Wednesday, May 21, 2008

சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்..

சீனாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் முப்பத்தியிரண்டாயிரம் பேர் இறந்தனர். பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18/5/2008 அன்று மீண்டும் 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து விட்டதாகவும், அணுஆயுதம் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீன நகரான கிங்சுவான் நகரில் தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக அங்குள்ள நாய்களை கொல்ல அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிசூவான் பகுதியில் உள்ள ஏரி உடையும் கட்டத்தில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் நில அமைப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தினமலர் 19 & 20/05/2008

ஐயா,


“இந்தியாவின் ஈசானியத்தில் இருக்கும் திபெத்தில் சீனா தவறாக கால் வைத்து விட்டது. திபெத்தை அடக்க முடியாது. திபெத்தில் அத்து மீற முடியாது. திபெத்தில் ஆ ளுமை எந்த விதமாகவும் செய்துவிட முடியாது. அங்கே தவறாக நுழைந்தவர்கள், தப்பாக இருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். சீனா தாக்கப்படும் என்பதற்கு திபெத்தில் நடந்த சில விஷயங்கள் சொல்கின்றன. இஸ்லாமியர்களோ, பிரிட்டிஷ்காரர்களோ திபெத்தை சீர் குலைக்கவேயில்லை. சீனர்கள்தான் முதன் முதலில் செய்து இருக்கிறார்கள். அனுபவிப்பார்கள்.”


- திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில் – ஏப்ரல் 21 , 2008

" சீனா தாக்கப்படும் என்பதற்கு அர்த்தம் போர் மூளும் என்பதல்ல. ஒலிம்பிக் நடக்கும் போது அங்கங்கே நடக்கும் கலவரங்களாகவும் இருக்கும். இதற்குக் காரணம் ரகசியமாகக் கனன்று கொண்டிருக்கும் கம்யூனிஸ எதிர்ப்புப் பட்டாளமாகவும் இருக்கலாம். அல்லது எங்கு விழா நடந்தாலும் சீர் குலைக்கும் மதவாத வன்முறைக் கும்பலாகவும் இருக்கலாம். திபெத் ஒரு சூட்சும பூமி. அங்கு வன்முறை செய்தது தவறு. இதற்கு விளைவுகள் உண்டு. என்ன ஆதாரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் அனைவரும் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டியது தான். இதை நான் தொடை தட்டி ஆர்ப்பரிக்கவில்லை. என் உள்ளுணர்வில் ததும்பி வழிந்ததைச் சொல்கிறேன்”

- திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில் - மே 7, 2008

திபெத் பற்றி நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. திபெத்தை சீனா தொட்டது தவறு .அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தெளிவாக சொல்லியிருந்தீர்கள். சீனாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு முப்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இருபத்தியேழாயிரம் பேருக்கு மேல் காணவில்லை. உண்மையான தொகை கடைசி வரை சொல்லப்படமாட்டாது என்றும் சொல்கிறார்கள். ஒரு தேசத்தில் ஒலிம்பிக் நடக்க இருக்கின்ற நேரத்தில் இது மிகப் பெரிய வேதனை. அவமானம். இதே கருத்தை மேலும் சில வாசகர்களும் எதிரொலித்திருக்கிறார்கள். இந்த துக்ககரமான சூழ்நிலையில் இன்னும் விளக்கமாக திபெத்தைத் தொல்லைப்படுத்தியதால் சீனாவிற்கு ஏற்படும் பாதிப்புப் பற்றி சொல்ல முடியுமா ?

சீனா ஒரு சர்வாதிகார நாடு. கம்யூனிஸ்டுகள் அந்த சர்வாதிகாரத்தை தொழிலாளர் சர்வாதிகாரம் என்று சொல்வார்கள். சர்வாதிகாரம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது வெகு நிச்சயம் நசுக்கப்படும். கிழித்தெறியப்படும். இதுதான் ரஷ்யாவில் நடந்தது. விரைவில் சீனாவிலும் இந்த தொழிலாளர் சர்வாதிகாரம் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கம், மாவோயிஸம் சிதறடிக்கப்படும். இந்த சர்வாதிகாரப் போக்கு உள்ளவர்கள் அமைதியாக இருப்பவர்களை , ஆயுதங்கள் இல்லாதவரை, போர் முனைப்பு அற்றவரை பெரிதாகக் கேலி செய்வார்கள். ஆயுதங்களே சர்வாதிகாரத்தின் ஆணிவேர் என்பதால், போர் என்பதே அடக்குமுறை என்பதே சர்வாதிகாரத்தின் செயல்திறன் என்பதால் இந்த அடக்குமுறையும் ஆயுதங்களும் இல்லாதவரை அவர்கள் இ ழிவாகப் பார்ப்பார்கள்.

