ஏதேனும் ஒன்றை சொத்தாக அவன் நினைத்துக் கொள்ள வேண்டும். தங்கம் முக்கியமாக இல்லாத போது, ஆடு, மாடுகள் முக்கியமாக இருந்தன. ஆடு, மாடுகளுக்கு முன்பு நிலங்கள் சொந்தமாக இருந்தன. எது அபூர்வமோ அதை தன் சொந்தமாக நினைப்பது மனித இயல்பு. நாளையே கடலுக்கு அடியிலிருந்து நாற்பது டன் தங்கம் வெளிவந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தை யாரும் வாங்கமாட்டார்கள். அது செலாவணி ஆகாது. தங்கம் கிடைப்பது குறைவாக இருப்பதால் இந்த அலையல் ஏற்படுகிறது. வைரம் அதிகம் கிடைக்கிறது. ஆனால், கிடைத்த வைரத்தை திரும்ப குப்பையிலேயே கொட்டி விடுகிறார்கள். வைரம் அதிகம் கிடைக்காமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வைரம் அதிகம் கிடைத்தால் மரியாதை போய்விடும் என்பதற்காக அவர்களே இயற்கை கொடுத்ததை புறந்தள்ளி விடுகிறார்கள். எது எளிதில் கிடைக்காததோ அதற்கு பெரிய மரியாதை இருக்கும். கடவுள் என்பதற்கு மரியாதை ஏன் இருக்கிறது? கடவுள் என்பது மாயையான விஷயம். புரியாத விஷயம். புரிந்து போனால் அலட்சியப்படுத்தி விடுவார்கள். புரியாத வரை மிக முக்கியமானதாக, பெரிய வியாபாரமாக நடந்து கொண்டுதான் இருக்கும்.
ஐயா, பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்தினால் என்ன?
ஆஹா! செய்யாலாமே. மற்ற எல்லா விஷயங்களையும் வரைமுறைப்படுத்தி விட்டோம். பாலியல் தொழில் ஒன்றுதானே பாக்கி. இதையும் வரைமுறைப்படுத்தி விடலாமே. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் நம் அனுமதிக்காகக் காத்திருப்பதில்லை. பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்துவது என்பது நடக்கத்தான் போகிறது. வெகு விரைவில் செய்யதான் போகிறார்கள். ஆனால் இது மனிதரின் திருட்டு புத்தி. இருட்டுப் பக்கம். விலங்கின உறவு. மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது வேகமாய் எழுகின்ற அலட்சியம். மற்றவரை அவமானப்படுத்துவதில் உண்டான ஆனந்தம். பிணத்தை தழுவுவது போல என்கிறார் வள்ளுவர். மனம் செத்துப் போனவர்கள் தான் பிணத்தை தழுவுவார்கள்.
ஐயா, பீஜாட்சரம் என்றால் என்ன?
பீஜம் என்றால் அடி, ஆரம்பம், நுனி. தோன்றும் இடம். அட்சரம் என்றால் வார்த்தை, சப்தம். உலகில் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு சப்தம் இருக்கின்றது. அந்த அசைவின் அடி, அந்த அசைவின் நுனி, அந்த அசைவின் கரு இவைகளிலிருந்து அந்த சப்தம் கிளம்புகிறது. அந்த சப்தத்திற்குதான், அந்த அசைவிற்குதான் பீஜாட்சரம் என்று பெயர். உதாரணமாக ஹ்ருதயம் அசைகிறது. அந்த ஹ்ருதயத்தினுடைய சப்தம் என்ன என்பதை கவனித்திருக்கிறார்கள். "செளஹு" என்ற சப்தம் ஹ்ருதயத்தின் சப்தம். மூளையினுடைய சப்தம் என்ன என்று கவனித்திருக்கிறார்கள். "ரும்" என்பது மூளையின் சப்தம். இதை போல நாடி நரம்புகளுக்கு, நுரையீரல்களுக்கு, வயிற்றுக்கு, தொண்டைக்குழிக்கு, முதுகெலும்பின் அடிப்பகுதிக்கு என்று பல சப்தங்கள் உண்டு. இந்த வெளியுனுடைய சப்தம் "ஓம்". இந்த "அஉம்" என்ற சப்தம் தான் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்றது. இது எப்பொழுதோ ஏற்பட்ட அசைவினால் தொடர்ந்து கேட்கின்ற சப்தம். ஒரு அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி, அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எப்பொழுது துவங்கியது என்று யோசித்து தடம் பார்த்து போக ஒரு பீஜத்தில், ஒரு கருவில், ஒரு நுனியில் முடியும். அங்கிருந்து தோன்றிய சப்தம் என்பதால் அதற்கு பீஜாட்சரம் என்று பெயர். இந்த பதிலின் மூலம் நான் சொன்னதை உங்களால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாது. இதை யோசித்து, யோசித்து, யோசித்து அடி ஆழம் போய் உணர்வதின் மூலம் இதை ஒரு வேளை புரிந்து கொள்ளலாம். அதுவே தன்னை காட்டினால் ஒழிய அதை புரிந்து கொள்ள முடியாது.
