Sunday, February 17, 2008

குதிரை சொன்ன புதிய வேதம் - எட்டாம் பாடம்

இதுவரை வெளிவராத, எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் தந்த குதிரை கவிதையின் எட்டாம் பாடம் இதோ உங்களுக்காக………



குதிரைகள் குளம்பினூடே
மண்கட்டி சிக்கிக் கொள்ளும்
மண்கட்டி உள்ளே அழுந்த
குதிரைகள் நொண்டத் துவங்கும்
நடையிலே கவிதை காட்டும்
குதிரைகள் நொண்டலாமா

கங்காரு குதித்தல் போல
குதிரைகள் ஓடலாமா
ஒருபக்கம் மழித்த முகமாய்
சிரிப்பதில் அழகு உண்டா
மொழி தெற்றிப் பேசுபவர்
கவிதையை யாரோ ரசிப்பர்

கூன்தென்னை குட்டை ஆலம்
நதி ஒதுங்கி சேறாய் நிற்றல்
வலைசிக்கி தவிக்கும் காக்கை
எத்தனை அவலம் இங்கே

குதிரையின் பின்னங்காலை
வெடுக்கென இழுத்துப் பற்றி
ஈரமண் அகற்றும் வித்தை
அறிந்தவர் எனக்குச் சொன்னார்
பிள்ளையை பிரித்துக் கொடுத்தால்
கர்ப்பிணித்தாய் வணங்கல் போல

கால்சுத்தம் செய்தால் குதிரை
கண்களால் நன்றி சொல்லும்
பேச்சிலே நன்றி சொன்னால்
பொய்யாக இருக்கக் கூடும்
கண்ணிலே நன்றி காட்ட
நெஞ்சிலே வந்து தைக்கும்
-இது
குதிரைகள் எனக்குச் சொன்ன
வேதத்தின் எட்டாம் பாடம்.

6 comments:

said...

“பேச்சிலே நன்றி சொன்னால்
பொய்யாக இருக்கக் கூடும்
கண்ணிலே நன்றி காட்ட
நெஞ்சிலே வந்து தைக்கும்” - சத்தியமான வார்த்தைகள்.

எதார்த்தங்களோடு இயைந்து சென்று, அருகிருந்து ஆற்றுப்படுத்தி மனிதத்தை மேம்படச்செய்யும் எழுத்துக்கள், கரையில் கால் நனைக்கும் அலைகளாய் இருந்தாலும் பாதகமில்லை. தமிழ் அறிவதோடு “தானும்” அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பவர்களுக்கு திரு.பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கள் காட்டும் இலக்குகளை தேடல் உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என்பது என் எண்ணம். தொடர்ந்து செல்லுங்கள் தங்கள் பயணிக்கும் பாதை மிக மிக நீளம் அதனோடு பயணிக்க ஆவலுள்ளவர்களும் தேடல் உள்ளவர்களும் அதிகம் உண்டு.

Nothing is more simple than greatness; indeed, to be simple is to be great. - Ralph Waldo Emerson

said...

Kavidhai is very good.

பேச்சிலே நன்றி சொன்னால்
பொய்யாக இருக்கக் கூடும்
கண்ணிலே நன்றி காட்ட
நெஞ்சிலே வந்து தைக்கும்”

Above paragraph is very good. We are very eagerly waiting for the next post because each and every post is diffrent.

Anbudan
Baskar.S

said...

ITS AWESOME......

said...

நன்றி கிருத்திகா

said...

நன்றி பாஸ்கர். இன்னும் வித்தியாசமாக செய்ய முயற்சி செய்கிறோம்.

said...

thank you sivakumar.