Monday, April 21, 2008

திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில்




ஐயா, திபெத் ஒரு சூட்சமமான தேசம் என்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது ஒரு வாக்கியம் சொல்லிருக்கிறீர்கள். திபெத்தில் அப்படி என்ன சூட்சமம் இருக்கிறது?




திபெத், உட்கார்ந்து தியானம் செய்வதற்கு இயற்கை அளித்த அற்புதமான இடம். திபெத்தினுடைய உயரமும், மலைச் சரிவும், குகைகளும், தட்ப வெப்ப நிலையும் ஆ ழ்ந்து உள்ளுக்குள்ளே அமர்வதற்கு உதவி செய்யும். வெயிலடித்தால் மின்விசிறி வேண்டும். ஆ னால் குளிர் காற்று வீசுகின்ற திபெத்தில் ஒரு கம்பளி இருந்தால் போதும். அங்கு பசி குறைவாக எடுக்கும். மலை மீது ஏறி இறங்குவதால் நுரையீரல்கள், ஹிருதயகோசம் மிக நன்றாக இயங்கும். இவை இரண்டும் நன்றாக இயங்குவதால் ரத்த ஓட்டம் நல்ல துடிப்போடு இருக்கும். வெயிலால் ஏற்படுகின்ற ரத்தக் கொதிப்பு திபெத்தில் இருக்காது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிகம் போக்குவரத்து இல்லாத இடமாக இருப்பதால் சப்தம் குறைவு. அது தவிர இந்த இடத்தினுடைய செள க ரியத்தால் பரம்பரை பரம்பரையாக பலர் அந்த இடத்தில் இடையறாது மந்திர உச்சாடனம் செய்து அந்த இடத்தை பலப்படுத்திருக்கிறார்கள். எனவே சுமாராக தியானம் தெரிந்தவர் அங்கு போனாலும் ஆ ழ்ந்து இறுக்கி உட்கார்ந்து விட முடியும். மந்திர ப்ரயோகம் என்று தியானத்தில் ஒரு நிலை உண்டு. ஒரு இடம் நோக்கி மந்திரத்தால் சில காரியங்களை செய்து கொள்ளலாம். அப்படி மந்திர ப்ரயோகம் செய்வதால் நல்லது, கெட்டது நடைபெறலாம். இவ்வளவு வலிமை இருந்தும் சீனாவிடம் உதவி வாங்கிக் கொண்டிருக்கிறதே அந்த தேசம் என்று தோன்றுகிறதா. இந்தியாவின் ஈசானியத்தில் இருக்கும் திபெத்தில் சீனா தவறாக கால் வைத்து விட்டது. திபெத்தை அடக்க முடியாது. திபெத்தில் அத்து மீற முடியாது. திபெத்தில் ஆளுமை எந்த விதமாகவும் செய்துவிட முடியாது. அங்கே தவறாக நுழைந்தவர்கள், தப்பாக இருப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சீனா தாக்கப்படும் என்பதற்கு திபெத்தில் நடந்த சில விஷயங்கள் சொல்கின்றன. இஸ்லாமியர்களோ, பிரிட்டிஷ்காரர்களோ திபெத்தை சீர் குலைக்கவேயில்லை. சீனர்கள்தான் முதன் முதலில் செய்து இருக்கிறார்கள். அனுபவிப்பார்கள்.

18 comments:

said...

மிகுந்த நன்றி.
ஐயாவின் இந்த ஆழமான ஒரு பார்வையை கேட்டு பெற்று பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. விஷயத்தின் அடி நாதம் அதனை தொட்டு அதன் முழு பரிமாணத்தை வெளியிட்டிருக்கிறார் அவர். என்ன நடக்கிறது என்பதை அது எந்த பின்புலத்திலே நடக்கிறது என்பதை முழுசாய் புரிந்துகொண்டதை மட்டுமல்லாமல் என்ன நடக்கப்போகிறது என்பதையும் சூசகமாய் அவர் விவரித்திருக்கும் அந்த பாங்குக்கு எங்கள் நமஸ்காரம்.
மிகுந்த நன்றி துளசி.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
ஸ்ரீனிவாசன்.

said...

