பாலகுமாரன்
பிரசுரிக்கப்பட்ட நாவல்கள்
230 க்கும் மேல்.
பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகள்
100 க்கும் மேல்.
வசனகர்த்தாவாக பணியாற்றிய திரைப்படங்கள் :
நாயகன் , குணா , பாட்ஷா , ஜென்டில்மேன் , காதலன் , செண்பகத் தோட்டம் , கிழக்குமலை, மாதங்கள் ஏழு, ரகசிய போலீஸ், சிவசக்தி, உல்லாசம், வேலை, ஜீன்ஸ் , முகவரி, உயிரிலே கலந்து , சிட்டிசன், மஜ்னு, காதல் சடுகுடு, கிங், மன்மதன், கலாபக்காதலன், புதுப்பேட்டை, வல்லவன்।
இயக்குனர் சிகரம் திரு।கே. பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய திரைப்படங்கள் :
சிந்து பைரவி , புன்னகை மன்னன் , சுந்தர சொப்பனகளு (கன்னடம்)
இயக்குனராகப் பணியாற்றிய திரைப்படம் :
இது நம்ம ஆளு
“மன்னர் பாஸ்கர சேதுபதி” என்ற தொலைக்காட்சித் தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
திரைப்பட விருதுகள் :
சினிமா எக்ஸ்பிரஸ் விருது - குணா (1993)
தமிழக அரசு விருது (சிறந்த வசனகர்த்தா) - காதலன் (1995)
இலக்கிய விருதுகள் :
இலக்கிய சிந்தனை விருது - “ மெர்க்குரிப் பூக்கள்” (1980)
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது – “இரும்பு குதிரைகள்”(1985)
தமிழக அரசு விருது ( சிறுகதைத் தொகுப்பு – இரண்டாம் பரிசு ) -
“ கடற்பாலம்” (1989)
தமிழக அரசு விருது ( சிறுகதைத் தொகுப்பு – முதல் பரிசு ) –
“சுக ஜீவனம்” (1990)
இலக்கிய சேவைக்காக தமிழக அரசு வழங்கிய பட்டம் -
“ கலைமாமணி” (2007)
மற்ற விருதுகள் :
- “ சிந்தனைச் செம்மல்” - சென்னை சிங்க குழுமம் அளித்த கெளரவ பட்டம். ( 1994 )
-“ ஆன்மீக எழுத்துலக வித்தகர்” – ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அளித்த விருது
தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகே உள்ள பழமார்நேரி என்ற
கிராமம் இவரது சொந்த ஊர். பள்ளி இறுதி வரை தேறிய பாலகுமாரன் பின்பு தட்டச்சும்,
சுருக்கெழுத்தும் கற்று தேறி தனியார் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணி
துவங்கி,ஒரு டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பதவி வகித்தவர். அலுவலில்
சேர்ந்த காலகட்டத்தில் (1969) கவிதைகள் எழுதத் துவங்கிய பாலகுமாரன் சிறுகதைகளில்
நாட்டம் செலுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார். சுமார்
இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் இதுவரை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் நாவல்கள்
விற்பனையில் முதலிடம் கொண்டவை।
பழந்தமிழ் இலக்கியப்பயிற்சி பாலகுமாரனுக்கு அவர் தாயார் தமிழ் பண்டிதை அமரர் சுலோசனா அவர்களால் கவனமுடன் தரப்பட்டது. முப்பத்தி ஆறு வருடம் ஆசிரியராக இருந்த
தாயின் துணையே பாலகுமாரன் எழுத்தில் சிறந்து விளங்க உதவிற்று। இவர் தனது நூல்களில் பாத்திரங்கள் வாயிலாக தேவார, திருவாசக ,பிரபந்த பாடல்களையும், அதன்
விளக்கங்களையும் அடிக்கடி எழுதி வருகிறார்.தகுந்த வடிவில் பழந்தமிழ் இலக்கிய பெருமைகளை நாவல்களின் ஊடே சொல்கிற போது அவைகளைப் பயிலும் ஆவல் மக்களிடையே ஏற்படுகிறது.
இவர் தன் நாவல்களில் குடும்பம் என்பதின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களை மதிக்க வேண்டிய அவசியம் குறித்தும் , இதற்காக தியானம் ,மூச்சுப்பயிற்சி போன்றவை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் ,தனி மனித மேம்பாடே சமூக மேம்பாடு என்கிற விளக்கமும் எளிய இனிய நடையில் எழுதியிருக்கிறார்.
இது மட்டுமன்றி கதைக்களன்களாய் பல்வேறு தொழில்களை ஆராய்ந்து , உள்ளது உள்ளபடியே
விளக்கும் திறமை இவரிடம் உண்டு. லாரி போக்குவரத்து ,விமான நிலையம் ,காய்கறி
மார்க்கெட்,தங்க நகை வியாபாரம் என்று பெரிய துறைகளை படம் பிடித்துக் காட்டுவது
போல் எழுதுவது,மக்களிடையே சமூக விழிப்பைத் தந்து சகமனிதர் வாழ்க்கையை
தெரியப்படுத்துகிறது.