கதாப்பாத்திரம்
ஆ க்கி அருமையா டிவி சீரியல் செய்திருந்தார்கள். இதைப்போல நான் எழுதிய உடையார் என்கிற ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை சமூகப் பொறுப்போடும், கலை நயத்தோடும் எவ ரேனும் எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு வந்தது. தமிழர் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும் என்றால் மானாட மயிலாட என்று இருக்க முடியாது. சரித்திரம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். தமிழின் மேன்மை சரித்திரத்தில் இருக்கின்றது. வெறும் ஆ ட்டத்தில் இல்லை.

உங்களுக்கு பேண்டு வாத்தியம் பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். நாதஸ்வரம், தவிலை விட, தாரை தப்பட்டையை விட இந்த ஸாக்ஸபோன், பேண்டு வாத்தியம் மிகவும் காதுக்கு இதமாக இருப்பதாக என்னுடைய அபிப்ராயம். முன்பெல்லாம் வட்டமாக பீச்சில், பார்கில் நின்று இந்தப் பேண்டு வாத்தியக் குழு இசைக்கும்.
நல்ல கர்னாடக சங்கீதங்களை துல்லியமாக வாசிப்பார்கள். கர்னாடக சங்கீதத்தை பேண்டு வாத்தியத்தில் கேட்பது தனி சுகம். அது தயிர் சாதத்தை ஸ்பூனும், முள் கரண்டியுமாய் சாப்பிடுவது போன்ற அழகு.

கயிலாய மலையை போய் காசுக் கொடுத்து பார்த்து விட்டு அது வேறொன்றுமில்லை வெறும் பனி படர்ந்த மலை என்று என் நண்பர் சொன்னார். அவர் சொல்வது சரிதானா. வெறும் கல்லைப் பார்த்து கடவுள் என்று எப்படி பரவசப்படுவது?

பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற பெற்ற தாயைப் பார்த்துவிட்டு இது என்ன வெறும் எலும்பும், சதையும், நரம்பும், ரத்தமும் கலந்த ஒரு பிண்டம். இதைப் பற்றி அம்மா என்று கொண்டாட என்ன இருக்கிறது என்று எவனாவது சொல்வானா. தாய்மை போன்ற உணர்வுகள் தோற்றம் தாண்டியவை என்று அறியாதவன் மனிதன் தானா.

17 comments:

  1. வணக்கம்,

    Blog வருகிறதா என்று ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த எங்களை போன்றவர்களுக்கு ஐய்யாவின் கேள்வி பதில் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
    அதுவும் கனவை பற்றி கேள்விக்கு ஐயாவின் பதில் அருமை,கனவை பற்றி எங்களுக்கு இருந்த சந்தேகம் விலகியது,உடையார் என்ற நாவலை இப்பொழுதும் திரும்பி திரும்பி படித்து கொண்டிருக்கும் எங்களை போன்றவர்களுக்கு அது சிரியல்
    ஆக பார்க்க நேர்ந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும், அப்படி ஒரு முயர்ச்சி
    யாராவது எடுக்கவேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

    கலை வினோத்

    ReplyDelete
  2. Thank you very much Krishna Tulasi.
    It is very nice to see the blog after long time. I was checking everyday, disappointed without seeing a new blog. So i was reading old ones again and again. It is very useful for people who is far away like me. Blog gives the feel of being near to Ayya. You are doing a great job. I request you to give more blogs. Also i pray Bhagavan Yogi Ram Surathkumar for all success of the blog and your effort.

    Sincerely
    Jayapradha
    Middletown,CT
    USA

    ReplyDelete
  3. வெகு நாட்கள் கழித்து இட்ட பதிவெண்றாலும் அந்தக்குறையை தீர்த்துவிட்டது தேர்ந்தெடுத்த கேள்விகளும் அதற்குண்டான பதில்களும். மிக்க நன்றி...

    ReplyDelete
  4. Good Day Krishna Thulasi.
    Vanakkam.
    Thank you for posting these thoughts of Aiya.
    Our Namaskarams.
    Deepavali Greetings and our Special Deepavali Namaskarams to Shri. Balakumaran Aiya.
    Anbudan,
    Srinivasan. V.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நன்றி கலை வினோத். தமிழர் சரித்திரத்தில் ராஜ ராஜ சோழன் என்றுமே ஒரு fascination. அவரைப் பற்றி கதையின் மூலமாகவோ, சினிமா மூலமாகவோ தெரிந்து கொள்வது என்றுமே பரவசம் தான். மகாபாரதம் போன்ற தொடரில் ராஜ ராஜ சோழனைப் பார்ப்பதென்றால் கசக்கவா செய்யும்...

    ReplyDelete
  7. நன்றி கிருத்திகா...காத்திருந்து படித்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றி.

    ReplyDelete
  8. thanks srinivasan. your wishes will be conveyed to Iyya.

    ReplyDelete
  9. thanks srinivasan. your wishes will be conveyed to Iyya.

    ReplyDelete
  10. வணக்கம். கனவு பற்றிய பதில் அருமை. எனக்கும் நிறைய கனவுகள், விழித்ததும் மறந்து விடுவதுண்டு. மறுபடி தீவிரமாக முயன்று பார்த்தால் பாலா சொல்வதுபோல காணாமலே போய்விடுகிறது. சில எச்சரிக்கைகளும் உண்டு.