From this post we are able to understand the power of tibet and the levels of meditation(MANTHRA PRAYOGA).

IT is nice to know china will pay for his autocratic attiude.

said...

Iyya Tibeth patriya padhil migavum arumai.

Chandru...

said...

நாம் சாதாரணமாக புரிந்து கொண்டிருக்கும் பல விஷயங்களில் ஐயாவின் வித்தியாசமான விளக்கங்கள் அவருடைய பரந்துபட்டு பார்க்கும் திறனைக் காட்டும். வியக்க வைக்கும். நாம் நினைத்து கூட பார்க்காத கோணத்தில் இட்டுச் செல்லும் அவருடைய வார்த்தைகள் என்றென்றும் ரசிக்கத்தக்கவை தான்.

நன்றி ஸ்ரீனிவாசன்.

said...

" For every action there is an equal and opposite reaction."

I feel that this is not only newton's law but nature's law established by nature again and again. It is quite unfortunate that it is not understood by man without personal experience.

Autocracy will never bring peace and prosperity. History will repeat itself and China is not an exception.

thank you baskar

said...

திபெத் பற்றி இவ்வளவு விஷயங்களை தெரிவித்ததுஅருமை. புதிய தகவலாகவும் அதேசமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. இதை படித்த பொழுது திபெத்திற்கு போய் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.மிகவும் நன்றி.

said...

வருக சரோஜா

இயற்கை தந்திருக்கும் அமைதியைப் சுதந்திரமாய் அனுபவிக்க இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமோ.......

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

said...

எந்த அடிப்படையில் சீனா தாக்கப்படும் என்று பாலா சொல்கிறார் என்று தெரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடும் அளவு, அமெரிக்காவில் விற்கப்படும் (உலக அளவில் கூட) உற்பத்திப்பொருள்களின் பொருளாதாரத்தை பெருமளவில் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கும் - மிக வல்லமையான ராணுவம், பொருளாதாரம், சந்தை, அறிவியல் என்று நிற்கிறது சீனா.

இனி உலகத்தின் போக்கை நிர்ணயிக்கப்போகும் பெரும் அரசாய் அசுரத்தனாமாய் வளர்ந்துகொண்டிருக்கும் சீனா தாக்கப்படும் என்பது சற்று நம்ப இயலாததாக உள்ளது.

அன்புடன்
முத்துக்குமார்.

பி.கு : "ஐயா", "எழுத்துச்சித்தர்" என்றெல்லாம் இந்த திராவிட மேடை பாணி பட்டங்களை விடுத்து திரு.பாலா என்று அவரை விளிப்பது நன்றாகவும் சற்று நெருக்கமாகவும் இருக்கிறது என்பதும் அதில் எவ்வித மரியாதைக்குறைவுமில்லை என்பதும் என் தனிப்பட்ட எண்ணம்.

said...

எந்த ஒரு விஷயத்தின் அடிநாதத்தையும் வெறும் அரசியலாகவும், செய்தியாகவும் நோக்காமல் அதன் மறுபக்கத்தை அலசித்தரும் எழுத்துச்சித்தரின் பதில்கள் வெகு கூர்ந்த தொலைநோக்குப்பார்வைகளையும் ஆழ்ந்த புரிதல்களையும் வாசகனிடம் ஏற்படுத்துகிறது. ஆளுமை பற்றி மட்டும் பேசாமால் அதை வெற்றி கொள்ளத்தேவையான மனோ பலத்தை எங்கணம் உருவாக்கிக்கொள்வது என்பதையும் கோடிட்டு காட்டுகிறது ஐயாவின் பதில்கள். மிக்க நன்றி..

said...

