Friday, October 10, 2008

சில கேள்விகள் – சில பதில்கள்


ஐயா, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?

ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா. ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா. ஒரு குழந்தைக்கு செவ்வாய் கிரகமும், குருவும் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா. ஆ மெனில் செக்ஸ் கல்வியும் அவசியம்.

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? எனக்கு பல கனவுகள் வருகின்றன. நான் அந்தக் கனவில் கத்துகிறேன் என்று துணைவியார் சொல்கிறார். ஆ னால் எழுந்தப் பிறகு எனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. கனவுகள் பற்றி சற்று விளக்க முடியுமா.

மனதின் இன்னொரு மொழிதான் கனவு. அந்த மொழிக்கு லிபி இல்லை. ஏன் சப்தம் கூட இல்லை. மனதின் மெள ன மொழி நாடகமாக கண் முன்னே விரியும். இயக்கங்களும், ஆ சைகளும், பயங்களும், கோபங்களும் மனதின் மெள ன மொழியில் வெளிப்படும். கனவு காணும் பொழுது விழிப்பாக இருந்தால் விழிக்கும்போது அந்தக் கனவைக் கைபற்றி விடலாம். கனவு காணும் பொழுதே “அட கனவு” என்று எவருக்கு தோன்றுகிறதோ அவர் கனவின் உத்தேசங்களை அறியக் கூடியவர். இதற்கு படுக்கும்பொழுதே என்ன கனவு வந்தாலும் நான் நிதானமாக புரிந்துக் கொள்வேன் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது. உங்கள் உறுதியைப் பொறுத்து கனவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும். கனவு முடிந்த பிறகு, விழிப்பு ஏற்பட்ட பிறகு கனவு காணாமல் போகும். அது தான் இயல்பு. உடனே கனவைத் துரத்தக்கூடாது. என்ன கனவு, என்ன கனவு என்று பதறக்கூடாது. பதறினால் கனவு இன்னும் அடி ஆ ழ த்தில் போய் சொருகிக் கொள்ளும். வெளியே வராது. கனவை மறந்து விடுங்கள். கனவை நோண்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குள் அந்தக் கனவு வந்து நிற்கும் அல்லது அதன் ஏதாவது ஒரு நுனி உங்கள் முன்பு வந்து நிற்கும். அந்த நுனியைப் பிடித்து இழுக்க மொத்தப் புடவையும் வெளியே வந்து விடும். அப்பொழுது கனவின் உத்தேசமும் உங்களுக்கு தெரிந்து விடும். கனவு என்பது சில சமயம் நீங்கள் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யலாம் என்றும் சொல்லக்கூடிய திறம் வாய்ந்தவை. கனவோடு போரிடாமல், கனவு மறுபடியும் நினைவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கனவு காணும்பொழுதே கனவைப் பற்றிய அறிவு வேண்டும் என்று படுக்கும் முன்பு தீர்மானம் செய்யுங்கள். பழக பழக இது எளிதாக கைகூடும்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பார்த்து நீங்கள் கோபப்படுவதை கவனித்திருக்கிறேன். இந்த அவசர யுகத்தில் இந்த விதிகள் எல்லாம் அவசியமா?

அவசரமாக போவதற்கு தான் விதிகள். அலட்சியமாக போவதற்கு அல்ல. அவசரமாகப் போகிறவர் ஆ பத்தில்லாமல் போக வேண்டும் அல்லவா. அவசரமாக வேறு ஏதாவது இடத்திற்கு போவதற்குத் தானே முயற்சிக்கிறார். அவசரமாக மேல் உலகம் போகவா முயற்சிப்பது. அதைப் பார்த்து ஒருவர் பதறக்கூடாதா. ஒருவர் செய்கிற தவறு அவருக்கு மட்டும் மரணம் கொடுக்காமல் மற்றவருக்கும் பெரிய இடைஞ்சல் கொடுத்து விடுகிறது. இடது பக்கம் ஓவர்டேக் செய்வது போன்ற கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை என்பது என் அபிப்ராயம். சந்து முனையில் லாரிகள், கார்கள், ஆ ட்டோகளை நிறுத்துதல் அடுத்தபடியான கேவலம். ஒரு தெருவில் திரும்பும் போது எதிரில் வரும் வண்டியை தெரியாமல் மறைக்க இம்மாதிரியான விஷயங்கள் தடை செய்கின்றன. போக்குவரத்தை மரியாதையாக மதிக்க கற்றுக்கொண்டால், போக்கும் வரத்தும் மிக எளிதாக இருக்கும். இல்லையெனில் நூற்றுகணக்கான விபத்துகள் ஒரு நாளைக்கு நிச்சயம். பட்டாலும் புத்தி வராத மனிதர்கள் இந்தியாவில் தான் நிறைய உண்டு.

நீங்கள் சமீபமாக பார்த்து ரசித்த படம்?



குறுந்தகட்டில் ஹோம் பாக்ஸ் ஆ பிஸ் என்கிற எச்.பி.ஒ.வின் “ரோம்” என்கிற டெலிவிஷன் சீரியல் பார்த்தேன். பன்னிரண்டு அத்தியாய ங்களாக ஜுலியஸ் சீஸர், மார்க் ஆ ண்டனி, புருட்டஸ் என்போரை வைத்து சாதாரண ரோமனிய போர்வீரர்களை மையமாக்கி, ரோமானிய பெண்களை முக்கியமான கதாப்பாத்திரம்
ஆ க்கி அருமையா டிவி சீரியல் செய்திருந்தார்கள். இதைப்போல நான் எழுதிய உடையார் என்கிற ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை சமூகப் பொறுப்போடும், கலை நயத்தோடும் எவ ரேனும் எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு வந்தது. தமிழர் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும் என்றால் மானாட மயிலாட என்று இருக்க முடியாது. சரித்திரம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். தமிழின் மேன்மை சரித்திரத்தில் இருக்கின்றது. வெறும் ஆ ட்டத்தில் இல்லை.

உங்களுக்கு பேண்டு வாத்தியம் பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். நாதஸ்வரம், தவிலை விட, தாரை தப்பட்டையை விட இந்த ஸாக்ஸபோன், பேண்டு வாத்தியம் மிகவும் காதுக்கு இதமாக இருப்பதாக என்னுடைய அபிப்ராயம். முன்பெல்லாம் வட்டமாக பீச்சில், பார்கில் நின்று இந்தப் பேண்டு வாத்தியக் குழு இசைக்கும்.
நல்ல கர்னாடக சங்கீதங்களை துல்லியமாக வாசிப்பார்கள். கர்னாடக சங்கீதத்தை பேண்டு வாத்தியத்தில் கேட்பது தனி சுகம். அது தயிர் சாதத்தை ஸ்பூனும், முள் கரண்டியுமாய் சாப்பிடுவது போன்ற அழகு.

கயிலாய மலையை போய் காசுக் கொடுத்து பார்த்து விட்டு அது வேறொன்றுமில்லை வெறும் பனி படர்ந்த மலை என்று என் நண்பர் சொன்னார். அவர் சொல்வது சரிதானா. வெறும் கல்லைப் பார்த்து கடவுள் என்று எப்படி பரவசப்படுவது?

பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற பெற்ற தாயைப் பார்த்துவிட்டு இது என்ன வெறும் எலும்பும், சதையும், நரம்பும், ரத்தமும் கலந்த ஒரு பிண்டம். இதைப் பற்றி அம்மா என்று கொண்டாட என்ன இருக்கிறது என்று எவனாவது சொல்வானா. தாய்மை போன்ற உணர்வுகள் தோற்றம் தாண்டியவை என்று அறியாதவன் மனிதன் தானா.

Sunday, July 27, 2008

அம்மா... பாலகுமாரனின் நினைவுகள்


‘தோடுடைய செவியன்’ அம்மா பாடினாள்.
‘டுடைய என்றால் என்ன?’ என்று நான் கேட்டேன்.
‘தோடு உடைய செவியன்’ என்று அம்மா பிரித்து சொன்னாள்,

அடடா!! இப்படித்தான் தமிழைப் பிரித்துப்படிக்க வேண்டுமா? எனக்கு எட்டு வயதில் தமிழை எப்படி பிரித்துப் படிப்பது என்பது புரிந்துப் போயிற்று. தமிழ் சிக்கலாக இருந்தாலும் எப்படி பிரிப்பது என்பதை நான் யோசித்துப் பார்க்க கற்றுக் கொண்டேன்.

