Monday, November 5, 2007

பாலகுமாரன் எழுதிய புத்தகங்கள்

1 சின்ன சின்ன வட்டங்கள் - சிறுகதைத் தொகுப்பு.

2. ஏதோ ஒரு நதியில் - குறுநாவல் மற்றும் சிறுகதைகள்

3. மெர்க்குரிப் பூக்கள்

4. மெளனமே காதலாக

5. அகல்யா

6. பச்சை வயல் மனது

7. இரும்பு குதிரைகள்

8. நீ வருவாயென

9. என்றென்றும் அன்புடன்

10. விட்டில் பூச்சிகள்

11. உள்ளம் கவர் கள்வன்

12. நிலாக்கால மேகம்

13. கொம்புத் தேன்

14. கரையோர முதலைகள்

15. கடற்பாலம்

16. ஆனந்த வயல்

17. மரக்கால்

18. என் மனது தாமரைப்பூ

19. தாயுமானவன்

20. என் கண்மணி

21. செவ்வரளி

22. வில்வமரம்

23. யானை வேட்டை

24. நிழல் யுத்தம்

25. நிலாவே வா

26. இனி என் முறை

27. ஆசை என்னும் வேதம்

28. நானே எனக்கொரு போதிமரம்

29. முன்கதைச் சுருக்கம்

30. கை வீசம்மா கை வீசு

31. பந்தயப் புறா

32. பலா மரம்

33. ஒரு காதல் நிவந்தம்

34. இரண்டாவது சூரியன்

35. மேய்ச்சல் மைதானம் – ஒரு குறுநாவல் மற்றும் சிறுகதைகள் , கட்டுரைத் தொகுப்பு

36. தலையணைப் பூக்கள்

37. பயணிகள் கவனிக்கவும்

38. முதல் யுத்தம்

39. சுக ஜீவனம்

40. ஆருயிரே மன்னவரே

41. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

42. இனியெல்லாம் சுகமே

43. மாலைநேரத்து மயக்கம்

44. கனவுகள் விற்பவன்

45. கண்ணாடி கோபுரங்கள்

46. உயிர்ச்சுருள்

47. தண்ணீர் துறை

48. விசிறி சாமியார் - கதைகளும், கவிதைகளும்

49. ஆசைக்கடல்

50. இனிது இனிது காதல் இனிது

51. வர்ண வியாபாரம்

52. கல்யாண மாலை

53. தொப்புள் கொடி

54. உள்ளம் விழித்தது மெல்ல

55. ஈரக்காற்று

56. இனி இரவு எழுந்திரு

57. காதல் வெண்ணிலா

58. என் அன்புக்காதலா

59. சிநேகமுள்ள சிங்கம்

60. போராடும் பெண்மணிகள் - உண்மைக் கதைகள் மற்றும் கட்டுரைத் தொடர்.