இ து தவிர சீன மக்களுக்கு ஒரு கலாசாரக் குறைபாடு உண்டு. தங்கள் உருவம் குறித்தும்,கண்கள் குறித்தும், நிறம் குறித்தும் அவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். அதை மீறுவதற்காக மிகுந்த உக்கிரத்தோடும், வன்முறையோடும் தங்களை நிரூபிக்கின்ற செயலுக்குத் துடிப்பவர்கள். ‘உன்னை விட நான் உயர்வு’ என்று சொல்வதற்கு மற்ற எல்லா தேசத்தினரையும் விட சீன மக்களுக்கு ஆர்வம் அதிகம். இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி சீனத்து அரசாங்கம்,அதிகாரிகள் மிகப் பலமாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தால் தான் அவர்கள் ஆக்ரமிப்பு அட்டகாசத்தை தொடர்ந்து பல இடங்களில் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த சீனர்களுக்கு ஜப்பானியர்கள் என்றால் பயம். ஜப்பானியர்களுக்கு சீனர்களை விட தாங்கள் உயர்ந்த ஜாதியினர்; உயர்ந்த வகுப்பினர் என்ற இறுமாப்பு உண்டு. ஜப்பானால் சீனா பல முறை மிகப் பலமாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. அப்படி கண்டிக்கக்கூடிய இடங்களில் சீனா வாலாட்டாது. எதிர்த்துப் பேசாது. எந்த தொந்தரவும் செய்யாது. சில சமயம் அதீத விசுவாசியாகக் கூட நடந்து கொள்ளும். ஆனால் அமைதியாக இருக்கின்ற ஆயுதம் இல்லாத திபெத்திற்குள் புகுந்து தேவையில்லாத முறையில் அவர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தார்கள். சீனா திபெத்தைக் கபளீகரம் செய்தது. உலக நாடுகள் சீனாவின் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் உதவி தேவை என்பதால் இதைக் கண்டுகொள்ளவில்லை. திபெத்தும் தன் குரலைப் பெரிதாக உயர்த்தவில்லை. தலாய் லாமாவே சீனாவுடன் சமாதானமாகப் போவதற்கே தயாராக இருந்தார்.


ஆனால் திபெத் ஆயுதம் இல்லாத நாடு அல்ல. இரும்பு ஆயுதங்களை விட , துப்பாக்கிகளை விட , குண்டுகளை விட அங்குள்ள துறவிகள் மிக வேகமானவர்கள். அடிபட்டு மிதிபட்டு ரத்தம் வழிய கிடக்கின்ற தன் தேசத்தைப் பார்த்து ஏதேனும் ஒரு இடத்தில் அவர்கள் அமைதியாக உட்கார்ந்து மன துக்கப்பட்டு மன ஒருமையோடு பிரார்த்தனைகள் செய்தால், மந்திர ஜபங்கள் செய்தால் அதன் விளைவுகள் மிக மிக மோசமானதாக இருக்கும். அது பல நூறு டாங்கிகளை விட, பல ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளை விட,போர் விமானங்களை விட மிக வலிமைப் பொருந்தியது. சீனாவிற்கு வன்மையான ஆயுதங்களோடு தான் பரிச்சயம் உண்டே தவிர இந்த வித பிரார்த்தனைகளில் ,மனம் ஒருமுகப்பட்ட மந்திரஜபங்களில், அ தன் பிரயோகங்கள் பற்றி எந்த ஞானமுமில்லை. அவைகளை வெகுகாலம் முன்பே சீனா இழந்து விட்டது. இந்த திபெத்தை மிதித்து அடக்கிய , வன்முறை காட்டிய கொடுமை இன்னும் பல மோசமான விளைவுகளை சீனாவில் ஏற்படுத்தும். சீனாவில் ஒலிம்பிக் நடத்துவது கூட ஒரு வகையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த மக்கள் தங்கள் கலாச்சாரமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தாண்டி வேறு மக்களை, வேறு கலாச்சாரங்களைத் தரிசிக்கப் போகிறார்கள். அது அடுத்தத் தலைமுறையினரிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து வெறும் வன்முறைக் கும்பலாய், வெறும் சர்வாதிகார ஆட்டமாய் சீனா இருக்க முடியாது. ஒலிம்பிக்கை நடத்த சீனா விழைவது ஒரு அகம்பாவத்தினால் தான். அது என்னென்ன விதமான உளமாறுதல்களை, உடை மாறுதல்களை சீனாவில் ஏற்படுத்தும் என்பது பற்றி ஆ ழ்ந்து சிந்திக்கவில்லை.