அம்மா நாயன்மார் கதைகளை சொன்னார், திருவிளையாடல் புராணம் சொன்னார். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கினார். எனக்கு பத்து வயது. அம்மாவும் நானும் சமையற்கட்டில் இருந்தபடி பேசிக்கொண்டே இருப்போம். பலதும் நான் கற்றுக்கொண்ட இடம் சமையற்கட்டு.


‘பாலகுமாரனைப் பற்றி கவலைப்படாதே சுலோச்சனா அவன் விழுந்து புரண்டு எழுந்து வருவான். எல்லோருமே பிறக்கின்ற பொழுது ஞானியாக பிறப்பதில்லை.நடுவில் சில விஷயங்கள் மனிதர்களை மாற்றும். உயரத் தூக்கி வைக்கும்’ என்று என் உறவுக்காரர் என் முகத்தைப் பார்த்தப்படியே சொன்னார். ‘இவனைதானே மகாப்பெரியவாள் முன்னாடி போய் நிறுத்தினே’ என்று கேட்டார், அம்மா, ஆம் என்று தலை அசைத்தாள், அது பற்றி அம்மாவிடம் வினவினேன். சென்னை சமஸ்கிருத கல்லூரியில் மகாபெரியவாள் முகாமிட்டிருந்தபோது அங்கே தனியே அமர்ந்திருந்த அவரிடம் என்னை கொண்டு போய் நிற்க வைத்து நமஸ்கரிக்க சொல்லி, ‘நீங்கள் இவனை ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று அம்மா கேட்க, மகாப்பெரியவாள் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மறுபடியும் அம்மா மெல்ல போய் கேட்க 'நீ இவனை கருவுற்றிருக்கும் போதே தடவி தடவி ஆசீர்வாதம் செய்திருக்கிறாய். அது போதும், அது இவனை நல்ல இடத்திற்கு கொண்டு வரும்’ என்று அவர் சொன்னாராம். அம்மா இதை சொல்ல, உண்மையா என்று கேட்க, அம்மா சிரித்துக் கொண்டே நகர்ந்து போனார்.




கார்ட்டூன் என்ற சித்திர கதைகளை தன்னுடைய பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுப்பாள். முழு ஆங்கிலத்தையும் உரக்க படிக்க சொல்வாள்.நான் படிப்பில் சுமாராக இருந்தாலும், மொழிகள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட அவளே காரணம். பதிமூன்று வயதில் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கக் கொடுத்து, ஆழ்ந்து படி. உன்னை இது எங்கேயோ கொண்டு போகும் என்று சொன்னாள். சுற்றுசூழ்நிலை மறந்த ஒரு நிலைìகு கொண்டு போகும் என்று நினைத்து நான் அதைப் படித்தேன். எங்கேயோ கொண்டு போகிறது அம்மா என்று அவள் வாக்கியத்தை சொன்னேன். என்ன புரிந்தது என்று கேட்டாள். எல்லாம் புரிந்தது என்று சொன்னேன். எந்த இடம் பிடித்தது என்று கேட்டாள். வந்தியத்தேவனும் குந்தவையும் காதலித்த இடம் எனக்கு பிடித்தது என்று கூறினேன். ஏன் பிடித்தது என்று கேட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் பேச்சிலேயே காதலிக்கிறார்கள் என்று சொன்னேன். ‘பதிமூன்று வயதில் இது புரிந்துப் போயிற்றா நீ மிகவும் சிரமப்படுவாய். அதனால் என்ன. சிரமப்படுவதில் தவறில்லை. புரிந்து கொள்ளுவது தான் முக்கியம்’ என்று சொன்னாள்.



பதினாறு வயதில் இராமாயண சொற்பொழிவுக்கு போய் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் சில குறுக்கு கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்க, ‘அதற்கு உனக்கு வாழ்க்கை பதில் சொல்லும். நான் சொல்லமுடியாது. ஆனால் சபையில் தைரியமாகக் கேள்வி கேட்டதற்கு என் அன்புப் பரிசு’ என்று பெரிய மாலையை என் கழுத்தில் போட்டார். நான் அந்த மாலையோடு அம்மாவிடம் போய் நின்றேன். என் கழுத்தில் விழுந்த முதல் மாலை என்று அவள் வாய் திறந்து சொன்னாள். இ ன்று நல்ல நாள், உனக்கு மாலை போட்டவர் மிக நல்ல மனிதர், நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று ஆ சிர்வதித்தார். அ ந்த மாலை நாராகி என் வீட்டில் வெகுநாள் வரை தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் குப்பையில் போட அ ம்மா முயலவே இல்லை.




அப்பாவின் காட்டமான, ஆ த்திரமான, அசூயையான பேச்சிற்கு அம்மா பலமுறை இரையாகி இருக்கிறாள். ‘படிப்பு என்ன பெரிய படிப்பு, உன் படிப்புல நாய் .... ....’ என்ற வசவை அப்பா அடிக்கடி உபயோகப்படுத்துவார். ‘நான் வேறு என் படிப்பு வேறு.அதை ஏன் கேவலமாக பேசுகிறீர்கள்’ என்று அம்மா எதிர்த்த போது, ‘அப்படியா உன் படிப்பு தலையில இரண்டு அடி போடறேன், என்று சொல்லி அவள் கன்னத்தில் அறைந்தார். ‘நான் உன்னை அடிக்கலையே உன் படிப்பைதானே அடிச்சேன்’ என்று சொல்ல, நான் விக்கித்துப் போய் நின்றேன். முரட்டுத்தனமாய் அவரிடம் முட்ட முயன்ற போது, தடுத்தபோது, “முட்டினால் அவர்களுக்கு புரியாது, முரண்டு செய்தால் அவர்களுக்கு புரியாது.வாழ்க்கை அவர்களுக்கு பாடம் சொல்லித்தரும். முரடர்களை ஊன்றிக் கவனித்துப்பார், உன்னிடமிருந்த முரட்டுத்தனம் விலகும்” என்று சொன்னார்.



இருபத்தியோரு வயது. நான் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு ஒரு உறவினர் வந்தார். மின்சாரம் தடைப்பட்டதால் ஹரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்தோம். இதற்கு ஏன் ஹரிக்கேன் விளக்கு என்று பெயர் தெரியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. நான் யோசித்தேன் ஒளி நிரம்பியதால் இதற்கு ஹரிக்கேன் என்று பெயர் என்று சொன்னேன், புரியவில்லையே என்று சொன்னார். ஹரி என்றதால் ஒளி என்று பெயர் அதனால் இது ஒளி நிரம்பிய பாத்திரம் கேன் பாத்திரம். கெரசின் வாங்குகிற டப்பா என்பதாக நான் சொன்னவுடன் அவர் வாய்விட்டு சிரித்தார். ஹரிக்கேன் என்பது ஒரு புயல். அமெரிக்காவில் வீசும் புயலுக்கு ஹரிக்கேன் என்று பெயர். சியாவில் வீசும் புயலுக்கு சைக்லோன் என்று பெயர். ஹரிக்கேன் என்ற புயலை தாங்கும் வண்ணம் அமைத்ததால் இதற்கு ஹரிக்கேன் லேம்ப் என்று பெயர் என்று சொன்னார். வீடு விழுந்து விழுந்து என்னுடைய விளக்கத்திற்கு சிரித்தது, அம்மாவும் சிரித்தாள். எல்லோரும் போன பின்பு ‘உன்னுடைய விளக்கமும் நன்றாக இருந்தது என்று ஒளி நிரம்பிய பாத்திரம் ஹரிக்கேன் என்று சொன்னாயே. உன்னுடைய கற்பனை எனக்கு பிடித்திருக்கிறது’ என்று சொன்னாள். நான் தவறு செய்தாலும் என் அம்மா என்னை கிறங்கிப் போய் கேட்டிருக்கிறாள். இதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்; காதார அனுபவித்திருக்கிறேன்.