ஐயா, கர்நாடக சங்கீதத்தில் தியாகராஜரை அதிகம் கொண்டாடுகிறார்களே ஏன்?
தியாகராஜரை கொண்டாடவில்லை. தியாகராஜரின் பாடல்களில் இருக்கும் சத்தியத்தை கொண்டாடுகிறார்கள். சத்தியத்தை எல்லோரும் எல்லா நேரமும் உணர்ந்து கொண்டாட முடியாது. ஏதோ ஒரு தொந்திரவை சத்தியம், மனித மனத்தில் ஏற்படுத்தும். அதை சத்தியம் என்று தெரியாதவர்கள் தியாகராஜரை ரூபமாக உணர்ந்து கொண்டாடுவார்கள். "கன கன ருசிரா கனக வசனுமு நின்னு" என்ன அற்புதமான ருசி உன்னுடைய தங்க நிற முகம் என்று தியாகையர் பேசுகிறார். உள்ளே ராமனை கற்பனை செய்து உறவாடி வந்த வார்த்தைகள் வெளியே எளிதாய் கவிதையாய் மாறுகின்றன. தியாகராஜர் ராமன் என்று கொண்டாடியது சத்தியத்தை. சத்தியம் என்பதற்கு ஒரு மனித ரூபம்
ஐயா, அநியாயமாக வாஸ்துவைப் பற்றி இப்போது எல்லோரும் அலட்டிக் கொள்கிறார்களே. இது நியாயமா?
உங்களுக்கு வாஸ்துவைப் பற்றி தெரியுமா? தெரிந்திருந்தால் அநியாயமாக என்று பேச மாட்டீர்கள். உங்களுக்கு அணுகுண்டைப் பற்றியும் தெரியாது. ஆனால் அணுகுண்டு உபயோகப்படுத்தப்படும் என்பது நம்புகிறீர்கள். உங்களுக்கு செவ்வாய் கிரகம், சந்திரன் பற்றியும் தெரியாது. ஆனால் அங்கெல்லாம் போக முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். வாஸ்துவை மறுப்பதற்கு முன்பு வாஸ்துவைத் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பிறகு மறுப்பதும், ஏற்பதும்தான் தெளிவு. தெரியாமல் மறுப்பதற்கு பெயர் திமிர். வாஸ்து என்பது இந்தியாவின் புராதன மான ஒரு கலை. இந்திய புராதன விஷயங்கள் தொடர்புகள் அற்று போய் மறைபொருளாக இருக்குமே தவிர, ஒருகாலும் புராதன விஷயங்கள் பொய்யாக இருந்ததில்லை. ஒன்றை அலட்சியபடுத்தும் முன்பு ஆராய்ந்து பிறகு செயல்படுங்கள்.
ஐயா, பித்ருக்கடன் என்ற விஷயத்தை ஆண்கள் மட்டும் செய்கிறார்களே. பெண்களுக்கு இதில் பங்கு இல்லையா?