எளியவரை வலியவர் அடித்தால் வலியவரைத் தெய்வம் அடிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. மாஸ்கோவின் இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டதும் ரஷ்யா சிதறுண்டு போயிற்று. சீனா இதை விட மோசமான நிலையை அனுபவிக்கும்.

9 comments:

said...

எனக்கும் சீனா பற்றி சற்று பயம் கலந்த எரிச்சல் உண்டு. அதே சமயம் அவர்களின் தேவை குறித்த எண்ணங்களும் உண்டு.

முதலில் அவர்களது தேவை குறித்து :

அவர்களது மாபெரும் உற்பத்தி சந்தை உலகத்தின் பொருளாதாரத்தை பெருமளவில் நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது. இங்கே அமெரிக்காவில் JC Penny, Macys போன்ற பெரும் Shopping Mall தொடர்களிலும் சரி, நம்மூர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான Wall Mart/K Mart போன்ற கடைகளிலும் சரி, "எதை எடுத்தாலும் ஒரு ரூபா" என்று கூவி விற்கும் நம்மூர் நடையோர வியாபாரிகளுக்கிணையான "ஒரு டாலர் கடை" (One dollar shops) - களிலும் சரி .... விற்பனையாகும் பெரும்பாலான சரக்குகள் சீனத்தயாரிப்பு. இதுமட்டுமல்லாமல் பொம்மைகள், மின்னணு பாகங்கள், ஆட்டோமொபைல் பாகங்கள் இன்னபிறவும் சீன தயாரிப்புகளே. ஆடை தொழில் பற்றி கேட்கவே வேண்டாம் ...

இது அமெரிக்காவில் மட்டும் நான் பார்த்த வரையில். (சற்றே Google-ல் தேடினால் சீனா அமெரிக்காவிலும் அமெரிக்கா சீனாவிலும் செய்திருக்கும் முதலீட்டு அளவு மலைக்க வைக்கும்) நிச்சயமாய் ஐரோப்பாவிலும் இப்படித்தான் இருக்கும் என்பது என் எண்ணம்.

இவ்வாறாக உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேராக திகழ்ந்துகொண்டிருக்கும் மேற்குலக நாடுகளின் பொருளாதாரத்திற்கே பெரும் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் சீனர்களின் பொருளாதார வலிமை ஆசிய கண்டத்திற்கு நிச்சயம் தேவை. அவர்களது பொருளாதாரம் ஆட்டம் கண்டால் உலக பொருளாதாரமும் சற்று ஆடும்.

ஆக இன்றைய உலகத்திற்கு சீனா தேவை.

பயம் கலந்த எரிச்சல் :

மக்களாட்சி இல்லாத அதிபர் ஆட்சி முறையால் - மக்களுக்கோ மாற்று கட்சியினருக்கோ அதிகம் பதில் சொல்ல தேவை (accountability) இல்லை. இதனால் தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்படுவதால் நலத்திட்டங்களை நினைத்த வேகத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலும் அனுகூலமும் அவர்களுக்கு உண்டு. (பல நகரங்களை இணைக்கும் 36 கி.மீ நீளமுள்ள கடற்பாலத்தை - ஆமாம் கடற்பாலம் - நான்கே ஆண்டுகளில் கட்டி முடிக்கும் வேகத்தை நம்மூர் மேம்பால – சுழற்சி முறையில் சாலை தோண்டும் ஆசாமிகளின் மின்னல் வேகத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள்)

இதே வேகமும் ஆற்றலும்தான் பலமும் சர்வாதிகார ஆட்சிமுறையும்தான் அவர்களை பொறுப்பற்ற முறையில் அத்துமீறவும் தூண்டுகிறது.

இதன் முதல் உதாரணம் திபெத்.

இரண்டாவது உதாரணம் இந்தியாவுடனான உரசல்.

