Monday, June 2, 2008

புத்தக மதிப்புரை – “காதலாகிக் கனிந்து”மே25, ஞாயிறு – 2008 தினமலர் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகி இருக்கும் எழுத்துச்சித்தரின் "காதலாகிக் கனிந்து" புத்தகம் பற்றிய பார்வை.............
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காதலாகிக் கனிந்து… ஆசிரியர்: பாலகுமாரன், வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ், 16, வெங்கட் நாராயணா சாலை, தி।நகர். சென்னை-17 (பக்கம்:472, விலை ரூ.150)

திருவண்ணாமலையில் ஆன்மிக சான்றோர் பலர் அற்புதம் நிகழ்த்தியுள்ளனர்। சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி என வாழ்ந்த அந்த திருத்தலத்தில் யோகிராம் சுரத்குமார் அவர்களும் தங்கியிருந்து அன்பர்கள் பலருக்கு வழிகாட்டி அருள் பாலித்த அற்புதமான ஞான புருஷர்। அன்பர்கள் பலரால் விசிறி சாமியார் என நேசத்துடன் அழைக்கப்பட்ட மகானின் அன்புப் பார்வைக்கு ஆட்பட்ட பக்தர்கள் பலர், கற்றறிந்த மேதைகள், உயர் பதவியில் இருந்த நாணயமும், நேர்மையும் அணிகலனாகக் கொண்ட ஆன்றோர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதி அரசர்கள், பிரபல எழுத்தாளர்கள் என சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் அடக்கம்। படைப்பிலக்கிய வாதியாக தமிழ் கூறும் நல்லுலகில் அதிகம் அறியப்பட்டுள்ள பாலகுமாரன் அண்மைக்காலங்களில் ஆன்மிகச் சான்றோர்களின் வாழ்க்கை சரிதங்களை கதைபோல தனக்கே உரித்தான தமிழ் நடையில் எழுதி வருகிறார்। யோகிராம் சுரத்குமாரின் அன்புக்குரியவரான பாலகுமாரனின் பேனா ஒரு ஆன்மிக உரைநடை காப்பியத்தை தமிழுக்கு வழங்கியிருக்கிறது. பாலகுமாரனின் சொந்த வாழ்க்கைப்பயணம், அவர் அதில் எதிர் கொண்ட வித்தியாசமான அனுபவங்கள், அவருடைய வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவங்கள் என பக்கங்கள் வளர வளர யோகிராம் சுரத்குமாருடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு, யோகியை குருவாக ஏற்றுக்கொண்ட அவர் மனப்பக்குவம் என, பாலகுமாரனின் இதய நெகிழ்ச்சியுடன் கூடிய எழுத்துடன் நாம் நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு விடுகிறோம். ஒரு குருவுடன் ஒரு சிஷ்யனுக்கு ஏற்படும் அருளாசி அனுபவம் இந்தப் புத்தகத்தில் சிறப்பாக பதிவு செய்யப்படுள்ளது. பாலகுமாரனே குறிப்பிட்டுள்ளது போல, அவருள் புகுந்து யோகிராம் சுரத்குமார் எனும் சத்குருநாதன் தான் இந்தப் புத்தகத்தை எழுத அருள் புரிந்திருக்கிறார் என்று நமக்கும் சொல்லத் தோன்றுகிறது- - ஜனகன். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி தினமலர். மே 25 2008.புத்தகத்தின் நேர்த்தியான நெசவில் மதிமயங்கி விட்டதாலோ என்னவோ “காதலாகிக் கனிந்து” என்ற பெயரை “காதலாகிக் கசிந்து” என்று மாற்றி பிரசுரித்துவிட்டிருக்கிறார்கள். பிழை பொறுப்போமாக ..

4 comments:

said...

Kadhalaghi kanindhu kumudam bhakthiyil thodaraka vantha pozhuthu kaathirantha vaasagargalil nanum orruvan. Athu oru muzhu padhip-paka vantha pozhuthu andha puthakam yerpaduthum thaakathai unara mudigirathu.

Thina malaril vandhirukum padhipurai azhagirku azhagu serpathu pol irukkirathu.

Intha Padhipuraiyai valai pakkathil velei ittharuku megavum nanri.

said...

Thank you Thulasi.
Very Glad to know about this and shall arrange to buy one for us. Thanks for sharing. God Bless and our respects to Aiya.
Vanakkam, anbudan, srinivasan.

said...

Kadhalagi Kanindhu, Kumudam online-il padithapodhu adhu ennai kadhalagi kanidhurga
seidhadu. Podikkum pothemlam, Ayya vai ore oru dhadavaiyavadu parthu
pesivida vendum enra dhagam erpattadhu.Bagavan YogiRam Surath kumarin arulal andha
baggiyam Kidaithadhu.

Kadhalagi Kanindhu nam athamavai
thottu, Guruvai,Sathyathai, Kadaualai theda cheygiradhu.
Indha samugathin meedhu evalavu karunai kondu guruvodu thankku erpatta anubavathai,
Kadavulai unartha anubavathai, Kadavulai, ezhudhi irukkirar!! Evalavu Karunai!!

Nanri Ayya.

Sincerely
Jayapradha

said...

காதலாகிக் கனிந்து...

இந்த நாவலை எடுத்து படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எழுத்து சித்தர் வாழ்க்கையில் சந்தித்த ரணங்களெல்லாம் காலம் என்னும் கெளரவர்கள் நடத்திய
நாடகமா??.

கீதை சொன்ன கிருஷ்ணர், நீதி சொன்ன ராமர் , பகவான் யோகி ராம்சுரத்குமார்
இந்த அர்ஜுனரை அள்ளிக் கொண்டு,அணைத்துக் கொண்டு உடல் தடவி உள்ளம் தடவி
காதில் சொன்ன காதல்-கீதை இதோ கனிந்து கனிந்து....கற்கண்டாய் இனிக்கிறதே!!!

"கதிரவனின் அசைவுக்குள் காலம் நிர்ணயிக்கின்ற நாம், கடவுள் என்ற
விஷயத்தை ஆராய்வது பானைக்குள் இருந்த தவளைகள் வானம் பற்றி
பேசுவதுபோல நகைப்புக்குரியது.ஆனால் தவளைகள் பேசத்தான் செய்யும்"..--- என்று ஆரம்பிக்கும்
இந்த நாவலை அய்யாவின் விரல்களாக எடுத்துக் கொண்டு அதை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பியுங்கள்!
உங்கள் பிழைகளெல்லாம் களைந்து போகும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இந்த நாவலில் வழி உண்டு.

தான் கண்ட கடவுளை, கண்ணாடி போல உள்ளதை உள்ள படி சொல்லி..... உவக்க வைத்து..
வியக்க வைத்து.......ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பாடம் சொல்லி........அய்யா அவர்கள் எழுதிய
எழுத்து ஒவ்வொன்றும்படிக்கும் இதயங்களை பசை போல ஒட்டிக்கொள்ளும்.

I can assure onething! In our Life, eachone of us come across so many probelms.
if you happened to face any problem..Just read..anyone page of this
divine novel "காதலாகிக் கனிந்து..."..Definitely,You will get the solution for your life upfront!!

--Natarajan
Frankfurt,Germany