அம்மா என்பவள் மகள் வடிவம்; மகள் என்பவள் அம்மாவின் ரூபம் என்று உணர்ந்திருக்கிறேன். என் அம்மாவிற்கு வயதாகிவிட்டது. இந்த மார்கழி தாண்டாது, இந்த பொங்கலுக்கு உயிரோடிருக்க மாட்டேன், இந்த தீபாவளிக்கு நானில்லை என்றெல்லாம் பல நூறு முறை சொல்லி எண்பத்து மூன்று வயது வரை திடகாத்திரமாகவே வாழ்ந்தாள். மூப்பின் காரணமாகத் தான் ஹ்ருதயம் தவித்ததே தவிர பெரும் நோய் எதுவும் அவளை தீண்டவில்லை. அம்மா என் தங்கையோடு என் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இன்னொரு வீட்டில் இருந்தாள். என்ன தோன்றியதோ தெரியவில்லை.‘நான் உன்னோடு சில நாட்கள் இருக்கிறேன்’ என்று தனது பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து விட்டாள்.



என் வீடு விசாலமானது. அவளை அன்போடு ஏற்றுக் கொண்டது. என் மனைவியர் இருவரும் என் அம்மாவின் மீது அன்பு மழை பொழிந்தார்கள். அவளுக்கு ஓடி ஓ டி உதவிகள் செய்தார்கள். என் அம்மாவும் ஒரு தமிழ் பண்டிதையைப் போல பள்ளிக்கூடத்து ஆ சிரியைப் போல கம்பீரமாக அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டாள். வீட்டிற்கு வெள்ளை அடிக்க பேச்சு வந்த போது ஒரு மூன்று நாள் தங்கை வீட்டில் இருக்கிறாயா என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.பெரிய கோபம் வந்து விட்டது. ‘என்னை இங்கிருந்து ஒழித்து விட தீர்மானம் செய்து விட்டாயா. நான் இங்கிருப்பது பிடிக்கவில்லையா. நான் தண்டசோறு என்று நினைக்கிறாயா. உனக்கு நான் பாரமாக இருக்கிறேனா’ என்று வேகமாக வார்த்தைகளை அடுக்கினாள். என் அம்மாவின் குணம் இது. எப்பொழுது கொஞ்சுவாள், எப்பொழுது சீறுவாள், எதற்கு கொஞ்சுவாள், எதற்கு சீறுவாள் என்று கணிக்கவே முடியாது.




அம்மாவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து சமாதானப்படுத்தி, தூசு தும்பு இருக்குமே என்று சொன்னோம் என்று சொல்ல, அது பற்றி அக்கறை இல்லை என்று சொல்லி விட்டாள். வீடு வெள்ளையடிப்பு நடந்தது அம்மா அந்த தூசுக்கு நடுவே மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தாள். அந்த வேலையாட்களையும் அதட்டி வேலை வாங்கி கொண்டிருந்தாள். ‘எனக்கு இப்பத்தான் தெரிகிறது. நீ ஏன் போகமாட்டேன் என்கிறாய் என்று .கீழே வேலை செய்யறதுக்கு பத்துப்பேர் கிடைத்தால் போதும். உரத்தகுரலில் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கலாம் இல்லையா? டீச்சராகவே இருந்து பழகிடுச்சு இல்லையா?’ என்று கேட்க வாய் விட்டு சிரித்தாள். நான் அவளை கேலி செய்தாலும் அவளுக்கு பிடிக்கும்.

இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தடி ஊன்றி தன் கட்டிலை விட்டு இறங்கி ஹால் முழுவதும் நடந்து டைனிங் டேபிள் அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டாள். நாம் இரண்டு பேரும் சாப்பிடாலாமா என்று கேட்டாள். காலை சிற்றூண்டிக்கு என் எதிரே அமர்ந்து கொண்டாள். ‘இறப்பது என்றால் என்ன. மரணம் என்பது என்ன.மரணத்திற்கு பின் மனிதனுடைய நிலை எது.மரணம் வரும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டாள். நான் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன். ‘தெரிந்தால் சொல், தெரியவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம்’ என்று சொன்னாள். ‘எனக்குத் தெரியும், உனக்குத் தெரிய வேண்டுமா என்பது பற்றி யோசிக்கிறேன்’ என்று பதில் சொல்ல, ‘அதையும் நீயே முடிவு செய். எனக்கு தெரிய வேண்டாம் என்றால் வேண்டாம்’ என்று சொன்னாள், ‘இல்லை நான் சொல்கிறேன்’ என்று பதில் சொன்னேன். பதில் சொல்லும் போதே உள்ளே ஆ டிற்று. மரணம் பற்றியும், அது வருகிற விதம் பற்றியும், மரணத்திற்கு பின் மனதின் நிலை பற்றியும், மனம் எதனோடு சேர்ந்து கொள்ளும் என்பது பற்றியும் நான் மெல்ல விவரித்தேன். அம்மா அசையாமல் கேட்டு கொண்டிருந்தாள். மெல்ல பேச்சு முடித்து அவளைப் பார்த்தேன். அவள் பதில் கூறாமல் எழுந்து தன்னுடைய படுக்கைக்கு போனாள். குழப்பம் அடைந்து விட்டாளோ. கோபம் அடைந்து விட்டாளோ என்று தோன்றி நான் பின்னாலேயே போனேன். வேறு ஏதேனும் கேள்விகள் உண்டா என்றேன். இல்லை, எவ்வளவு அழகாக ஒரு விஷயத்தை சொல்கிறாய், எத்தனை தெளிவாக யோசிக்கிறாய், உன்னை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. உன் எதிரே அழுதால் நான் மரணத்திற்க்கு பயந்து அழுகிறேன் என்று நினைத்துக்கொள்வாய், நான் இப்படிப்பட்ட புத்திசாலியான பிள்ளையைப் பெற்றேனே என்று கண்கலங்குகிறேன். அதனால்தான் இங்கே வந்து விட்டேன். நீ போ. நான் கொஞ்சம் அழுகிறேன் என்று சொல்லி என்னை துரத்தி விட்டாள். எனக்கு அழுவதா? சந்தோஷப்படுவதா? தெரியவில்லை.

அம்மா இறந்தாள்.



நான் அழுதேன்.

அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர் தேவக்கோட்டை வா. மூர்த்தி வந்தார். அவரைப் பார்த்ததும் அம்மாவின் நினைப்பு அதிகரிக்க அழுதேன். தேவக்கோட்டை வா. மூர்த்தியை தனது இரண்டாவது மகன் என்று அம்மா அடிக்கடி சொல்வார். என்னுடைய சகோதரன் போன்ற நினைப்பு எழுந்ததால் அழுதேன். அம்மாவை வேனில் வைத்து அடையார் மின்சார சுடுகாட்டிற்கு எடுத்து போனோம். அம்மாவை அங்கு கிடத்தியிருந்தார்கள்.அடுத்த சிதைக்காக காத்திருந்தார்கள். அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்த படி, அம்மாவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன், மிக ஆ சையாய் அவள் நெற்றியை, முகவாயை, தோள்பட்டையை தொட்டு தடவி விட்டேன். எத்தனை அழகு,எத்தனை அமைதி, எத்தனை அனுபவம் என்று பெருமிதப்பட்டேன். அம்மாவை தண்டவாளம் போன்ற இடத்தில் வைத்து, வயிற்றில் வரட்டி வைத்து, மேலே கற்பூரம் வைத்து என்னை கொளுத்தச் சொன்னார்கள். சீதைக்கு தீ மூட்டியது போல அந்த கற்பூரத்தை ஏற்றினேன். அம்மாவை சடேர் என்று உள்ளே தள்ளினார்கள். நெருப்பு உள்ளே வாங்கி கொண்டது, அம்மாவை விழுங்க துவங்கியது. நான் கதறினேன்.



என்னைப் பலரும் தாங்கிப்பிடித்து சமாதானம் செய்தார்கள். அதற்கு பிறகு நான் அழவில்லை. ஏனெனில் அம்மா தனியாக இல்லை. என்னோடு இரண்டற கலந்து விட்டார். இன்றைய என் தமிழ் அம்மா எனக்கு பிச்சையிட்ட தமிழ். என் தமிழில் அம்மா இருக்கிறார்.

Sunday, July 20, 2008

சிலை சொல்லும் செய்தி - நான்கு

ஐயா, எப்பொழுதும் சோழர்காலத்து சிலைகள் பற்றியே பேசுகிறீர்கள். உங்களுக்கு வேறு தேசத்து சிலைகள் பற்றி எதுவும் தெரியாதா?



உங்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அதனால் என்னை தெரியாதா என்று கேள்வி கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்ததை, அதிகம் தெரிந்த உங்களுக்கு சொல்கிறேன்.


படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திற்கு பலமுறை போயிருக்கிறேன். ஹைதராபாத்து நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிலிம்சிட்டியில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், நேரம் கிடைக்கும்போது ஹைதராபாத்திற்கு வந்து அங்குள்ள சலார்ஜங் மியுசியத்திற்கு ஓடிவிடுவேன். சலார்ஜங் மியுசியத்தில் 'வேல் ஆப் ரபாக்கா' முகத்திரை அணிந்த ரபாக்கா என்கிற பெண்ணின் சலவை கல் சிற்பம் இருக்கும். இருநூறு வருடங்களுக்கு முன்பு செதுக்கிய ஒரு சலவை கல் சிற்பம். முகத்திரை அணிந்த அந்த பெண்ணின் மூக்கு, மூக்கின் குழி, கண்ணின் இமை, கண்ணின் விழிப்பு, கன்னம், உதடு என்று தெளிவாக தெரியும். முகத்திரையும் தெரியும், முகத்திரைக்கு உள்ளுக்குள் இருக்கிற அமைப்புகளும் தெரியும். எப்படி ஒரு சிற்பி இதை செதுக்கினான் என்று எனக்கு புரியவே இல்லை. சலவைகல்லின் காவியம் 'வேல் ஆப் ரபாக்கா'. தயவு செய்து ஹைதராபாத் போனால், கோவில்களுக்கு அப்புறம் போங்கள். சலார்ஜங் மியுசியத்தில் உள்ள இந்த சிலையை மட்டும் பார்த்துவிட்டு, நமஸ்கரித்து விட்டு வாருங்கள். தேவதையா என்று கேட்காதீர்கள். அற்புதமான கலைப் படைப்புகள் எல்லாமும் தேவதைக்கு சமானம். அதை படைத்தவன் கடவுளுக்கு சமானம்.

Saturday, June 28, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி - பாகம் 2

பாகம் ஒன்றைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.


கிருஷ்ணதுளசி : புராணக்கதைகளையும் எல்லோரும் அறிந்த தொண்டர்கள் வரலாறுகளையும் மறுபடியும் எழுதுகிறீர்களே? இதில் என்ன லாபம்?
பாலகுமாரன் : தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு புராணக் கதைகள் தெரிவதே இல்லை. அந்தப் புராணக் கதைகள் சொல்லப்படுகிற போதும் அதன் அடிப்படைத் தத்துவம் இங்கு விவாதிக்கப்படுவதில்லை.எதனால் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்று விளக்கப்படுவதே இல்லை. இங்கு உபன்யாசம் செய்கிறவர்கள் தருமர் அழுதார் என்றும், பீமன் கோபமடைந்தான் என்றும், அர்ச்சுனன் காதலித்தான் என்றும், கிருஷ்ணன் நடு நடுவே வந்து விட்டு உதவிகள் செய்து போகிறவன் என்று சொல்கிறார்களே தவிர நமக்குள் இருக்கின்ற இந்த தாபத்தை, கடவுள் தேடலை, உயிர் ஏக்கத்தை இந்த புராணக் கதைகள் எப்படி சொல்கின்றன எப்படி நிவர்த்திச் செய்கின்றன என்றும் நாம் சொல்லியாக வேண்டும். பஞ்சபாண்டவர்கள் என்பது பஞ்ச பூதங்கள். திரௌபதி என்பது உயிர். கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி புலன்களின் துணையோடு சரணடைவதே மகாபாரதம். இதை மகாபாரதம் நேரடியாக சொல்லாது. மறைமுகமாகத் தான் உணர்த்தும். இந்த உணர்த்தலை நான் கதையாக வேறு விதமாக இதன் அடிப்படை விளக்கங்களோடு பேச முற்படுகிறேன். இதுதான் முக்கியம்.

பெரிய புராணக் கதைகளை வெறுமே படித்தால் அதில் எந்த லயமும் இல்லை. ஆனால் போரில் ஈடுபட்டு பல பேரை வென்று வெட்டிக் கொன்று குவித்தவர், பிள்ளையை வெட்டு என்று சொன்னால் என்ன செய்வார் என்ற கேள்வி வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்தப் பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து உண்கின்ற அந்தக் கொடூரத்தை அவரை செய்ய வைக்கின்ற போது அவருக்குத் தன் கையால் வெட்டுப்பட்டவருடைய முகமெல்லாம் இங்கே நினைவுக்கு வரும். அ வருடைய நேர்மையை சோதிக்க இறைவன் செய்த நாடகம் அது.

மனைவிக்கு சத்திய வாக்கு செய்தாகிவிட்டது. தொடமாட்டேன் என்று சொல்லியாகிவிட்டது. அதை நெல்முனையும் மீறாமல் அதே சமயம் அப்படிப்பட்ட சத்தியத்தை வெளியேயும் சொல்லாது இருவரும் ஒன்றாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பண்பை எடுத்துச் சொல்ல வேண்டும். இது பெரிய சத்திய சோதனை. அதை நெல்முனையளவும் மீறாதவர்க்கு இறை தரிசனம் கிடைத்தது. இதை சொல்லியாக வேண்டும். வெறும் ‘தீண்டுவீராயின் திருநீலக்கண்டம்’ என்று சொல்வது யாருக்கும் எதுவும் புரியாது.

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு புராணத்தை, பழந்தமிழ் இலக்கியத்தை சங்கத்தமிழை அறிமுகப்படுத்தி நேர்வழியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு, அவர்களுக்கு பலம் தருவது என் வேலை. இதைச் செய்திருக்கிறேன்.


கிருஷ்ணதுளசி: எழுத்து மட்டுமல்லாது, மற்ற எல்லாக் துறைகளிலும் உள்ள கலைஞர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்ன?


பாலகுமாரன் : ஏன் கலைஞர்களை மட்டும் கேட்கிறீர்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை பொறாமை. பரஸ்பரம் மனிதருக்கு மனிதர் இருக்கின்ற அடிப்படையான விஷயமே பொறாமையாகத் தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் தருமருக்கும், யட்சருக்கும் ஒரு கேள்வி பதில் பகுதி நடக்கும். கலியுகத்தில் மக்களுடைய குணம் என்னவாக இருக்கும் என்ற யட்சன் கேள்விக்கு, கலியுகம் முழுவதும் மக்கள் பொறாமையால் அவஸ்தைப்படுவார்கள் என்று தருமர் பதில் சொன்னார். அந்த பதில் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. இன்னமும் இருக்கும் என்றும் தோன்றுகிறது.
பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலஹீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்ற கேள்வி வரலாம்.தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். பலர் சொந்த வாழ்க்கை அழுகிப் போவதற்கு பொறாமைதான் காரணம்.

இந்தப் பொறாமை மற்றவரை காயப்படுத்துவது மட்டுமல்ல, யார் பொறாமைப்படுகிறாரோ அவருடைய வளர்ச்சியை மிக பெரிதும் பாதிக்கிறது. சரியாக சிந்திக்க முடியாமல் தடுக்கிறது. கற்பனைத் திறனை அறவே அழித்து விடுகிறது. நல்ல விஷயங்களைப் படைக்கும் திறனை அழித்து ஒழித்து விடுகிறது. எனவே வெட்டி அரட்டையில், வீண் விவாதிப்பதே, பிறரை குறை சொல்லி எழுதுவதே தன் நோக்கமாகவும், அதுவே ஞானமாகவும் போய்விடுகிறது. தெளிவான ஒரு ஞானி எது குறித்தும் எப்பொழுதும் எவர் மீதும் பொறாமைப்பட மாட்டார். ஆனால் பொறாமை தான் ஞானம் என்றே இங்கு பல அறிவுஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருடைய படைப்புத்திறன் குறைந்து போனால் அவருடைய நடுநிலைமை உடைந்து போகிறது. நடுநிலைமை உடைந்து போனால் படைப்புத்திறன் குறைந்து போகிறது. அப்பொழுது மற்றவரை குறை சொல்வது என்பதும், ஏகடியம் பேசுவதும் இயல்பாய் போகிறது.

நடுநிலைமை என்கிற விஷயம் மிக ஆரோக்கியமானது. அது சொந்த வாழ்க்கையை சீராக ஆக்குவது மட்டுமில்லாமல் படைப்புத்திறனை மிகப் பக்குவமாகவும், சிறப்பாகவும் கொண்டு வந்து கொடுக்கிறது. சிறப்பான படைப்புகள் எந்த முயற்சியும் இன்றி பாராட்டுகளைக் குவிக்கும். காலம் கடந்து நிற்கும். படைப்பாளிக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்.