61. கானல் தாகம்

62. என்னருகில் நீ இருந்தால்

63. சுந்தரி கண்ணால் ஒரு சேதி

64. என் கல்யாண வைபோகம்

65. அடுக்கு மல்லி

66. இரவல் கவிதை

67. நீ பெளர்ணமி

68. கனவுக் குடித்தனம்

69. காற்றுக்கென்ன வேலி

70. வன்னி மரத்தாலி

71. தெம்மாங்கு ராஜ்ஜியம்

72. நெல்லுச் சோறு

73. செந்தூரச் சொந்தம்

74. புருஷ விரதம்

75. ஒரு வழிப் பாதை

76. முள் முடிச்சு

77. கிருஷ்ண அர்ஜூனன்

78. அப்பா

79. அன்புக்கு பஞ்சமில்லை

80. தாலி பூஜை

81. திருமணத் தீவு

82. நெல்லுக்கு இறைத்த நீர்

83. மாக்கோலம்

84. மீட்டாத வீணை

85. கடலோரக் குருவிகள்

86. உறவில் கலந்து உணர்வில் நனைந்து – கட்டுரைத் தொடர்

87. பகல் விளக்கு

88. என்றும் மாறா வெண்மை இது

89. ஒரு பொல்லாப்புமில்லை

90. நேற்று வரை ஏமாற்றினாள்

91. மணல் நதி

92. மானஸ தேவி

93. நந்தா விளக்கு

94. திருப்பூந்துருத்தி

95. கல்யாணத் தேர் - கட்டுரைத் தொடர்

96. என்னவளே அடி என்னவளே

97. பெரிய புராணக் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு

98. கற்றுக் கொண்டால் குற்றமில்லை - கட்டுரைத் தொடர்

99. காதற் கிளிகள்

100. கண்ணே கலைமானே

101. நல்ல முன்பனிக்காலம்

102. சுழற் காற்று

103. பணம் காய்ச்சி மரம்

104. நெளி மோதிரம்

105. என்னுயிர் தோழி

106. என் அன்புள்ள அப்பா

107. பெண்ணாசை

108. மஞ்சக்காணி

109. வெற்றிலைக் கொடி

110. பவிஷு

111. என் கண்மணித் தாமரை

112. மஞ்சள் வானம்

113. முந்தானை ஆயுதம்

114. நேசமில்லாதவர்கள்

115. தாஸி

116. என்னுயிரும் நீயல்லவோ

117. பவழ மல்லி

118. கல்லூரிப் பூக்கள்

119. கல் திரை

120. ஆனந்த யோகம்

121. காதல் வரி

122. ஏனோ தெரியவில்லை

123. தனரேகை

124. ஆலமரம்

125. அன்புள்ள மான்விழியே

126. சரிகை வேட்டி

127. இனிது இனிது காதல் இனிது

128. குரு - கட்டுரைத் தொகுப்பு

129. புருஷ வதம்

130. மனையாள் சுகம்

131. புஷ்பக விமானம்

132. காதல் ஒத்திகை

133. நிகும்பலை

134. போகன்வில்லா

135. வாலிப வேடம்

136. ராஜ கோபுரம்

137. காசு மாலை

138. முத்துக்களோ பெண்கள்

139. சிம்மாசனம்

140. தனிமைத் தவம்

141. மனக் கோயில்

142. காதற் பெருமான்

143. தங்கக்கை

144. எங்கள் காதல் ஒரு தினுசு

145. பட்டாபிஷேகம்

146. கள்ளி

147. காதல் அரங்கம்

148. கனவு கண்டேன் தோழி

149. ஞாபகச்சிமிழ் - கட்டுரைத் தொடர்

150. சரிகைக் கனவுகள் - கட்டுரைத் தொடர்

151. அகல் விளக்கு - கட்டுரைத் தொடர்

152. கதை கதையாம் காரணமாம் - கட்டுரைத் தொடர்

153. பேய்க்கரும்பு

154. முதிர் கன்னி

155. பொன் வட்டில்

156. என் அன்பு மந்திரம்

157. பூசு மஞ்சள்

158. அன்பரசு

159. கடவுள் வீடு

160. எனக்குள் பேசுகிறேன் - கட்டுரைத் தொடர்

161. அமுதைப் பொழியும் நிலவே

162. உடையார் - ஆறு பாகங்கள்

163. திருஞானசம்பந்தர்

164. கல்யாணத் தேர்

165. உச்சித் திலகம்

166. அரச மரம்

167. மனசே மனசே கதவைத் திற