    ஒருநாள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது போக்குவரத்துக்காவலரால் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதாக கனவு. மனைவியிடம் சொல்லிவைத்தேன். (எவ்வளவு டாலர் மற்றும் சதங்களில் அபராதம் என்பதுவரை துல்லியமாக நினைவில் இருந்தது)

    அன்று மதியம் வாகனம் விபத்துக்குள்ளாகி - காரை காயலான் கடைக்கு அனுப்பியாகிவிட்டது - அபராதமும் கட்டினேன். (ஆனால் கனவில் வந்த தொகைக்கல்ல)

    ஓரிரு நாட்கள் முன்னர் இன்னும் இரு நண்பர்களுடனும் குழந்தையுடனும் தாய்லாந்து / பாங்காக் போன்றதொரு கீழை தேசத்தில் சுற்றுலா சென்று மஸாஜ் செய்து கொள்ள க்ளப் சென்று, சற்றே விலை அதிகம் என்று கண்டு ($2000 என்று கனவில்) வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வெளியே வந்து நண்பர்களோடு நடக்க சிறிது நேரத்தில் மழைவருகிறது. அப்போதுதான் குழந்தை என்னோடில்லாதது உறைக்க பகீரென்று தேட ஆரம்பிக்கும்போது பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் காரில் குழந்தை இருப்பது நினைவுக்கு வர உடனே விழிப்பு.

    என்ன சொல்ல வருகிறது இந்த கனவு என்று புரியவில்லை. கடந்த ஓராண்டாக இருக்கும் பிரச்சினை, அது தொடர்பான மன உளைச்சல், இதனால் எடுக்க நினைக்கும் முடிவினால் நேரும் இழப்பு என்பதனை இந்த சிறு எச்சரிக்கை மூலம் என் கனவு சொல்கிறதா என்று புரியவில்லை.

    சில ஆண்டுகள் முன் கண்ட கனவு ஒன்று இன்னும் நினைவில் இருப்பதற்கு காரணம் புரியவில்லை.

    ஏதோ அடர்ந்து இருண்டதொரு கானகத்தில் காணாது போகிறேன். மிகுந்த குளிரும் தனிமையும் பயமுமாய் அலைந்துகொண்டிருக்க எட்டக்கூடிய ஒயரத்தில் ஏதோ சன்னமாய் ஒரு வெளிச்சம் தெரிய ஆவலாய் அதைநோக்கி ஓடுகிறேன். பார்க்க, ஏதோ பறக்கும் தட்டு போன்றதொரு பெரும் விண்கலம் லேசான உயரத்தில் இருக்க, அது விடிவிளக்கு (அல்லது நிலவொளி) அடர்த்திக்கு ஸ்பாட் லைட் மாதிரி வெளிச்சம் பாய்ச்ச அதனடியில் அந்த வெளிச்சத்தில் ஆவலோடு நிற்கிறேன். இதமான சூட்டில் மழை பெய்கிறது. ஆனந்தமாய் நனைகிறேன். உடனே விழிப்பு வந்துவிட்டது.

    பயம், தனிமை, ஆழ்மன பதற்றம் என்றெல்லாம் சொல்கிறது என்று புரிகிறது, ஆனாலும் முழுதாக அதன் பொருள் புரிபடவில்லை, இன்றுவரை.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  11. r.kamal அவர்களுக்கு !

    இதற்கு பதில் புருஷ விரதம் நாவலிலேயே சொல்லி இருக்கிறார்.

    முடியில் ஒருவிதமான உயிர்சக்தி இருப்பதாகவும் களைய சக்தி விரயம் ஏற்படுவதாகவும்.

    இதை வைத்து மழித்தலும் நீட்டலும் வேண்டா என்ற குறளுக்கும் ஒரு விளக்கம் இருக்கும்.

    க்ருஷ்ண துளசி, மற்றபடி 'போக்குவரத்து விதிகள் தேவையா' போன்ற சிறு குழந்தைக்கும் அபத்தமென தோன்றும் கேள்விகளை ஒதுக்கிவிடுங்கள்.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete
  12. Thank you very much Krishna Tulasi.
    I was checking the blogs often.
    Its very nice to see the blog after long time.
    The posted blogs are very nice and useful for our day today life.
    pls post more blogs like this often.
    pls convey my regards to Ayya

    with regards
    sasikala

    ReplyDelete
  13. Kelvi Padhilgal migavum arumai...

    Chandru...

    ReplyDelete
  14. Iyya's answers to questions are like tracer bullets..precise, sharp & goes deep inside us. And he makes it look stunningly simple.

    Krishnatulasi, Pl explore if its possible to compile all of Iyya's Q&As into a single archive. That would be a treat!

    ...and keep up the good work!

    Best Regards,
    Arun Balaji

    ReplyDelete
  15. கிருஷ்ண துளசி மற்றும் அவரது நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

    இதுபோல் மீண்டுமொரு பதிப்பை எதிர்பார்கிறேன்..

    அன்புடன்
    ஜெய்காந்த்.

    ReplyDelete
  16. சமீபத்தில்(புது வருடம்) விஜய்/ராஜ் தொலைக்காட்சியில் அவரின் பேட்டி வந்ததாக சொன்னார்கள் அதனை எங்காவது பார்க்க முடியுமா?

    ReplyDelete