கிருஷ்ணதுளசி: இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே। இது புது டிரண்டாக இருக்கிறதே। இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா. ........................தொடரும்

Thursday, June 5, 2008

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா - பதிலளிக்கிறார் பாலகுமாரன்

ஐயா , பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?




ஆமாம்।



ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும்। எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம்। கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும்। அந்தப் பெண் இரை என்று தோன்றும்। மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।


அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.



தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை வேகமாக மூடிவிடுகிறார்களே. ஏன் இது?

பொதுவாக சவ ஊர்வலம் வரும்பொழுது கோவில் கதவை மூடுவது தீட்டுபடக் கூடாது என்று சொல்வார்கள். யாருக்கு தீட்டு கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா? இல்லை.

மனதில் ஒரு குறைபாடு வரக்கூடாது என்று இந்த விஷயம் நடைபெறுகிறது। அந்த பிணத்தோடு போகிறவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார்। தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண்டிருக்கிறேனே, என்னுடைய சகோதரனை அல்லது தகப்பனை, அல்லது மகனை, அல்லது நெருங்கிய உறவினனை, நண்பனை பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டாயே। நீ தெய்வமாக இருந்தும் எனக்கு இப்பேர்ப்பட்ட துன்பம் வந்ததே என்று அந்த இடத்தை கடக்கும் போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவநம்பிக்கை வரும்। கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்।

வேதனைப்படுகின்ற நேரத்தில் கடவுளைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது. அது வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சட்டென்று மறைக்கிறார்கள். அந்த இடத்தைக் கடக்கும் போது வெறும் கதவைப் பார்த்துக் கொண்டு அவர் போவார். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை அவரிடம் அசையாது இருக்கும். அவநம்பிக்கை வராது இருக்கும் என்பதுதான் உண்மையான் ஐதீகம்.


வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே? இது சரியா?

சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம். ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற சௌகரியம். கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை. வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க நிறைய பேர் பார்த்திருக்கிறேன். துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம் இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது. தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும் தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும் இருக்கும்.


காமத்தை அடக்குவது எப்படி?

காமத்தை அடக்குவது என்பது முடியாத காரியம். எது அடக்கினாலும் அது மறுபடியும் சீறி எழும். காமத்தை அறிந்துக்கொள்வது தான் காமத்தை அடக்குகின்ற ஒரே வழி. காமத்தை அறிவது எப்படி? இதற்கு தனி கேள்வி கேளுங்கள். தனியாக பதில் தருகிறேன்.

Monday, June 2, 2008

புத்தக மதிப்புரை – “காதலாகிக் கனிந்து”



மே25, ஞாயிறு – 2008 தினமலர் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகி இருக்கும் எழுத்துச்சித்தரின் "காதலாகிக் கனிந்து" புத்தகம் பற்றிய பார்வை.............
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காதலாகிக் கனிந்து… ஆசிரியர்: பாலகுமாரன், வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ், 16, வெங்கட் நாராயணா சாலை, தி।நகர். சென்னை-17 (பக்கம்:472, விலை ரூ.150)

திருவண்ணாமலையில் ஆன்மிக சான்றோர் பலர் அற்புதம் நிகழ்த்தியுள்ளனர்। சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி என வாழ்ந்த அந்த திருத்தலத்தில் யோகிராம் சுரத்குமார் அவர்களும் தங்கியிருந்து அன்பர்கள் பலருக்கு வழிகாட்டி அருள் பாலித்த அற்புதமான ஞான புருஷர்। அன்பர்கள் பலரால் விசிறி சாமியார் என நேசத்துடன் அழைக்கப்பட்ட மகானின் அன்புப் பார்வைக்கு ஆட்பட்ட பக்தர்கள் பலர், கற்றறிந்த மேதைகள், உயர் பதவியில் இருந்த நாணயமும், நேர்மையும் அணிகலனாகக் கொண்ட ஆன்றோர், உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதி அரசர்கள், பிரபல எழுத்தாளர்கள் என சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் அடக்கம்। படைப்பிலக்கிய வாதியாக தமிழ் கூறும் நல்லுலகில் அதிகம் அறியப்பட்டுள்ள பாலகுமாரன் அண்மைக்காலங்களில் ஆன்மிகச் சான்றோர்களின் வாழ்க்கை சரிதங்களை கதைபோல தனக்கே உரித்தான தமிழ் நடையில் எழுதி வருகிறார்। யோகிராம் சுரத்குமாரின் அன்புக்குரியவரான பாலகுமாரனின் பேனா ஒரு ஆன்மிக உரைநடை காப்பியத்தை தமிழுக்கு வழங்கியிருக்கிறது. பாலகுமாரனின் சொந்த வாழ்க்கைப்பயணம், அவர் அதில் எதிர் கொண்ட வித்தியாசமான அனுபவங்கள், அவருடைய வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவங்கள் என பக்கங்கள் வளர வளர யோகிராம் சுரத்குமாருடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு, யோகியை குருவாக ஏற்றுக்கொண்ட அவர் மனப்பக்குவம் என, பாலகுமாரனின் இதய நெகிழ்ச்சியுடன் கூடிய எழுத்துடன் நாம் நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு விடுகிறோம். ஒரு குருவுடன் ஒரு சிஷ்யனுக்கு ஏற்படும் அருளாசி அனுபவம் இந்தப் புத்தகத்தில் சிறப்பாக பதிவு செய்யப்படுள்ளது. பாலகுமாரனே குறிப்பிட்டுள்ளது போல, அவருள் புகுந்து யோகிராம் சுரத்குமார் எனும் சத்குருநாதன் தான் இந்தப் புத்தகத்தை எழுத அருள் புரிந்திருக்கிறார் என்று நமக்கும் சொல்லத் தோன்றுகிறது- - ஜனகன். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி தினமலர். மே 25 2008.



புத்தகத்தின் நேர்த்தியான நெசவில் மதிமயங்கி விட்டதாலோ என்னவோ “காதலாகிக் கனிந்து” என்ற பெயரை “காதலாகிக் கசிந்து” என்று மாற்றி பிரசுரித்துவிட்டிருக்கிறார்கள். பிழை பொறுப்போமாக ..

Wednesday, May 21, 2008

சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்..

சீனாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் முப்பத்தியிரண்டாயிரம் பேர் இறந்தனர். பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18/5/2008 அன்று மீண்டும் 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து விட்டதாகவும், அணுஆயுதம் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீன நகரான கிங்சுவான் நகரில் தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக அங்குள்ள நாய்களை கொல்ல அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிசூவான் பகுதியில் உள்ள ஏரி உடையும் கட்டத்தில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் நில அமைப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தினமலர் 19 & 20/05/2008

ஐயா,


“இந்தியாவின் ஈசானியத்தில் இருக்கும் திபெத்தில் சீனா தவறாக கால் வைத்து விட்டது. திபெத்தை அடக்க முடியாது. திபெத்தில் அத்து மீற முடியாது. திபெத்தில் ஆ ளுமை எந்த விதமாகவும் செய்துவிட முடியாது. அங்கே தவறாக நுழைந்தவர்கள், தப்பாக இருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். சீனா தாக்கப்படும் என்பதற்கு திபெத்தில் நடந்த சில விஷயங்கள் சொல்கின்றன. இஸ்லாமியர்களோ, பிரிட்டிஷ்காரர்களோ திபெத்தை சீர் குலைக்கவேயில்லை. சீனர்கள்தான் முதன் முதலில் செய்து இருக்கிறார்கள். அனுபவிப்பார்கள்.”


- திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில் – ஏப்ரல் 21 , 2008

" சீனா தாக்கப்படும் என்பதற்கு அர்த்தம் போர் மூளும் என்பதல்ல. ஒலிம்பிக் நடக்கும் போது அங்கங்கே நடக்கும் கலவரங்களாகவும் இருக்கும். இதற்குக் காரணம் ரகசியமாகக் கனன்று கொண்டிருக்கும் கம்யூனிஸ எதிர்ப்புப் பட்டாளமாகவும் இருக்கலாம். அல்லது எங்கு விழா நடந்தாலும் சீர் குலைக்கும் மதவாத வன்முறைக் கும்பலாகவும் இருக்கலாம். திபெத் ஒரு சூட்சும பூமி. அங்கு வன்முறை செய்தது தவறு. இதற்கு விளைவுகள் உண்டு. என்ன ஆதாரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் அனைவரும் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டியது தான். இதை நான் தொடை தட்டி ஆர்ப்பரிக்கவில்லை. என் உள்ளுணர்வில் ததும்பி வழிந்ததைச் சொல்கிறேன்”

- திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில் - மே 7, 2008

திபெத் பற்றி நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. திபெத்தை சீனா தொட்டது தவறு .அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தெளிவாக சொல்லியிருந்தீர்கள். சீனாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு முப்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இருபத்தியேழாயிரம் பேருக்கு மேல் காணவில்லை. உண்மையான தொகை கடைசி வரை சொல்லப்படமாட்டாது என்றும் சொல்கிறார்கள். ஒரு தேசத்தில் ஒலிம்பிக் நடக்க இருக்கின்ற நேரத்தில் இது மிகப் பெரிய வேதனை. அவமானம். இதே கருத்தை மேலும் சில வாசகர்களும் எதிரொலித்திருக்கிறார்கள். இந்த துக்ககரமான சூழ்நிலையில் இன்னும் விளக்கமாக திபெத்தைத் தொல்லைப்படுத்தியதால் சீனாவிற்கு ஏற்படும் பாதிப்புப் பற்றி சொல்ல முடியுமா ?

சீனா ஒரு சர்வாதிகார நாடு. கம்யூனிஸ்டுகள் அந்த சர்வாதிகாரத்தை தொழிலாளர் சர்வாதிகாரம் என்று சொல்வார்கள். சர்வாதிகாரம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது வெகு நிச்சயம் நசுக்கப்படும். கிழித்தெறியப்படும். இதுதான் ரஷ்யாவில் நடந்தது. விரைவில் சீனாவிலும் இந்த தொழிலாளர் சர்வாதிகாரம் என்கிற கம்யூனிஸ்ட் இயக்கம், மாவோயிஸம் சிதறடிக்கப்படும். இந்த சர்வாதிகாரப் போக்கு உள்ளவர்கள் அமைதியாக இருப்பவர்களை , ஆயுதங்கள் இல்லாதவரை, போர் முனைப்பு அற்றவரை பெரிதாகக் கேலி செய்வார்கள். ஆயுதங்களே சர்வாதிகாரத்தின் ஆணிவேர் என்பதால், போர் என்பதே அடக்குமுறை என்பதே சர்வாதிகாரத்தின் செயல்திறன் என்பதால் இந்த அடக்குமுறையும் ஆயுதங்களும் இல்லாதவரை அவர்கள் இ ழிவாகப் பார்ப்பார்கள்.

இ து தவிர சீன மக்களுக்கு ஒரு கலாசாரக் குறைபாடு உண்டு. தங்கள் உருவம் குறித்தும்,கண்கள் குறித்தும், நிறம் குறித்தும் அவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். அதை மீறுவதற்காக மிகுந்த உக்கிரத்தோடும், வன்முறையோடும் தங்களை நிரூபிக்கின்ற செயலுக்குத் துடிப்பவர்கள். ‘உன்னை விட நான் உயர்வு’ என்று சொல்வதற்கு மற்ற எல்லா தேசத்தினரையும் விட சீன மக்களுக்கு ஆர்வம் அதிகம். இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி சீனத்து அரசாங்கம்,அதிகாரிகள் மிகப் பலமாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தால் தான் அவர்கள் ஆக்ரமிப்பு அட்டகாசத்தை தொடர்ந்து பல இடங்களில் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த சீனர்களுக்கு ஜப்பானியர்கள் என்றால் பயம். ஜப்பானியர்களுக்கு சீனர்களை விட தாங்கள் உயர்ந்த ஜாதியினர்; உயர்ந்த வகுப்பினர் என்ற இறுமாப்பு உண்டு. ஜப்பானால் சீனா பல முறை மிகப் பலமாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. அப்படி கண்டிக்கக்கூடிய இடங்களில் சீனா வாலாட்டாது. எதிர்த்துப் பேசாது. எந்த தொந்தரவும் செய்யாது. சில சமயம் அதீத விசுவாசியாகக் கூட நடந்து கொள்ளும். ஆனால் அமைதியாக இருக்கின்ற ஆயுதம் இல்லாத திபெத்திற்குள் புகுந்து தேவையில்லாத முறையில் அவர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தார்கள். சீனா திபெத்தைக் கபளீகரம் செய்தது. உலக நாடுகள் சீனாவின் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் உதவி தேவை என்பதால் இதைக் கண்டுகொள்ளவில்லை. திபெத்தும் தன் குரலைப் பெரிதாக உயர்த்தவில்லை. தலாய் லாமாவே சீனாவுடன் சமாதானமாகப் போவதற்கே தயாராக இருந்தார்.


ஆனால் திபெத் ஆயுதம் இல்லாத நாடு அல்ல. இரும்பு ஆயுதங்களை விட , துப்பாக்கிகளை விட , குண்டுகளை விட அங்குள்ள துறவிகள் மிக வேகமானவர்கள். அடிபட்டு மிதிபட்டு ரத்தம் வழிய கிடக்கின்ற தன் தேசத்தைப் பார்த்து ஏதேனும் ஒரு இடத்தில் அவர்கள் அமைதியாக உட்கார்ந்து மன துக்கப்பட்டு மன ஒருமையோடு பிரார்த்தனைகள் செய்தால், மந்திர ஜபங்கள் செய்தால் அதன் விளைவுகள் மிக மிக மோசமானதாக இருக்கும். அது பல நூறு டாங்கிகளை விட, பல ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளை விட,போர் விமானங்களை விட மிக வலிமைப் பொருந்தியது. சீனாவிற்கு வன்மையான ஆயுதங்களோடு தான் பரிச்சயம் உண்டே தவிர இந்த வித பிரார்த்தனைகளில் ,மனம் ஒருமுகப்பட்ட மந்திரஜபங்களில், அ தன் பிரயோகங்கள் பற்றி எந்த ஞானமுமில்லை. அவைகளை வெகுகாலம் முன்பே சீனா இழந்து விட்டது. இந்த திபெத்தை மிதித்து அடக்கிய , வன்முறை காட்டிய கொடுமை இன்னும் பல மோசமான விளைவுகளை சீனாவில் ஏற்படுத்தும். சீனாவில் ஒலிம்பிக் நடத்துவது கூட ஒரு வகையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த மக்கள் தங்கள் கலாச்சாரமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தாண்டி வேறு மக்களை, வேறு கலாச்சாரங்களைத் தரிசிக்கப் போகிறார்கள். அது அடுத்தத் தலைமுறையினரிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து வெறும் வன்முறைக் கும்பலாய், வெறும் சர்வாதிகார ஆட்டமாய் சீனா இருக்க முடியாது. ஒலிம்பிக்கை நடத்த சீனா விழைவது ஒரு அகம்பாவத்தினால் தான். அது என்னென்ன விதமான உளமாறுதல்களை, உடை மாறுதல்களை சீனாவில் ஏற்படுத்தும் என்பது பற்றி ஆ ழ்ந்து சிந்திக்கவில்லை.

எளியவரை வலியவர் அடித்தால் வலியவரைத் தெய்வம் அடிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. மாஸ்கோவின் இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டதும் ரஷ்யா சிதறுண்டு போயிற்று. சீனா இதை விட மோசமான நிலையை அனுபவிக்கும்.

Thursday, May 15, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி

ஊஞ்சலின் ஒரு உந்துதல் இன்னொரு உந்துதலை உருவாக்குவதைப் போல இந்தப் பேட்டிப் பகுதி ஒரு கேள்விக்குண்டான பதில் இன்னொரு கேள்வியைத் தோற்றுவித்து, அதற்குண்டான பதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பும் விதமாய் அமைந்திருக்கிறது. மனதை உற்சாகப்படுத்தி, புத்தியை குளுமையாக்கும் ஒரு ஊஞ்சலின் அசைவு போல ஆரோக்கியமான கேள்வியும், அர்த்தமுள்ள பதிலுமாய் இந்தப் பகுதி இருப்பதால் இது பொன்னூஞ்சல்.







கிருஷ்ணதுளசி: எழுத்துப்பணி உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? ஆமெனில் எதனால் இந்த திருப்தி ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?