168. இனிய யட்சினி

169. ரகசிய சிநேகிதியே

170. என் அன்புக் காதலா

171. பூந்தோட்டம்

172. பழமுதிர் குன்றம்

173. இரண்டாவது கல்யாணம்

174. குங்குமத் தேர்

175. வெள்ளைத் தாமரை

176. ஜீவ நதி

177. ஆன்மீகக் கட்டுரைகள்

178. அமிர்த யோகம்

179. உத்தமன்

180. மீண்டும் மீண்டும் வா

181. கொஞ்சும் புறாவே

182. துணை

183. குயிலே..குயிலே

184. அப்பம் வடை தயிர்சாதம்

185. சக்தி

186. ஞானியர் கதைகள்

187. கர்ணனின் கதைகள்

188. காலடித்தாமரை

189. சுந்தர காண்டம்

190. பொன்னார் மேனியனே

191. இது தான் வயசு காதலிக்க

192. தோழன்

193. மாவிலைத் தோரணம்

194. சக்ரவாஹம்

195. பிரம்புக்கூடை

196. கூடு

197. திருமணமான என் தோழிக்கு - கட்டுரைத் தொடர்

198. காதல் சொல்ல வந்தேன்

199. துளஸி

200. அத்திப்பூ

201. அருகம்புல்

202. மனம் உருகுதே

203. காதல் சிறகு

204. பிருந்தாவனம்

205. காசும் பிறப்பும்

206. பொய்மான்

207. ஏழாவது காதல்

208. நான்காம் பிறை

209. வேட்டை

210. அவரும் அவளும்

211. கடிகை

212. ஆயிரம் கண்ணி

213. செப்புப்பட்டயம்

214. காமதேனு

215. சரவிளக்கு

216. அம்பையின் கதை

217. தங்கச்சுருள்

218. தாழம்பூ

219. சரஸ்வதி

220. வாழையடி வாழை

221. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

222. திருவடி

223. குன்றிமணி

224. கிருஷ்ண மந்திரம்

225. கருணை மழை

226. குருவழி - கட்டுரைத் தொடர்

227. அம்மாவும் சில கட்டுரைகளும்

228. எனது ஆன்மீக அனுபவங்கள்

229. என்னைச் சுற்றி சில நடனங்கள்

230. தேடிக் கண்டு கொண்டேன்

231. காதலாகிக் கனிந்து

232. காதல் ரேகை

233. எழில்

234. விழித்துணை

பதிப்பகத்தார் விலாசம்
விசா பப்ளிகேஷன்ஸ்,
C /o திருமகள் நிலையம்,
55, வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர், சென்னை -600 017,
Ph : 2434 2899
Fax : 91-44-24341559

Tuesday, October 30, 2007

எழுத்தாளர் பாலகுமாரன் - ஒரு எளிய அறிமுகம்


பெயர்

பாலகுமாரன்

பிறந்த தேதி
1946, ஜூலை 5

பிரசுரிக்கப்பட்ட நாவல்கள்
230 க்கும் மேல்.


பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகள்
100 க்கும் மேல்.


வசனகர்த்தாவாக பணியாற்றிய திரைப்படங்கள் :

நாயகன் , குணா , பாட்ஷா , ஜென்டில்மேன் , காதலன் , செண்பகத் தோட்டம் , கிழக்குமலை, மாதங்கள் ஏழு, ரகசிய போலீஸ், சிவசக்தி, உல்லாசம், வேலை, ஜீன்ஸ் , முகவரி, உயிரிலே கலந்து , சிட்டிசன், மஜ்னு, காதல் சடுகுடு, கிங், மன்மதன், கலாபக்காதலன், புதுப்பேட்டை, வல்லவன்।

இயக்குனர் சிகரம் திரு।கே. பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய திரைப்படங்கள் :

சிந்து பைரவி , புன்னகை மன்னன் , சுந்தர சொப்பனகளு (கன்னடம்)


இயக்குனராகப் பணியாற்றிய திரைப்படம் :

இது நம்ம ஆளு

“மன்னர் பாஸ்கர சேதுபதி” என்ற தொலைக்காட்சித் தொடருக்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.