வெறுமே எழுத வேண்டுமே என்று எழுதாது படிப்பவரையும் தன் அனுபவத்துடன் இணையாக இட்டுச் செல்லும் வலிமையான எழுத்து ஐயாவின் எழுத்து. மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர் தேர்ந்தெடுக்கும் விஷயங்களும், வாசகரின் பார்வையிலிருந்து அவருக்கு தேவைப்படும் விளக்கங்களைத் தருவதும் தான் அவர் எழுத்தின் சிறப்பு.

தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் தர முயற்சிக்கிறோம்.

நன்றி கிருத்திகா....

said...

முத்துகுமார், உங்கள் கேள்விக்கு ஐயா கொடுத்த பதில் -

" சீனா தாக்கப்படும் என்பதற்கு அர்த்தம் போர் மூளும் என்பதல்ல. ஒலிம்பிக் நடக்கும் போது அங்கங்கே நடக்கும் கலவரங்களாகவும் இருக்கும். இதற்குக் காரணம் ரகசியமாகக் கனன்று கொண்டிருக்கும் கம்யூனிஸ எதிர்ப்புப் பட்டாளமாகவும் இருக்கலாம். அல்லது எங்கு விழா நடந்தாலும் சீர் குலைக்கும் மதவாத வன்முறைக் கும்பலாகவும் இருக்கலாம். திபெத் ஒரு சூட்சும பூமி. அங்கு வன்முறை செய்தது தவறு. இதற்கு விளைவுகள் உண்டு. என்ன ஆதாரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் அனைவரும் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டியது தான். இதை நான் தொடை தட்டி ஆர்ப்பரிக்கவில்லை. என் உள்ளுணர்வில் ததும்பி வழிந்ததை சொல்கிறேன்."


தவிர, திரு.முத்துகுமார், நீங்கள் ஐயாவை "திரு.பாலா" என்று அழைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை.

said...

I second Muthukumar's comments.... i think bala has been isolated from his readers with such Title's .. and

>>> இனி உலகத்தின் போக்கை நிர்ணயிக்கப்போகும் பெரும் அரசாய் அசுரத்தனாமாய் வளர்ந்துகொண்டிருக்கும் சீனா தாக்கப்படும் என்பது சற்று நம்ப இயலாததாக உள்ளது <<<<

yeah.. true

said...

என் சிறு எதிர்வினையையும் திரு.பாலா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று அவரது பதில் வாங்கி இங்கு பதிவு செய்த உங்கள் பாங்கு, நீங்கள் ஒவ்வொரு பதிவரது பின்னூட்டைத்தையும் எவ்வளவு சிரத்தையோடு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. மிகுந்த மகிழ்ச்சியும் என் மனமார்ந்த நன்றிகளும்.

திரு.பாலா அவர்களது பதிலை நானும் ஒத்துக்கொள்கிறேன். நானும் 'எங்கே ஆதாரம் ?' என்றெல்லாம் கொக்கரிக்கவில்லை. அறிந்துகொள்ளும் ஆவலிலேயே கேட்டேன். மற்றபடி சீனா தவறென்றால் தண்டனை உண்டு எப்படியேனும் என்பதை நானும் புரிந்துகொள்கிறேன். பாலாதான் அடிக்கடி சொல்லியிருக்கிறாரே, 'வினைக்கு எதிர்வினை உண்டு, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்று !

மறுபடி என் நன்றிகள் உங்களுக்கும் மதிப்பிற்குரிய நமதன்பு பாலா அவர்களுக்கும்.

அன்புடன்
பொன்.முத்துக்குமார்

பி.கு : குமுதம் இணைய இதழில் வெளிவந்த திரு.ஞானியுடனான நேர்காணல் நன்றாக வந்துள்ளது என்று தெரியப்படுத்தவும்.

said...