பாலகுமாரன் : என் எழுத்துப்பணி எனக்கு மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கிறது. நான் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்து திட்டமிட்டிருந்தேனோ, அதை மிகச் செவ்வனே செய்திருக்கிறேன். சில சமயம் என் எழுத்துகள் நான் நினைத்ததையும் விட மிக அழகாக என்னிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது என் எழுத்தை நான் படிப்பதால் ஏற்படும் திருப்தி மட்டுமல்ல. என் எழுத்தைப் படித்த வாசகர்கள், என்னிடம் எதிரொலிப்பதால் ஏற்பட்ட சந்துஷ்டியும் கூட.

என்னுடைய எழுத்தை ஆரம்ப காலத்திலிருந்து படித்து, என்னுடனே வளர்ந்து, என் பரிணாம வளர்ச்சிப் போல அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, என்னுடைய எழுத்துகளை தனக்கு, தன் வாழ்க்கையில் சாதகமாய் உபயோகப்படுத்திக் கொண்டு வளர்ந்து பலம் பெற்ற வாசகர்கள் பலர். இதை நேரடியாகவும், கடிதம் மூலமும் பல நூறு முறைகள் கேட்டும், படித்தும் நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

உங்களால் என் வாழ்க்கை செம்மை ஆயிற்று. தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை உதறிவிட்டு நான் வாழ்ந்தேன். என்னுடைய குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு, எனக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதற்கு உங்கள் எழுத்துதான் காரணம் என்றெல்லாம் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். ஒரு படி மேலே போய் தன் குழந்தைக்கு பாலா என்று பெயரிட்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது என்னை சந்தித்தாலும் கை கூப்பி மிகப் பரவசமாய் நமஸ்கரிக்கிறார்கள். எத்தனை எழுத்தாளர்களுக்கு இது கிடைத்தது என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கு, என் வாழ்க்கைக்கு உதவி செய்தது என்ற வாசகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் என்னிடம் இருப்பதை நான் உணருகிறேன்.

ஆனால் வலது என்று ஒன்று இருந்தால் இடது என்று ஒன்றிருக்கும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். இந்த உலகம் த்வந்தமயமானது; இரண்டானது. என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாக படித்தவிட்டு அல்லது வேறு எவ ரேனும் படிக்கக் கேள்விப்பட்டு அதைத் தான் படித்ததாய் நினைத்துக் கொண்டு பாலகுமாரன் இப்படி எழுதுகிறார், அப்படி எழுதுகிறார் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.

நம்முடைய தமிழ் இலக்கியத்தில் சரியானபடி படித்துவிட்டு விமர்சனம் செய்கிற ஒரு பாங்கு வளரவே இல்லை. அபிப்ராயங்கள் தான் அல்லது புத்தகத்தைப் பற்றிய மேலோட்டமான செய்திதான் வலம் வருகின்றன. விமர்சனக் கலை என்பது தமிழில் இல்லவே இல்லை. அப்படி சிலர் ஆரம்பித்தும் அது அடாவடித்தனத்தில்தான் முடிந்தது. உண்மையாக இல்லை. விமர்சனம் இல்லாது போயினும், நல்ல வாசகர்கள் தமிழில் இருக்கிறார்கள். புத்தக திருவிழாவில் புத்தகம் விற்பதும், அடிக்கடி புத்தகத் திருவிழா நடப்பதும் நல்ல படிப்பாளர்கள் பலமாக வளர்வதும் இதற்கு நல்ல உதாரணங்களாக கொள்ளலாம்.


கிருஷ்ணதுளசி: நீங்கள் ஆரம்பத்தில் பாலியல் பற்றி எழுதுவதாகவும் இப்பொழுது ஆன்மீகம் பற்றி எழுதுவதாகவும் முற்றிலும் மாறுபட்டதாகவும் குறை சொல்கிறார்களே சில வாசகர்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




பாலகுமாரன் : நான் நுனிப்புல் மேயும் வாசகர்கள் என்று சொன்னது இவர்களைப் பற்றித்தான். பாலியல் பற்றி நான் மிகக் குறைந்த அளவில் தான் எழுதியிருக்கிறேன். பாலியல் வாழ்க்கையில் மிக ஆதாரமான விஷயம். நிறைய பேர் திருமண வாழ்க்கை இங்கு குப்பைத் தொட்டியாய் போனதற்கு காரணம் பாலியல் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாததும், பெண்களை அன்பாக அணுகாததும் தான் காரணம். ஆண் என்ற மமதை, அலட்சியம் அல்லது ஆணாதிக்கம் என்று எகிறுகின்ற பெண்கள் எண்ணிக்கை அதிகமானதும் காரணம். இந்தப் பாலியல் குளறுபடிகள் வாழ்க்கையில் இருப்பதை நான் கண்ட பிறகு எப்படி இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை செய்து இது தொடர்பாக வெகு சில கதைகளே எழுதியிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை, வேலை, வருமானம், குழந்தைகள், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பர்கள் என்றெல்லாம் நகர்ந்து அதிலே பெண்களுடைய பங்கும், ஆண்களுடைய பங்கும், காமத்தினுடைய பங்கும் என்னவென்று யோசித்து எழுதியிருக்கிறேன். வெறும் பாலியலோ, வக்கிரமான பாலிய லோ நான் எழுதியதில்லை. பாலியல் விஷயத்தில் தவறான அணுகுமுறை முகத்தில் அடித்து வீழ்த்தும் என்பதை சொல்லுவதற்காகவும் சில கதைகள் எழுதியிருக்கிறேன்.

பாலியல் மட்டுமே எழுதியிருக்கிறேன் என்ற பார்வை வக்கிரமான பார்வை. அப்பா அம்மா கதை தானே எழுதியிருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வது படிப்பின்மை. படித்தது பற்றிய தெளிவின்மை. இவர்கள் தான் நுனிப்புல் மேய்ந்து விட்டு, மேலாக படித்து விட்டு, என் எழுத்தை சரியாக அணுகாமல் புறம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் எவரையாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது சிலருடைய வாழ்க்கை. இவர்கள் தானும் உருப்படியாக செய்ததில்லை. மற்றவர் உருப்படியாக செய்ததையும் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய பரிணாம வளர்ச்சி என்னவோ அதைத் தான் என் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

இருபது வயதில், இருபத்தி ஐந்து வயதில், பெண் ஒரு பிரமிப்பாகவும் மிக அவசியமானதாகவும் இருந்தது. இது மெல்ல மெல்ல மாறி பல்வேறு விதமான உருவகம் எடுத்து குழந்தைகளோடு கூடிய ஒரு தாய். அவள்தான் மனைவி என்ற அழகும் சேர்ந்தது. திருமணத்திற்கு நிற்கின்ற பெண்களைப் பற்றி கவலைப்படுகின்ற கணவன் மனைவியாக இருப்பவர்கள் பற்றிய கதைகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பாலியல் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட விஷயம். பெண்கள் போகப் பொருளாகக் கருதப்பட்ட விஷயம். இதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மிகச் சில கதைகள் எழுதியிருக்கின்றேனே தவிர என் எழுத்துகளில் பலவும் பல்வேறு விதமான கோணங்களைக் கொண்டவை. தன்னைத் தேடுபவை. ஆத்ம விசாரம் கொண்டவை. தனிமையை ரசிப்பவை. மற்றவர்களுக்கு எளிதில் உண்மையாக விட்டுக் கொடுப்பவை. போலித்தனத்தைச் சாடுபவை. சத்தியமாக வாழ்க்கையில் இருக்கின்ற சந்தோஷத்தை இனம் காட்டுபவை. இதைப் புரிந்து கொண்டு இதை நன்றாக என் கதைகள் மூலம் அறிந்துக் கொண்டு தனக்குள் விவாதித்து தெளிவு பெற்று தேர்ந்த வாசகர்கள் எனக்கு
மிக அதிகம். அதனாலேயே நான் கொண்டாடப்படுகிறேன். அதனாலேயே பலர் பொறாமைக்கும் ஆளாயிருக்கிறேன்.