திரைப்பட விருதுகள் :

சினிமா எக்ஸ்பிரஸ் விருது - குணா (1993)
தமிழக அரசு விருது (சிறந்த வசனகர்த்தா) - காதலன் (1995)

இலக்கிய விருதுகள் :


இலக்கிய சிந்தனை விருது - “ மெர்க்குரிப் பூக்கள்” (1980)
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது – “இரும்பு குதிரைகள்”(1985)

தமிழக அரசு விருது ( சிறுகதைத் தொகுப்பு – இரண்டாம் பரிசு ) -
“ கடற்பாலம்” (1989)
தமிழக அரசு விருது ( சிறுகதைத் தொகுப்பு – முதல் பரிசு )
“சுக ஜீவனம்” (1990)

இலக்கிய சேவைக்காக தமிழக அரசு வழங்கிய பட்டம் -
“ கலைமாமணி” (2007)

மற்ற விருதுகள் :

- “ சிந்தனைச் செம்மல்” - சென்னை சிங்க குழுமம் அளித்த கெளரவ பட்டம். ( 1994 )
-“ ஆன்மீக எழுத்துலக வித்தகர்” – ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அளித்த விருது

தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகே உள்ள பழமார்நேரி என்ற
கிராமம் இவரது சொந்த ஊர். பள்ளி இறுதி வரை தேறிய பாலகுமாரன் பின்பு தட்டச்சும்,
சுருக்கெழுத்தும் கற்று தேறி தனியார் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணி
துவங்கி,ஒரு டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பதவி வகித்தவர். அலுவலில்
சேர்ந்த காலகட்டத்தில் (1969) கவிதைகள் எழுதத் துவங்கிய பாலகுமாரன் சிறுகதைகளில்
நாட்டம் செலுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார். சுமார்
இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் இதுவரை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் நாவல்கள்
விற்பனையில் முதலிடம் கொண்டவை।

பழந்தமிழ் இலக்கியப்பயிற்சி பாலகுமாரனுக்கு அவர் தாயார் தமிழ் பண்டிதை அமரர் சுலோசனா அவர்களால் கவனமுடன் தரப்பட்டது. முப்பத்தி ஆறு வருடம் ஆசிரியராக இருந்த
தாயின் துணையே பாலகுமாரன் எழுத்தில் சிறந்து விளங்க உதவிற்று। இவர் தனது நூல்களில் பாத்திரங்கள் வாயிலாக தேவார, திருவாசக ,பிரபந்த பாடல்களையும், அதன்
விளக்கங்களையும் அடிக்கடி எழுதி வருகிறார்.தகுந்த வடிவில் பழந்தமிழ் இலக்கிய பெருமைகளை நாவல்களின் ஊடே சொல்கிற போது அவைகளைப் பயிலும் ஆவல் மக்களிடையே ஏற்படுகிறது.

இவர் தன் நாவல்களில் குடும்பம் என்பதின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களை மதிக்க வேண்டிய அவசியம் குறித்தும் , இதற்காக தியானம் ,மூச்சுப்பயிற்சி போன்றவை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் ,தனி மனித மேம்பாடே சமூக மேம்பாடு என்கிற விளக்கமும் எளிய இனிய நடையில் எழுதியிருக்கிறார்.

இது மட்டுமன்றி கதைக்களன்களாய் பல்வேறு தொழில்களை ஆராய்ந்து , உள்ளது உள்ளபடியே
விளக்கும் திறமை இவரிடம் உண்டு. லாரி போக்குவரத்து ,விமான நிலையம் ,காய்கறி
மார்க்கெட்,தங்க நகை வியாபாரம் என்று பெரிய துறைகளை படம் பிடித்துக் காட்டுவது
போல் எழுதுவது,மக்களிடையே சமூக விழிப்பைத் தந்து சகமனிதர் வாழ்க்கையை
தெரியப்படுத்துகிறது.

Sunday, October 21, 2007

ஐயாவுடன்.........