அசுரத்தனமாக வளர்ச்சியடையும் எந்த ஒரு விஷயமும் ஒரு சிகரம் தொட்டு கீழிறங்குவதை நாம் டைனாசரிலிருந்து சொவியத் சோஷலிச நாடுகளின் பிரிவு வரை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அழியாத் தன்மையுடைய பொருள் என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லை என்பதே அதன் சிறப்பாக இருந்து வருகிறது.

மாற்றம் என்பது மட்டுமே இந்த உலகில் என்றும் மாறாத உண்மையாக இருக்கும் பட்சத்தில் சாத்தியமில்லை என்று எதை அருதியிட்டு சொல்வீர்கள் யாத்திரீகன்...

மேலும் நீங்கள் ஐயாவை எப்படி அழைத்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.

" A ROSE IS A ROSE BY WHICHEVER NAME YOU CALL"

said...

உங்கள் தெளிவான புரிதலுக்கும், உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் நன்றி திரு.பொன்.முத்துகுமார்

வேலைபளு, உடல்நலம், நேரத்தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஐயா மற்ற வாசகர்களைத் தொடர்பு கொள்ள முடியாத குறையை ஓரளவு தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் இந்த வலைத்தளம் வாசகர்களின் நியாயமான கேள்விகளை ஐயாவின் கவனத்திற்குக் கொண்டு சென்று பதில் பெற்றுத் தர தொடர்ந்து முயற்சி செய்யும்.

குமுதம் பேட்டி பற்றிய தங்கள் பாராட்டுகளை ஐயாவிடம் தெரிவித்து விட்டோம்.

said...

Vanakkam Thulasi.
Now CHINA has been well attacked.
Not by external forces.
But by internal combustion from Earth.
Is this the punishment in a form, that Aiya had hinted earlier ?
I consider this another proof for cause & effect.
As an OBSERVER, taking guidance from seers like Aiya, we may learn a LOT for our life and peace of mind. Just thought I shall share with you my recollecting this issue, when I watched the news early this morning.
Thanks a Lot and God Bless.
affectionately,
V. Srinivasan.

said...

இன்றைய சீன பூகம்பத்தைக் கேள்விப்பட்டதும் எழுத்துச்சித்தரின் திபத் குறித்த பார்வையும் அதன் தொடர்பாக எழுந்த சீனா பற்றிய கேள்விபதில்களும் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாததாகிறது. மிகவும் துக்ககரமான இந்த சூழ்நிலையில் ஐயாவின் சூட்சுமப்பார்வையின் தீட்சணயத்தின் வீர்யம் புரிகிறது. இது போலவே முன்பு சுனாமி குறித்து அதற்கு சில வாரங்களுக்கு முன் தனது வாழையடி வாழை கதையில் குறிப்பிட்டிருந்ததும் பின் அந்த சோகமான நிகழ்விற்குப்பின் அது குறித்த மிகப்பெரும் விகசிப்பு எழுந்த வேளயில் அதைப்பற்றி அதிகம் வெளிச்சமிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளாத ஐயாவின் பெருந்தன்மை பலரும் அறியாதது. என்ன சொல்ல அவர் சொல்வது போல் தானாய் காட்டிக்கொண்டால் ஒழிய அறியமுடியாததான அற்புதங்கள் பலவற்றில் இவரும் ஒன்றோ....

said...

இன்று என் மனைவியிடம் சீன பூகம்பத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, ஐயா அவர்கள் திபெத் மீதான சீனாவின் அடக்குமுறை பற்றி முன்குறித்திருந்தது தற்செயலாய் ஞாபகத்துக்கு வர ஒரு கணம் ஆடிப்போனேன். உங்கள் எழுத்துக்களை வாசிக்கின்ற பெரும்பேறு கிடைத்ததையே சிலாக்கியமாக உணருகிறேன்.. மிக்க நன்றி ஐயா...! சக பதிவாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் இப்போதாவது தெளிவு பெற்றிருப்பார் என நம்புகிறேன்...!!