Friday, November 27, 2009

சொர்க்கம் நடுவிலே - பாலகுமாரன்


"ஜெய விஜயீ பவ"
என் பெயர் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. நான் அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன்.
நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன.இப்போது பூமியிலுமில்லாமல் பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையிலே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். இங்கே காலம் வித்தியாசமானது. சூரியன் உதிப்பது , மறைவது என்று எதுவுமே இல்லை. எந்நேரமும் மங்கலான ஒரு வெளிச்சம் மட்டுமே உள்ளது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமா ? பனி படர்ந்த நேரத்து விடியற்காலை வெளிச்சம் போல மிகப் பிரம்மாண்டமான வெளி . அதில் தனியே இருப்பது போன்ற உணர்வு. பூமியில் பார்ப்பதும், கேட்பதும் உடல் வழியே நடைபெறுகிறது அல்லவா ? அது இங்கே சாத்தியமில்லை. எல்லாமே உணர்வு தான்.


.......................................... கீழே தொண்டை நாட்டின் ஒரு பகுதியான திருவான்மியூருக்கும் , மயிலாப்பூருக்கும் நடுவே ஒரு இடத்தில் ஒரு பெண் நடந்து கொண்டிருக்கிறாள் ...........................திடீரென்று அவளைச் சுற்றி ஒரு வெற்றிடம் உண்டானது.


இறப்பதற்கு சில விநாடிகள் முன்பு மனிதர்களைச் சுற்றி இப்படி ஒரு வெற்றிடம் உண்டாகும். அந்த வெற்றிடம் உடம்புக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தியை உறிஞ்சி வெளியே இழுத்துப் போடும். அப்படி இழுத்துப் போடுவதற்கு சுற்றிலும் இருக்கின்ற சக்திகள் உதவி செய்யும் . அப்படித் தான் இந்தப் பெண்ணை சுற்றியும் வெற்றிடம் உண்டாகியது. அவள் உயிரை உறிஞ்சுவதற்கு வெளியே இருக்கின்ற சக்திகளும் தயாராக இருந்தன. .......


7 comments:

said...

சூரியகதிர் புத்தகத்தில் வருகிற தொடரா?

வாழ்த்துகள்

said...

ஆமாம்.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு..

அதிரடித்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

உபநிஷ விஷயங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தர ஆசிர்வதிக்கப்பட்டவராலேயே முடியும்.

உணர்ந்து செதுக்கியுள்ள வார்த்தைகளால் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி

said...

இந்த தொடர் சூரியகதிர் என்ற புத்தகத்தில் வருகின்றது என்பது நிறைய வாசகர்களுக்கு தெரியவில்லை, இதை தெரியபடுத்தியதற்கு மிக்க நன்றி. கிருஷ்ணதுளசி அவர்களுக்கு. இந்த தொடரை படிக்கும்பொழுது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது, இந்த தொடரை மிக ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம்.

கலைவினோத்

said...

ஆம் கலைசெல்வி. பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

மேலுலகம் சென்று பார்த்து விட்டு வந்து எழுதுகிறாரோ என்ற மனமயக்கத்தை ஏற்படுத்துகிறது..

இறந்த பின் வாழ்வு இப்படி இருக்க முடியாது என்று மறுத்துக் கூற முடியாத வண்ணம் .. ரொம்ப கன்வின்சிங்காய் எப்படி எழுதுகிறார் என்ற பிரமிப்பைத் தாண்டி 'நமக்கும் மரணம் நேரும். அது எவ்விதம் இருக்கும்' என்ற பயத்தையும் ஏற்படுத்துவது இந்தத் தொடரின் வெற்றி..

ஆனால் மரணத்தைப் பற்றி அறியும் ஆவலையும் அதிகரித்திருப்பது இந்தத் தொடரின் கூடுதல் வெற்றி.....

'வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே' என்று வரம் கேட்டு பெற்றிருப்பாரோ...

said...

Vanakkam Thiru Tulasi Avarkale,

Thanks a lot to designd such a great website to such a Great Writer "Thiru Balakumaran". I am a follower / fan of Elzhuthu Chitthar Thiru Balakumaran. Definitely this website will create a very good impression to new readers and will be very useful to his fans. I could forward the web link to my friends. Once again Thanks a lot to given us the web site. Really you have done The Great Job.

I want to meet him atleast once in my life time. I am doing prayer for the great opportunity.


Thanks/Regards,
Saravanapriyan.C

said...

respected sir,
why no more posts after feb
is this surya kadhir available in online pls help

said...

நல்ல தகவல் கிருஷ்ண துளசி...

இது தனி நாவலாக வருமா?