அருணாசல பிரதேசத்தில் அத்துமீறின ஆக்கிரமிப்பாகட்டும், அது சீனாவின் பகுதி என்று உறவு கொண்டாடுவதிலாகட்டும், ‘1962-ல் செய்த தவறை இந்தியா மறுபடி செய்யாது என்று நினைக்கிறோம்’ என்று ஆணவத்தோடு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுவதிலாகட்டும், வட இந்திய நகரங்களை குறிவைத்து கடலடி ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பதிலாகட்டும், மிகவும் சென்சிடிவான இந்திய அரசு இணைய தளங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து அழிக்கும் இணைய குற்றங்களில் ஈடுபடுவதிலாகட்டும், இந்தியாவில் நாசவேலை ஈடுபடும் பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் அணு ஆயுத உதவிகள் செய்துகொண்டிருப்பதாகட்டும் ….

அத்துமீறல் மட்டுமல்லாமல் அட்டூழிய ஆட்டமும் கூட.

காரணம், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அடுத்து மிக பலமான ராணுவ அமைப்பு. 11,000 கி,மீ பறந்து தாக்கி அழிக்கும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் (இந்த ஏவுகணைகளை அமெரிக்காவை குறிவைத்து நிறுத்தித்தான் “Most favoured nation” அந்தஸ்தை அமெரிக்காவிடம் பெற்றது என்று சொல்வார் ஞாநி), ஆயிரக்கணக்கான கி.மீ வீச்சுள்ள அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கிகள், உலகின் மிகப்பெரிய காலாட்படை, செயலிழந்த செயற்கைக்கோள்களை ஏவுகணை கொண்டு விண்ணிலேயே அழிக்கும் விண்வெளி பலம் …

இந்த பலம்தான் ஆசியாவின் போலீஸாக மாற நினைக்கும் திமிரை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. உலகத்தின் போலீஸாக நினைத்துக்கொண்டு அமெரிக்கா ஆடின/ ஆடி வருகிற ஆட்டம் உலகத்தில் ஏற்படுத்தின அழிவுகள் மற்றும் எதிர்மறை விளைவுகள், சீனா “ஆசிய போலீஸ்”-ஆக மாறினால் ஆசியாவில் ஏற்படும்.

சொல்லப்போனால், சீனா இப்படி தன்னிஷ்டத்திற்கு ஆடாமல் தம் பலம் உணர்ந்து மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ளுமேயானால் பலன்கள் மிக அற்புதமாக இருக்கும். மேற்கே அமெரிக்க/கனடிய மற்றும் ஐரோப்பிய நாடுகள், கிழக்கே ஆசிய கூட்டமைப்பு என்று நாடுகள் கூட்டமைப்பு அமைத்தபடி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு, ஒருவர் தவறை மற்றவர் கண்டித்து, எல்லைமீறும்போது எச்சரித்து தடுத்து நிறுத்தி என்று உலகை மிக அழகாக நடத்திச்செல்லலாம்.

ஆனால் …..

ஆக, இப்படி ஆட ஆரம்பித்திருக்கிற சீனாவை அடக்க உலகின் வேறெந்த வல்லரசும் முன்வர நினைக்காத சூழலில் இறை சக்தியே தலையில் அடித்து அடக்கி வைக்கவேண்டும்.

திபெத் விஷயத்தில் விளைவு வெகு விரைவாகவும் கண்கூடாகவும் அமைந்துவிட்டது. (திரு.பாலா இவ்விஷயத்தில் சொன்னது ஒரு prophecy போல அமைந்திருக்கிறது)

இந்தியா விஷயத்திலும் நடக்கும்; நடக்கவேண்டும்.

அன்புடன்
முத்துக்குமார்

said...

Thank you Thulasi.
Vanakkam.
I am trying to GRASP the contents of this extraordinary analysis. Thanks for your efforts. Our sincere Namaskarams to Shri. Balakumaran sir.
Anbudan,
srinivasan.

said...

Eliyorai valiyaar adithaal, Valiyorai Deivam adikkum enbadhu evallavu Sathiyamana Unmai. Iniyavadhu China idhai unarndhu Matravarai thunpuruthamal irukattum.

Chandru...

said...

ஆணித்தரமான கருத்துக்கள், உலகின் மிகவும் தொன்மையான அதேசமயம் வலிமை மிகுந்த ஆயுதமான மந்திரஜபத்தின் பலன்களை உரத்துச்ச்சொல்கிறது இந்த பதில்கள். இதை உணர்ந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் மிகப்பெறும் பொறுப்பு நம்மிடையே உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.
======"அது என்னென்ன விதமான உளமாறுதல்களை, உடை மாறுதல்களை சீனாவில் ஏற்படுத்தும் என்பது பற்றி ஆ ழ்ந்து சிந்திக்கவில்லை"====
நிகழ்வுகளைத்தாண்டி அதன் ஆணிவேரைத்தொடும் எழுத்துச்சித்தரின் துல்லியமான பார்வையை கொண்டாடி அதில் இருந்து கற்றுக்கொள்ள முடிந்தால் அது தான் நம் அவருக்குச்செய்யும் கைமாறாக இருக்கும். நன்றி

said...

