Tuesday, June 30, 2009

குருவா ? அனுபவ அறிவா ?

ஐயா, குரு அவசியமெனில் என் அனுபவ அறிவால் என்ன பயன்?

எது உங்களது அனுபவ அறிவு ?


உங்களுக்கு நேற்று ஒருவரை பிடித்திருக்கிறது. இன்று அவரை பிடிக்கவில்லை. நீங்கள் நேற்று ஒரு இயக்கத்தில் சேர்ந்திருப்பீர்கள். இன்று வேறு இயக்கத்திற்கு மாறிவிட்டீர்கள். நீங்கள் வேறு ஒரு நிறத்தை ஆதரிப்பவர்களாய் இருந்தீர்கள். இன்று மற்றொரு நிறத்தை பிடித்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள். உங்கள் அனுபவ அறிவு என்பதின் தரம் மாறிக் கொண்டே இருக்கிறது. உங்களுக்கு எது உண்மையில் தேவைப்படுகிறது என்கிற அறிவை உங்கள் அனுபவம் தரவேயில்லை. அந்த அனுபவத்திலிருந்து திரண்டு வரும் அறிவை நீங்கள் ஜீரணம் செய்யவே இல்லை. ஒரு குரு உங்கள் அனுபவத்திலிருந்து கிளர்ந்து எழுந்த அறிவை சீர்ப்படுத்தி அதில் எது சாரம் என்பதை சுட்டிக் காட்டுவார். ஏனெனில் தன் அனுபவத்திலிருந்து தன் வாழ்க்கை சாரத்திலிருந்து கடவுள் தேடுவதை மையமாக்கி அவர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். அந்த நிலைப்படுத்தலை தான் உங்கள் அனுபவ அறிவு உங்களுக்கு தந்திருக்க வேண்டும். அப்படி நிலைப்படுத்த முடியாமல் தடுமாறித் தவித்துக் கொண்டிருக்கின்ற போது உங்கள் அனுபவத்தின் சாரத்தை உங்களுக்குள் தேக்கி வைத்து உங்களை ஒரு நிலைப்படுத்துவார். இந்த நிலைப்படுத்துதல் என்பது எந்த அனுபவத்தையும் நடுநிலையிலிருந்து பார்க்கின்ற வல்லமை உடையது. எதையும் சாராதது. இடது வலது திரும்பாதது. எல்லா நேரத்திலும் மிக மென்மையாய், பொறுமையாய், கவனமாய் சீர்தூக்கி சமநிலையில் இருப்பது. எந்தவித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் ஆட்படாதது. இந்த நிலையை, இந்த பக்குவத்தை உங்கள் அனுபவ அறிவு கொடுக்குமாயின் நீங்கள் குரு. கொடுக்க மறுக்குமாயின் உங்கள் தேடல் குருவை நோக்கி இருக்க வேண்டும். குரு மட்டுமே உங்களுக்கு இந்த நடுநிலையை, சீர்தூக்கி பார்க்கும் செம்மையை தர முடியும்.

அனுபவ அறிவு என்பது தேடல். தேடலில் தெளிதல் என்பது குருவின் ஆசி. குரு கொடுக்கும் வரம்.

இந்தக் கேள்வியே நீங்கள் இரண்டாக இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக்குகிறது. அனுபவ அறிவின் சாரம் இருந்திருப்பின் ஏதேனும் ஒரு வழியில் பயணப்பட்டிருப்பீர்கள். கேள்வியை மற்றவரிடம் கேட்கும் முன்பு உங்களை உலுக்கிக் கேட்டுக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் உண்மையாய் ஆழ்ந்து பாருங்கள். வெற்று சமாதானமாகவோ வார்த்தை முழக்கங்களாகவோ இல்லாது உள்ளே சத்தியமாய் இருங்கள். தனக்கு உண்மையாய் இருத்தல் தான் ஒரு குருவின் போதனை. இது எளிதல்ல.

5 comments:

said...

வணக்கம்

குரு என்பவர் யார்,என்ன செய்வார்? மற்றும் அனுப அறிவு பற்றியும் ஐயா அளித்த விளக்கம் உணரந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
ஒரு குருவால் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை செம்மைபடுத்த முடியும் என்பதை எங்களுக்கு மீண்டும் உணர்த்திய ஐயா அவர்களுக்கும், இது போன்ற நல்ல கேள்விகளை தொகுத்த கிருஷ்ண துளசி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
கலை வினோத்

said...

Clear cut and very strong answer by iyya.Many doubts are getting cleared with this answer.Instead of saying this is a strong answer,it is an healthy advice..

Manjula
Tokyo,Japan.

said...

Hi
The word"தேடலில் தெளிதல் என்பது குருவின் ஆசி. குரு கொடுக்கும் வரம்." when i read this line i remember the line which i read in shiradi saibaba's saisaritham that to get a guru it is not in our hand, the guru & the god should allow you to go near to them whithout their permission we can't get both the things. To go near to them we need panivu & a thought that god give me a guru.

Good answer thanks bala sir.

said...

Ego journey takes us nowhere. One can have great experiences but wouldn't be able to crystallise it and move forward.I realise I am unable to digest my experiences and grasp the essence without my master's grace.
Way to go...
Seeking my guru's blessings to help me understand and grow.

Thankfully,
Arun Balaji

said...

"அனுபவ அறிவு என்பது தேடல். தேடலில் தெளிதல் என்பது குருவின் ஆசி. குரு கொடுக்கும் வரம்."
மிகவும் சத்தியம் நிரம்பிய வார்த்தைகள். அத்தனை புத்தகங்களும் தரும் அறிவை அனுபவமாக்குவது எழுத்துச்சித்தரின் எழுத்துக்கள்.