இந்தியா என்று அழைக்கப்படும் பரத கண்ட சம்பிரதாய வாழ்க்கையில் ஆணுக்கு எந்த விதமான நேர்த்திக்கடனையும் பெண்ணில்லாமல் செய்வதற்கு உரிமையே இல்லை. மனைவி இல்லாதவர் பித்ருக்கடன் செய்யும்போது ஒரு தர்ப்பைக் குச்சியை அருகே நிற்க வைத்துவிட்டு அதை மனைவியாக பாவித்துதான் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.பித்ருக்கடன் செய்வது ஆண்கள் மட்டுமே அல்ல இந்திய சம்பிரதாய சாஸ்திரப்படி பெண் உத்தரணியிலிருந்து ஜலம் எடுத்து அந்த தட்சணையில் ஊற்றினால்தான் அந்த தட்சணையை அவன் செய்து வைக்கும் புரோகிதருக்கு தரமுடியும். அதாவது எவ்வளவு தட்சணை கொடுக்கிறார்கள் என்பதை பெண் அறிந்திருக்க வேண்டும். யாருக்கு கொடுக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். பித்ருக்கடனின் ஒவ்வொரு இடத்திலும் ஆணின் வலப்பக்கத்தில் நின்று தர்ப்பை முனையை ஆண் தோளில் படும்படி பிடித்துக்கொண்டு அவன் பேச்சை, செயலை கவனித்திருக்க வேண்டும். இரண்டு பேரும் சேர்ந்து செய்வதை விட, ஒருவர் செய்ய அடுத்தவர் அதை கவனமாக பார்த்து செய்ய தூண்டுவதுதான் விஷேசம். ஒரு நாளும் பெண்களை இந்து சம்பிரதாய வாழ்க்கை புறக்கணித்ததே இல்லை. மனம் முழுவதும் செய்யும் காரியத்தில் ஈடுபட அழகான ஒரு அமைப்பில் வைத்திருக்கிறார்கள். அருகே இருந்து கவனிப்பது என்பது செய்வதைக் காட்டிலும் கூர்மையானது.
ஐயா, இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்மீகம் என்ற விஷயத்தை பெற்றோர்கள் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்?
பெற்றோர்கள் ஆன்மீகமான வாழ்வை வாழ்வது பார்த்தே குழந்தைகள் தானாக கற்றுக்கொள்ளும். நீங்கள் அலட்டலாய், ஆரவாரமாய், ஆபாசமாய் இருந்தால் குழந்தைகள் அதை உடனே பின்பற்றும். நீங்கள் அமைதியாய், அன்பாய், அறிவார்த்தமாய் இருப்பின் குழந்தைகள் அதை எளிதில் கிரஹித்து கொள்ளும். அன்பாகவும், அடக்கமாகவும் இருப்பதே ஆன்மீகம். கடவுள் வழிபாடோடு ஆன்மீகத்தை சம்பந்தபடுத்த வேண்டாம். கடவுள் வழிபாடு செய்து கொண்டே காட்டுக் கூச்சலாய் இருக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கத் தெரியுமானால் அது குழந்தைகளை சந்தோஷப்படுத்தும். அவைகள் வெகு எளிதில் எதிர்ப்பார்ப்பில்லாத நேசத்தைப் பொழியத் துவங்கிவிடும். நீங்கள் நடக்கும் பாதையில் உங்கள் குழந்தைகள் பின் தொடரும். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை.
16 comments:
Extraordinary.
Thanks and Namaskarams Thulasi.
Extraordinary THOUGHTS containing EXTRAORDINAY Insights of the highest order and deepest importance.
THANKS a lot in your efforts in presenting Aiya's EXTRAORDINARY & powerful analysis.
I surrender again to his EXTRAORDINARY greatness.
My Namaskarams and warm Regards,
affectionately,
srinivasan. V.
( I wish to know HOW I can be of any support or practical assistance in your NOBLE EFFORTS on this Blogspot. If possible, advise. Thanks. )
அடுத்தடுத்து தொடுத்திருக்கும் கேள்விகளில் விதம் விதமாய் வாசனை, மல்லி, முல்லை, மரு என்பது போன்று அத்தனையும் முத்துக்கள். "நீங்கள் நடக்கும் பாதையில் உங்கள் குழந்தைகள் பின் தொடரும். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை" இளைய சமுதாயத்தை குறித்த ஆழ்ந்த கவலை ஐயாவின் பதில்களில் தெறிகிறது, அது குறித்த அக்கறை தங்கள் கேள்விகளில் தெரிகிறது. இத்தகைய அக்கறையோடு கூடிய வழிகாட்டுதல்கள் நிச்சயம் இந்த சமுதாயத்தை நன்னடத்தும். நன்றி.
Q&A is excellent. From the words of iyya we are able to understand the real meaning and greatness of sanathana dharma.
" இந்த பதிலின் மூலம் நான் சொன்னதை உங்களால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாது. "
That utterance is an EXTRAORDINARY TRUTH. Despite that valid & deep conviction, Aiya's has been AGAIN and AGAIN consistently causing the flow of EXTRAORDINARY messages for the youth and the oncoming generations. These insights appear through him at several medium in several phases. Many narratives of a KARMAYOGI, in line with the Bhagavad Geethai, aptly fits Aiya. My namaskarams again to Him. Thanks THULASI for all your EFFORTS. God Bless and Warm Regards,
affectionately,
Srinivasan.
vanakkam.
Iyyavirkku ennudaiya namaskaram.
kuzhanthaikalukku aanmigam katru koduppathu pattri iyyavin bathil migavum usefullaga ullathu. intha blogsport uruvakkitharku krishnathulasi avargalluku ennudaiya nandri. vazhthukal.
anbudan
rekhamanavazhagan
எதிர் காலத்தின் நமது சமுதாயத்திற்கு ஒரு வலுவான ஆவணமாக, வழிகாட்டியாக இவை இருக்கும்,
பாலகுமாரனை துதி பாட பின்னுட்டத்தை உபயோகபடுத்தா விட்டால் (தவிர்த்து நேரடியாய் அவருக்கு இமெயில் அனுப்பலாம்) நலம், இது என்னுடய கருத்து,
பல்சுவை நாவல் களில் வந்ததையும் இங்கு வகை படுத்தி கொண்டுவந்தால் நல்லது.
நன்றி,
சஹ்ரிதயன்
Sathyam, Very nice.
Sincerely,
Jayapradha
நன்றி ஸ்ரீனிவாசன்.
கதம்பத்தின் மணம் மதி மயங்க வைக்கும். ஆனால் இந்த கேள்விக் கதம்பத்தின் மணம் மதியை மலரச் செய்வது தான் விசேஷம்.
நன்றி கிருத்திகா
thanks baskar
வருக சஹ்ரிதயன்
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
பல்சுவை நாவல்களில் வெளிவந்தவையையும் இதில் வெளியிடும் எண்ணம் உண்டு.
படைப்பை வியக்கும்போது படைப்பாளியை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும் ....
நன்றிகள் பல ஜெயப்ரதா.......
கேள்வி பதில் பகுதி மிகவும் அருமையான பல விஷயங்கள் பற்றி தெளிவுபடுத்தியது.. ஐயா அவர்களுக்கு நன்றி! சிலை சொல்லும் கதை, கல்வெட்டுக்கள் பகுதிகள் மூலமாக நம் பண்டைய நாகரீகத்தை கண் முன்னே படம் பிடித்து காட்டும் ஐயா அவர்களிடம் "முதுமக்கள் தாழி" பற்றி கேட்க விரும்புகிறேன்.. ஐயா.. "முதுமக்கள் தாழி" பற்றிய தங்களது எண்ணம் என்ன? Euthanasia எனப்படும் கருணைக்கொலையை போன்றதா இது? தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா..
வருக சிங்கையன்
உங்கள் கேள்வியை ஐயாவிடம் தெரிவித்து விட்டோம். விரைவில் அதற்கான பதிலைப் பெற்றுத் தர ஆவன செய்கிறோம்.
நன்றி...
//வாஸ்துவை மறுப்பதற்கு முன்பு வாஸ்துவைத் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பிறகு மறுப்பதும், ஏற்பதும்தான் தெளிவு. தெரியாமல் மறுப்பதற்கு பெயர் திமிர்//
சார் எனக்கு இது நல்ல அறிவுரை ... ஒரு விஷயம் தெரிந்து கொள்ளாமல் மறுப்பது எதிர்ப்பது தவறு தான்.
நன்றி நல்ல தகவலுக்கு
//
இந்திய புராதன விஷயங்கள் தொடர்புகள் அற்று போய் மறைபொருளாக இருக்குமே தவிர, ஒருகாலும் புராதன விஷயங்கள் பொய்யாக இருந்ததில்லை.
//
ஐயா
நமது பழக்கங்களில் , இன்று ஒட்டுவன எது, புறந்தள்ள கூடியது எது என பிரிப்பது எப்படி
வாய் வழி பரி மாற்றத்தாலும் , காலங்கள் மாறியதாலும், இன்றைய வாழ்க்கை வசதி மற்றும் முறையினாலும் , பயன் இல்லா பழக்கங்களும் உள்ளன.
அவற்றின் மூலம் நமக்கு தெரியாமல் போவதால் அதை ஒதுக்க முடிவதில்லை. இந்த குழப்பத்தின் பிடியில் சில வருடங்களாய் சிக்கி தவிக்கிறேன்.
புரியாமல் , விளங்காமல் , ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் செய்ய ஏன் மனம் மறுக்கிறது.
வழி ஒன்று சொல்லுங்கள் ஐயா
சிவபாலன்
Post a Comment