Monday, April 14, 2008

சிலை சொல்லும் செய்தி- மூன்று - எழுத்துச் சித்தரின் பார்வையில்….

தன்னுடைய எண்ணத்திற்கும், அதிலிருந்து வெளியாகும் செயலிற்கும் நேர்மையாக இருப்பவர்களே இறைத்தன்மை உடையவர்கள் ; காலங்கடந்து நிற்கக்கூடிய தகுதியைப் பெற்றவர்கள் என்பதை சொல்லும் ஒரு அற்புதமான கதையை நினைவூட்டும் சிலையைப் பற்றி எழுத்துச்சித்தர் விவரிக்கிறார். கண்ணப்ப நாயனாரின் உண்மையான அன்பைக் கண்டு பிரமிப்பதா அல்லது அந்த உணர்வை தன் கலைப்படைப்பில் மிகச் சரியாக வெளிக்கொணர்ந்த சிற்பியைப் பாராட்டுவதா….
இதோ எழுத்துச் சித்தரின் பார்வையில்….



5 comments:

  1. அலங்காரங்களும், நாடகங்களும் அற்ற எளிமையான அன்பே உண்மையான பக்தி என்பதை கண்ணப்பன் வாயிலாக உலகிற்கு எடுத்துச்சொல்ல விழைந்த சிவனார் அன்று சேக்கிழார் வாயிலாக பெரியபுராணம் எழுதச்செய்தார். இன்று அந்த உண்மையோடு கூடி பழந்தமிழர் நாகரீகத்தின் உச்சத்தையும் நம் பண்டைக்கலைஞர்களின் இறைமையோடு கூடிய கலை வெளிப்பாட்டையும் எழுத்துச்சித்தரின் வாயிலாக மீண்டும் இந்த உலகிற்கு எடுத்துச்சொல்ல விழைகிறானோ அந்த எல்லாம் வல்ல ஆடல்வல்லான். மிக நேர்த்தியான படைப்பு வாழ்க நும் பணி.

    ReplyDelete
  2. silai sollum seithil kannapparin kathi armuai. enthavida sadangu samprathaim illalmal irai thanmai adya mudum enra kannapparin kathaiai iya miga arumaiga unartrhi ullar. erandu endandalil sivalingam methuvaga marainthu iyawin mugam therium idam very superb.
    vinod selvi

    ReplyDelete
  3. நன்றி துளசி.
    உணர்வு பூர்வமாக கடவுளை இப்படி தெரிந்து வணங்கி மகிழ்கிறவர்கள் எந்தனயோ தெரியவில்லை. கருணையோடு ஐயா அவர்கள் இத்தனை ஈடுபாடுடன் இந்த தகல்வல்களை நமக்காக பகிர்ந்து கொண்டது பெரிய விஷயம். இதை கவனமாக வலை ஏற்றம் செய்ததற்கு நன்றி.
    வணக்கம்.
    அன்புடன். ஸ்ரீனிவாசன்.

    ReplyDelete
  4. கண்ணப்ப நாயனாரின் கதையை கேட்கும் பொழுது கடவுள் உண்மையான அன்பிற்கு மட்டுமே அடிமையாகிறார் என்பதை உணர்த்தியது. இதை உணர்த்திய ஐயாவிற்கு என் நன்றி.கண்ணப்பரின் கதையை சொல்லி அவரின் சிலை பற்றிய விளக்கமும் தந்தது மிகவும் நன்றாக இருந்தது. கிருஷ்ண துளசிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சடங்குகளுக்கு அப்பாற்பட்டு எளிமையான தூய அன்பினால் கடவுளைக் கண்டறிய முடியும் என்பதை சொல்வது நாயன்மார்கள் சரித்திரம். நாயன்மார்களில் ஐயாவின் மனம் கவர்ந்தவர் கண்ணப்ப நாயனார். எந்தவித பின்புலனுமில்லாத வேடன் திண்ணன் தன் நேர்மையினால் கடவுளை தடுத்தாட்கொள்ள வைக்கிறார் என்று எங்களிடம் அகமகிழ்ந்து கூறுவார்.

    திருத்தொண்டர் புராணமும், திருவிளையாடற்புராணமும் ஐயாவின் எழுத்துநடையில் படிக்க வேண்டும் என்ற எங்கள் ஆசையை கோரிக்கையாக அவரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

    இறையருள் துணை நிற்க.

    உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete