Sunday, July 20, 2008

சிலை சொல்லும் செய்தி - நான்கு

ஐயா, எப்பொழுதும் சோழர்காலத்து சிலைகள் பற்றியே பேசுகிறீர்கள். உங்களுக்கு வேறு தேசத்து சிலைகள் பற்றி எதுவும் தெரியாதா?



உங்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அதனால் என்னை தெரியாதா என்று கேள்வி கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்ததை, அதிகம் தெரிந்த உங்களுக்கு சொல்கிறேன்.


படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திற்கு பலமுறை போயிருக்கிறேன். ஹைதராபாத்து நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிலிம்சிட்டியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், நேரம் கிடைக்கும்போது ஹைதராபாத்திற்கு வந்து அங்குள்ள சலார்ஜங் மியுசியத்திற்கு ஓடிவிடுவேன். சலார்ஜங் மியுசியத்தில் 'வேல் ஆப் ரபாக்கா' முகத்திரை அணிந்த ரபாக்கா என்கிற பெண்ணின் சலவை கல் சிற்பம் இருக்கும். இருநூறு வருடங்களுக்கு முன்பு செதுக்கிய ஒரு சலவை கல் சிற்பம். முகத்திரை அணிந்த அந்த பெண்ணின் மூக்கு, மூக்கின் குழி, கண்ணின் இமை, கண்ணின் விழிப்பு, கன்னம், உதடு என்று தெளிவாக தெரியும். முகத்திரையும் தெரியும், முகத்திரைக்கு உள்ளுக்குள் இருக்கிற அமைப்புகளும் தெரியும். எப்படி ஒரு சிற்பி இதை செதுக்கினான் என்று எனக்கு புரியவே இல்லை. சலவைகல்லின் காவியம் 'வேல் ஆப் ரபாக்கா'. தயவு செய்து ஹைதராபாத் போனால், கோவில்களுக்கு அப்புறம் போங்கள். சலார்ஜங் மியுசியத்தில் உள்ள இந்த சிலையை மட்டும் பார்த்துவிட்டு, நமஸ்கரித்து விட்டு வாருங்கள். தேவதையா என்று கேட்காதீர்கள். அற்புதமான கலைப் படைப்புகள் எல்லாமும் தேவதைக்கு சமானம். அதை படைத்தவன் கடவுளுக்கு சமானம்.

5 comments:

said...

Thank you and God Bless.
Very nice to know.
Eagerly awaiting the posts in your Blog.
Thanks a Lot.
Anbudan,
Srinivasan.

said...

எதையும் மிக நுனுக்கமாக பார்த்து வியந்து அதன் சிறப்பை எடுத்துக்கூறும் எழுத்துச்சித்தரின் அற்புதாமான வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று.. மிக்க நன்றி எங்களுக்காக இதை பெற்றுத்தந்தமைக்காக...

said...

Vanakkam,
Namaskaram to Iyya. Really very very nice. Thanks a lot krishna thulasi.
-Rekhamanavazhagan-

said...

எட்டு வருடங்களுக்கு முன் என் சகோதரன் இந்த சிலையை காண்பிப்பதற்காகவே சாலர் ஜங்க் காட்சியகத்துக்கு அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது. உண்மையில் அந்த சிற்பி தெய்வத்தின் வரம் பெற்றவனாக இருந்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு கைவண்ணத்தை வேறெங்கும் கண்டதாக யாரும் குறிப்பிட்டதாகக் கூட நினைவு இல்லை. நன்றி

said...

என் இனிய குரு பாலகுமாரனின்...

பேசுகிறேன் படித்தேன்...என் வாழ்க்கை அவரால் மாற்றமடைந்தது..

இன்றைய என் வாழ்க்கை அவரின் எழுத்துக்களால் வளமடைந்தது அவரின் புத்தகம் என்னை வழி நடத்தியது..

அவரின் புத்தகம் படிக்க படிக்க என்
தனிமை அதிகரித்தது...
அருகில் இருப்போரின் முகம் பார்த்து
புரிந்து கொள்ள முடிந்தது...
உன்மையான பேச்சு பொய்யான பேச்சு
புரிந்து கொள்ள முடிந்தது...

சமிபமாக அவரின் " உடையார்" நாவலை படித்தேன்...படித்த சில மாதங்களாக....
மனம் எதுவுமற்று... போனது....

வாழ்க்கையை வாழ .....
வாழும் வாழ்க்கைய் தெரிந்துகொள்ள

படியுங்கள்....பாலகுமாரன்..
புத்தகங்களை....வணக்கம்

என்றூம் அன்புடன்,

கிருஷ்ணன்