இந்த வலைப்பக்கங்கள் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் அனுமதியோடு, ஆசியோடு அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்த நண்பர்களுக்கு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களோடு தினசரி தொடர்பு இருக்கிறது. இவர்கள் எல்லோரையும் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் தானே முன்வந்து அடிக்கடி தொடர்பு கொள்கிறார். இந்த நண்பர்கள் குடும்பமும் பாலகுமாரன் குடும்பமும் நன்கு பழகி வருகின்றனர்.


இந்த நண்பர்கள் பாலகுமாரன் எழுத்துக்களை முற்றிலும் படித்தவர்கள். விரும்பி அனுபவித்தவர்கள். அவருடைய எழுத்துக்களை நேசிப்பதாலேயே அவரைத் தொடர்பு கொண்டு அவரையும் நேசிக்கத் தொடங்கி அவருடைய அன்பை , அண்மையைப் பெற்றனர். கிட்டத்தட்ட ஐம்பது பேரைக் கொண்ட இந்த குழு இந்த வலைப்பக்கத்தை துவங்கியுள்ளது. எழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு பலமுறை சுற்றுலாக்கள் சென்றும், பல விழாக்களில் கலந்துகொண்டும், அவர் பேசுவதை அருகிலிருந்து கேட்கவும், அவர் சொற்பொழிவாற்றும் போது அந்த சபையில் இருக்கவும் அவர்கள் இடையறாது முயற்சி செய்கிறார்கள். பலமுறை இவைகள் நடந்தும் இருக்கின்றன.எழுத்துச்சித்தர் பாலகுமாரனோடு இவர்கள் கொண்ட சினேகம் இவர்களுடைய சொந்த வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது. அவருடைய வழிகாட்டல் இவர்களுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பலத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருவேளை துவண்டு போனால் அருகில் இருந்து பெரும் உதவிகள் செய்ய எழுத்துச்சித்தர் தயங்கியதில்லை. அந்த நன்றியின் காரணமாகவும் இவர்கள் அவருக்கு நெருக்க மானவர்களாக இருக்கிறார்கள்.


இந்த நண்பர்கள் கூட்டம் கிருஷ்ணதுளசி என்பவரைத் தலைமையாகக் கொண்டு இந்த வலைப்பக்கத்தை திறந்திருக்கிறது. தொடர்ந்து பல விஷயங்களை இந்த பலகணியில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது இவர்கள் எல்லாருடைய எண்ணமாக இருக்கிறது. திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்கள் மூலம் ஒரு நல்ல பக்குவத்தை வாசகர்கள் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் எழுத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த வலைப்பக்கம் செயல்படப் போகிறது. அவர் எழுத்தை நன்கு அனுபவித்து உங்கள் சொந்த வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.


எழுத்துச்சித்தரைப் பற்றிய சில புதிய குறிப்புக்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இருதய அறுவை சிகிச்சை இரண்டாயிரமாம் ஆண்டு நடந்து இரண்டு அடைப்புகள் நீக்கப்பட்டு ஒரு பைபாஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு காலையில் யோகா, மாலையில் துரித நடை என்ற தன் தினசரி நியதியை கடைபிடித்து வருகிறார். சர்க்கரை நோய் இருப்பதால் அளவான சாப்பாடு. தித்திப்பு அறவே கிடையாது. ஆனாலும் நொறுக்குத்தீனியில் ஆசை உண்டு, நண்பர்கள் கூட்டமும், அவர் துணைவியரும் கண்டித்து வைத்திருக்கிறார்கள் மற்றபடிக்கு சுறுசுறுப்பானவர். தினமும் காலையில் யோகாவிற்கு பிறகு தியானமும், அ தற்குப் பிறகு மூலமந்திரங்களோடு பூஜையும் செய்வது வழக்கம் .பிற்பகல் தூக்கம் நிச்சயம் உண்டு . இதற்கு காரணம் வயது என்று கூறுகிறார்.


