Friday, May 2, 2008

சில சந்தேகங்கள் – எழுத்துச்சித்தரின் விளக்கங்கள்

எழுத்துச்சித்தரின் பிரார்த்தனைப் பற்றிய பதிலுக்கு எதிரொலியாய் வாசகி சந்தியா எழுப்பிய “ பூஜை ஏன் செய்ய வேண்டும்.கடவுள் பெயரை ஜபித்தால் போதாதா.பூஜை முதலியவைகளை செய்ய வேண்டுமா” என்ற கேள்விக்கு ஐயாவின் பதில் இதோ…….


சந்தியா அவர்களுக்கு வணக்கம்.

உங்களுடைய கேள்வி மிக நியாயமான கேள்வி. இதுவரை இந்தக் கேள்வியை என்னிடம் யாரும் கேட்டதில்லை. ஆனால் நீங்கள் பிரார்த்தனை செய்வது வேறு, பூஜை செய்வது வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அல்லது பிரார்த்தனை என்பதை மனதோடு செய்வது, பூஜை என்பதை விமர்சையாக செய்வதும் என்றுமாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பிரார்த்தனை செய்வது என்பதை கூர்மையாக்கும் முயற்சியே பூஜை . அதாவது பூஜை என்பது பிரார்த்தனையை உள்ளடக்கியது. பூஜை என்பது பிரார்த்தனையை உள்ளடக்கியதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அர்த்தமும் இல்லை. வெறுமே இறைவன் புகழை பாடக்கூடிய, வெறுமே எந்தப் பிரார்த்தனையும் இல்லாமல் இறைவனை துதிக்க கூடிய விஷயமாகவும் இரருக்கலாம்.

பிரார்த்தனை செய்கிற போது மனம் ஒருமுகப்படாமல், வேறு ஏதேனும் நினைப்போடு இப்படி இருந்தால் தேவலாம் என்று அரைகுறையாக எண்ணாது எனக்கு இன்னாருடைய சுகமும், வளர்ச்சியும் முக்கியம். என் குழந்தைகள் இந்த உலகை ஆளக்கூடிய வல்லமையராக விளங்க வேண்டும் என்ற பிரார்த்தனை இருப்பின் அது எவ்வளவு பெரிய விஷயம். அந்த பிரார்த்தனை பலிக்க வேண்டுமாயின் எத்தனை கூர்மையாக உள்ளுக்குள் பார்க்க வேண்டும். அந்தப் பிரார்த்தனையை வலுப்படுத்துவது, நல்ல அஸ்திவாரம் போட்டு பலமாக எழுப்புவது என்பதை தான் பூஜை செய்கிறது.


இதோ என் குழந்தைகளுக்காக, அவ ர்களின் வல்லமைக்காக நான் இந்தப் பூஜையை செய்கிறேன். இம்மாதிரியான அஷ்டோத்திரத்தை சொல்கிறேன். இம்மாதிரியான அபிஷேகத்தை செய்கிறேன். இம்மாதிரியான பூக்களைப் போடுகிறேன். இம்மாதிரியான மூலமந்திரத்தை சொல்கிறேன் என்று ஒரு அழகிய, அமைதியான நியமத்தை ஏற்படுத்திக்கொண்டால் உள்ளுக்குள்ளே அந்தப் பிரார்த்தனை என்கிற எண்ணம் வலுப்படுகிறது. உங்கள் எண்ணம் வலுப்பட்டால் அது செயலாக மாறியது போலத்தான். எண்ணம் வலுப்படவே பூஜை உதவி செய்கிறது. பிரார்த்தனை வலுப்படவே பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. பிரார்த்தனையின் வெளிப்பாடு, செயல்பாடு பூஜை என்று புரிந்துக்கொள்ளுங்கள். ஆனால் பிரார்த்தனையோடு தான் பூஜை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

8 comments:

said...