/**அங்குள்ள துறவிகள் மிக வேகமானவர்கள். அடிபட்டு மிதிபட்டு ரத்தம் வழிய கிடக்கின்ற தன் தேசத்தைப் பார்த்து ஏதேனும் ஒரு இடத்தில் அவர்கள் அமைதியாக உட்கார்ந்து மன துக்கப்பட்டு மன ஒருமையோடு பிரார்த்தனைகள் செய்தால், மந்திர ஜபங்கள் செய்தால் அதன் விளைவுகள் மிக மிக மோசமானதாக இருக்கும்.**/

endha oru desam gyanigalaiyum
appavi makkalaiyum thannudaiyaa sarvadikara balathinaal kodumai padutughiradho adhu perazhivai sandhikkum idharku chinavin inraya nilai oru udharanam.

gyanigaleen vaakku poipadhillai enbadhu meendum meendhum oorudhi seiyap padugirathu.

said...

sir, Why have u stopped writing in palsuvai naval? are u wrting in other magazines (full novel or essays)

said...

I don’t know what to say because the articles, message, and Q&A in this blog is extraordinary and very informative. Really awesome...

We should say Great Thanks to Iyya.

Regards
Babu

said...

சீனாவைப் பற்றி ஐயா சொன்னதை படித்ததும் முன்பு சுனாமி பற்றி அவர் ஒரு புத்தகத்தில் எழுதியது ஞாபகம் வருகிறது.இதை அவர் உள்ளுணர்வு என்று கூறியுள்ளார். இது எப்படி சாத்தியமாகிறது? எல்லோருக்கும் சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழுகிற்து. முடிந்தால் ஐயாவிடம் கேட்டு பதில் போடவும்.

திபெத் ப்ற்றி அவர் கூறியுள்ளது பிர்மிப்பூட்டுகிறது. நம்முடைய இந்தியாவை ஞானியர்கள் என்ற எப்பேர்ப்பட்ட பாதுகாப்புவளையம் சுற்றியுள்ளது என்று நினைக்கும்பொது திகைப்பாக உள்ளது. எத்தனையோ ஞானியர்கள், குருமார்கள் பிறந்து வாழ்ந்த புண்ணிய பூமியில் இருக்கின்றோம் என்று பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இப்படிப்பட்ட உன்னதமான விஷயங்களை எடுத்துச்சொல்ல ஐயா போன்றவர் கிடைத்தது பெரும் பாக்கியம்
ஐயாவுக்கு நன்றி.

said...

பாலகுமாரன் அவர்க்ள் எழுதிய புத்தகப் பட்டியல் கண்டேன்.

1. அப்புத்தக பட்டியலை அவர் எழுதிய தேதி வரிசையில் தரமுடியுமா?

புருஷ வதம் ஏன் பட்டியலில் இல்லை> (அதை விசா வெளியி்டவில்லையோ?

2. ஒரு கட்டுரையில் (அல்லது ஒரு கேள்வி-பதில் பகுதியில்) தான் எழுதிய ஒரு நாவ்லில் வருகிற'ஒரு தந்தை/தாயின் மரணம்' பற்றிய வரிகள் தன் அம்மாவை மிகவும் பாதித்தது என்று கூறியிருந்தார்.
அது எந்த நாவல் என்று கேட்டுத் தெரிவிக்கவும்.

3. 'என்னருகில் நீ இருந்தால்' (1992)என்ற ஒரு பழைய நாவல்.
(ராஜ ராஜன் மெய்கீர்த்தி- காரி குளிப்பாகை -இடங்கை வீரன் - சரவணன்)

நெசவு நெசவு என்று அடிக்கடி ஆசிரியர் சொலலுவார். அந்த நாவலில் வரும் அழகு நெசவு நேர்த்தி முதல் தரம்.

அந்த நேர்த்தியை 'முருக வயித்தியர்' போன்ற பாததிரம் இன்றி
மீண்டும் ஒரு முறை வேறு ஒரு கதைககளத்தில் அமைத்த்க் காட்ட மாட்டாரா என்று எனக்கு இன்னும் ஏக்கம் உண்டு

அந்த நெசவை அவர் இன்று வேறு ஒரு கதைக் கள்த்தில் வைத்து நெய்தால்.. ஆஹா நினைக்கவே ஆனந்தம்.