எல்லோரோடும் பேசிப் பழக மாட்டார். அளவாகவே பேசுவார். ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் கேள்விகள் கேட்டால் பதில் கங்கை எனப்பொங்கிப் பாயும். கேட்ட அடுத்த வினாடியே பதில் ஆரம்பித்து விடும். கேள்விக்கு அப்பாலும் போய் இன்னும் விளக்கம் சொல்வதற்கும் அவர் முயற்சிப்பதுண்டு . புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவரை அவர் போற்றி நெறிப்படுத்துவது வழக்கம்.


பாட்டு பாடுவதில் நல்ல ரசனை உண்டு. கர்நாடக சங்கீதம் உள்ள சினிமா பாடல்கள் மீது பிரியம் உண்டு. உதாரணத்திற்கு முல்லை மலர் மேலே, கல்யாணத்தேன் நிலா போன்ற பாடல்களை மிகவும் அனுபவித்துப் பாடுவார். ஆனால் சங்கீத கச்சேரிகளை கேட்பதிலோ, கேசட்டில் பாடல்களை கேட்பதிலோ அவருக்கு அவ்வளவு நாட்டமில்லை. ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்க அவ்வப்போது பாடல்கள் காதில் விழுந்தால் போதும். பாட்டிற்கென்று உட்காருகின்ற மனோபாவம் அவருக்கு இல்லை. நாம் யோசிப்பதை பாடல்கள் தடை செய்கின்றன என்று சொல்வது அவர் இயல்பு.


அவர் நன்றாக ஓவியம் வரைவார். கோட்டுச் சித்திரங்களாக மளமளவென்று ஓவியங்கள் வரைகின்ற அழகு கண்டு நண்பர்கள் வியப்பார்கள். எழுத்தாளன் கூர்மையாகப்பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவன், அதனால் அவனுக்கு ஓவியம் இயல்பாக வரும் என்று அவர் சொல்வது வழக்கம்.


அவருக்குப் பிடித்த சிற்றுண்டி தோசை, பிடித்த நொறுக்குத் தீனி ஓமப்பொடி . மற்றபடி உணவில் இது வேண்டும் அது வேண்டும் அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என்று சொல்வதும், மற்றவரிடம் விரும்பி கேட்டு வாங்குவதும் அநாகரிகம் என்பது அவர் எண்ணம். இலையில் என்ன விழுகிறதோ அதை உண்டு விட்டு கை அலம்பி எழுந்து விட வேண்டும் . பசிக்குத்தான் உணவு, அதிகம் ருசித்தால் வாழ்வு பற்றிய தெளிவு வராது, உணவில் எவரும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது அவர் கொள்கை.


அவர் தன் குருவை அதிகம் கொண்டாடுவார் . எல்லா விஷயத்திலும் அவரைப் பற்றிய எண்ணத்தோடு தான் அணுகுவார். அவரை வேண்டிக் கொண்டு தான் துவங்குவார். குருவிற்கு அடுத்தபடி அவர் நன்றியோடு நினைப்பது அவரது தாயார், தமிழ் பண்டிதை பா.சு.சுலோச்சனா அவர்களை. அவர் தந்தையைப் பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை. காரணம் வற்புறுத்தி கேட்ட போதும் சிரித்துக்கொண்டு விட்டுவிடுவார்.


முன்பெல்லாம் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் பழக்கம் உடையவர் இப்பொழுது வயதின் காரணமாக ஐந்தரை மணிக்கு எழுந்திருக்கிறார். இரவு தூங்க பதினோரு மணி ஆகிறது. அவருடைய உடைகள் எல்லாம் வெண்மை நிறமுடையவை, வேறு நிறம் உடுத்த அவருக்குப் பிடிப்பதில்லை. பனியன் அணிய பிடிக்காது.அது சங்கடமானது என்று சொல்கிறார். உடம்பை சுத்தமாக வைத்திருத்தலும், நகங்கள் திருத்தலும், உள்ளாடைகளை மிகத் தூய்மையாக வைத்திருத்தலும் அவர் குணங்களில் ஒன்று. வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.