அன்புள்ள துளசி.
வணக்கம்.
மீண்டும் நன்றி.
இன்னமும் தெளிவாக புரிந்து மனதிலே தக்கவைத்துக்கொள்ள இந்த விளக்கம் வசதி செய்கிறது.
ஐயாவுக்கு எங்கள் அன்பான நமஸ்காரங்களை சொல்லவும்.
" இவர் இதை இப்படி தப்பாக புரிஞ்சுண்டிருப்பரோ " என்கிற கருணையின் வெளிப்பாடாக அருமையாக ஐயா இதை முனைந்து இங்கே இப்படி விளக்கியிருக்கிற அந்த அன்புக்கு வணங்கி நமஸ்கரிக்கிறேன்.
அறுபது எழுபது வருஷமாக இப்படி இந்த ஆழமான ப்ரர்த்தனையுடன் மாயவரம் வீட்டிலே பூஜை செய்து, தமது என்பதியிரண்டு வயசிலே, தெளிவாக பஞ்சாங்கம் பார்த்து - நல்ல திதியிலே, போனே ஏப்ரலிலே இறைவனடி சேர்ந்த என் தாத்தாவை, இன்னமும் முழுசாய் இன்று ஐயாவின் இந்த பதில் மூலம் தெரிந்து கொண்டு வணங்கி மகிழ்கிறேன்.
நமஸ்காரங்கள் .
நன்றி.
வணக்கம்.
அன்புடன்.
ஸ்ரீனிவாசன்.

said...

"உங்கள் எண்ணம் வலுப்பட்டால் அது செயலாக மாறியது போலத்தான்".

I can understand from Ayya's answer how Pooja and Prarthana helps to thought become strong and come true. It is very nice.

Thanks,
Jayapradha

said...

தினப்படி பூஜை என்பது மனதை ஒரு பழக்கத்திற்கு கொண்டுவரும் முயற்சிக்கான வழிமுறை என பலமுறை தனது எழுத்துக்களில் கூறியுள்ளார் அதை மேலும் கூர் செய்து பட்டை தீட்டித்தருகிறது இந்த வாசகியின் கேள்விக்கான பதில். மிக்க நன்றி...

said...

"உள்ளுக்குள்ளே அந்தப் பிரார்த்தனை என்கிற எண்ணம் வலுப்படுகிறது. உங்கள் எண்ணம் வலுப்பட்டால் அது செயலாக மாறியது போலத்தான். எண்ணம் வலுப்படவே பூஜை உதவி செய்கிறது."

அற்புதமான விளக்கம்!

said...

From this post we are able to understand the importance of abhishekam,archanai and Japam.

From the words of Iyya we are able to understand the importance and inbuild concept of pooja recommended by our SANATHANA DHARMA.

said...

poojai, prarthanai patriya ungal padhil migavum arumai.

Chandru..

said...

PRARTHANAI MATRUM POOJAI PATRI IYA WIN VILLAKKAM MIGA ARUMAI. PRARTHANAI ENBATHU VERU POOJAI ENBATHU VERU ENRU ENNI KONDUIRUTHA ENGALAI PONDRAVARKLIN ARIYAMAI ENNUM IRUL IYA WIN INTHA VILAKKATHINAL VILAGIATHU.NALLA QUESTIONAI THERUNTHU EDUTHA KRISHNA THULASI AVARKALUKKU ENGAL NAMASKARANGAL. VINOD SELVI

said...

Vanakkam Thulasi.
Can you please bring the following to Aiya's kind attention, when possible.
This is a reference about a film, connected with " Shree Chakram ". I came to know this and wanted to share with Aiya.
Thanks a Lot and Good wishes,
Anbudan,
Srinivasan.

The Last Mimzy (2007)

" Shree Chakram is the MAP of the Past & Future "

The siblings Noah and Emma travel with their mother Jo from Seattle to the family cottage in Whidbey Island to spend a couple of days while their workaholic father David Wilder is working. They find a box of toys from the future in the water and bring it home, and Emma finds a stuffed rabbit called Mimzy, and stones and a weird object, but they hide their findings from their parents. Mimzy talks telepathically to Emma and the siblings develop special abilities, increasing their intelligences to the level of genius. Their father becomes very proud when Noah presents a magnificent design in the fair of science and technology, and his teacher Larry White and his mystic wife Naomi Schwartz become interested in the boy when he draws a mandala. When Noah accidentally assembles the objects and activates a powerful generator creating a blackout in the state, the FBI arrests the family trying to disclose the mystery. But Emma unravels the importance to send Mimzy back to the future. Written by Claudio Carvalho, Rio de Janeiro, Brazil

This was a very well written film about two young and quite brilliant children. They have a frantic mother and a somewhat aloof father. But the story ties them together well. If you are expecting this to be a simple film for the young,you will be disappointed. My children loved it. The mathematics and science are brilliantly weaved into this story of everything good and pure about us, or rather, what could be. E.T. for a new generation? It really could be. I have seen where some have said that children might be a bit bored with this movie. The theater I was in wasn't full of bored children. The children I saw were on the edge of their seats; as was I.


http://www.imdb.com/title/tt0768212/plotsummary

http://en.wikipedia.org/wiki/The_Last_Mimzy