என் ஆன்மீகம் என்பது மிக ஒழுங்கான, சீரான வளர்ச்சியைக் கொண்டது. ஆன்மீகம் திடுமென்று நான் எழுதவில்லை. என்னுடைய முதல் கதையிலேயே கூட ஆன்மீகம் கலந்திருக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளிலே கூட கடவுள் தேடல் என்ற விஷயத்தினுடைய சாயல் உண்டு.பாசுரங்களூம், தேவாரங்களும் மேற்கோள் காட்டுவது மட்டுமல்லாது,எல்லோராலும் கொண்டாடப்படும் நான் எழுதிய குதிரை கவிதைகளில் கூட இந்த ஆன்மீகத் தேடல் மிகப் பலமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவலான இரும்பு குதிரைகளிலேயே இந்தக் குதிரைக் கவிதைகள் இடம் பெற்று விட்டன. இந்த ஆன்மீகம் எனக்கு என்னுடைய தாயாரால் அ றிமுகபடுத்தப்பட்டு, பல புத்தகங்களால் பலமாக்கப்பட்டு, என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் பூரணமாக்கப்பட்டது. குருவருளால் எனக்குள் மிகப்பெரிய மலர்ச்சியை, என் இருப்பை, என் உயிர் அசைவை, எனக்குள் இருக்கின்ற அந்த ஆன்மாவின் தரிசனத்தை, கடவுள் சிறப்பை நான் மனமார உணர்ந்தேன். பல்வேறு ஆன்மீக அனுபவங்களுக்கு ஆட்பட்டேன். அவைகள் தான் என் எழுத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது குடும்ப வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டது, தள்ளி நிற்பது, துறவறம் போன்றது என்ற விஷயத்தை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை; சொன்னதுமில்லை. உலக வாழ்க்கையில் புரண்டு விழுந்து தன்னை இடையறாது அவதானிப்பதே என்னுடைய கொள்கை. அந்த அவதானிப்பைக் கூர்மையாக்கிக் கொள்ள என்னவெல்லாம் தேவை என்பதை நான் சொல்லியிருக்கிறேன்.

என்னுடைய ஆன்மீகம் கற்பனையானது அல்ல. நான் அனுபவித்தது. எனக்கு தெளிவாக ஊட்டப்பட்டது. என்னிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய சத்தியம் அது. அ து வாழ்க்கையோடு இரண்டற கலந்திருக்கும் விஷயம் என்று நான் சொல்வது இன்று புரிந்துக் கொள்ளப்படாவிட்டாலும் பிறகு ஒரு நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதில் எனக்கு நெல்முனையளவும் ஐயம் இல்லை.

Thursday, May 8, 2008

ஐயா , உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா? - பதிலளிக்கிறார் பாலகுமாரன்

ஐயா , உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?



உலகத்தில் இதைவிட முட்டாள்தனமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. ஒரு வீடு மதுரையாக இருந்தால் என்ன. சிதம்பரமாக இருந்தால் என்ன. அந்த வீட்டிற்குள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள். என் வீடு ஒரு பொழுது சிதம்பரம், ஒரு பொழுது மதுரை. எந்த நேரம் சிதம்பரம், எந்த நேரம் மதுரை என்பது உமக்கு சொல்வதற்கில்லை. இப்படித்தான் எல்லா வீடும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.




பசுவை ஏன் தெய்வமாக கொண்டாடுகிறார்கள்?

பசுவின் பால் உணவோடு சம்ப ந்தப்பட்டது. உணவு உயிர் வாழ்தலோடு சம்ந்தப்பட்டது. உயிர் வாழ்தலோடு சம்ந்தப்பட்ட எல்லா விஷயங்களும் தெய்வம்தான். பசு மட்டும் அல்ல, பூமியும் தெய்வம்தான். உயிர் வாழ அதுதான் உணவு தருகிறது. அப்பொழுது ஏன் பாம்பை வணங்குகிறார்கள். அதுவும் உயிர் வாழ்தலோடு சம்மந்தப்பட்டதுதான். பாம்பு கொத்தினால் உயிர் வாழ முடியாது.




ஐயா ,நமீதாவின் தமிழ்....?



கொஞ்சும் சலங்கை. குழறும் தமிழ்.
சொல்லும் அதன் பொருளும் ஒன்றாக வெளிப்பட்டு மற்றவருக்கு புரிய வைக்கவேண்டும். நமீதா பேசுவது நமக்கு புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் சொல்லும், பொருளும் குழறலாக இருந்தால் தவறில்லை. கொஞ்சலாக இருக்கும்போது காதுக்கு இதமாக இருக்கிறது.

Tuesday, May 6, 2008

சில சந்தேகங்கள் – சில விளக்கங்கள்


பாலகுமாரன் அவர்களே , நீங்கள் நேரடியாக, வெளிப்படையாக இந்தப் பதிவை எழுதலாமே , ஏனிப்படி ஒரு முகமூடிக்குள்ளிருந்து எழுத விரும்புகிறீர்கள் என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு எங்கள் பதில் இதோ…………..


அறிவன் அவர்களுக்கு வணக்கம்.



ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தபடி இ ந்த வலைப்பக்கங்கள் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களாகிய எங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.



நாங்கள் பாலகுமாரன் எழுத்துக்களை நன்கு படித்தவர்கள். விரும்பி அனுபவித்தவர்கள். அவருடைய எழுத்துக்களை நேசித்து ஜீரணித்து உரம் பெற்றவர்கள். தெளிவு பெற்று அவரவர் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள். செம்மை அடைந்ததாலேயே நன்றி பகர அவரைத் தொடர்பு கொண்ட போது நேரடியாக பல விஷயங்களுக்கு விளக்கங்கள் பெற்று மேலும் தெளிவு பெற்றவர்கள்.

எங்களைப் போல திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்கள் மூலம் ஒரு நல்ல பக்குவத்தை மற்ற வாசகர்களும் அவர் எழுத்தை புரிந்து கொண்டு அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் எழுத்துக்களைக் கொண்டாடும் பல வாசகர்களை மேலும் உற்சாகமூட்டுவதற்காகவும் இந்த வலைப்பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திரு. பாலகுமாரன் எல்லோரோடும் சகஜமாகப் பேசிப் பழ க மாட்டார் என்பது பலரும் அறிந்ததே. அளவாகவே பேசுவார். ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் கேள்விகள் கேட்டால் பதில் கங்கை எனப் பொங்கிப் பாயும். கேட்ட அடுத்த வினாடியே பதில் ஆ ரம்பித்து விடும். கேள்விக்கு அப்பாலும் போய் அவர் சொல்லும் விளக்கங்கள் அற்புதமானவை.

மழை பொழிவது போல் விளக்கி முடித்த பின் அதை பதிவு செய்து கொடி பறக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு நாளும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட முயற்சிகளையும் அவர் இத ற்கு முன்னர் ஆதரித்ததுமில்லை. ஆ னால் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எங்களுடைய நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்டு எங்கள் செயலுக்கு ஆதரவு தந்து வருகிறார். அவ்வளவே.

எல்லா விஷயங்களிலும் ஒளிவு மறைவில்லாமல் நேர்மையாகச் செயல்படும் எங்கள் குருநாதர் எழுத்துச் சித்தருக்கு எந்த முகமூடியும் எந்த நாளும் தேவைப்பட்டதில்லை. “ எழுதுவது மட்டுமே என் வேலை . அதை பிராபல்யப்படுத்துவதோ , என் எழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதோ என் வேலை இல்லை” என்று தெளிவாக தன் எழுத்து வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் எழுத்துச்சித்தருக்கு இந்த வலைப்பக்கத்தைப் பராமரிக்க நேரமுமில்லை என்பதே நிஜம். அதுவும் தவிர வலைப்பக்கங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும் அவர் முயற்சித்ததில்லை. எனவே நாங்கள் இந்த நல்ல முயற்சியில் இறங்கினோம்.


ஆறு பாகத்தில் . கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பக்கங்களில் . சோழர்களின் சிறப்பை, தமிழ் நாகரிகத்தை மிகச் சிறந்த முறையில் பிரம்மாண்டமாக நெய்த எழுத்துச்சித்தர் பாலகுமாரன் எந்த புத்தக வெளியீட்டு விழாவோ , பாராட்டு விழாவோ எவரையும் நடத்த விடவில்லை என்பதிலிருந்து அவர் தன்மை எத்தகையது என்பதை தெளிவுள்ளவர்கள் புரிந்துக் கொண்டிருப்பர். அ ப்படிப்பட்ட உன்னதமான படைப்பை முடித்த கையோடு அடுத்த வேலையாக இராஜேந்திர சோழனைப் பற்றிய நாவலுக்காக படிப்பதும், ஆ வ ண க் குறுந்தகடுகளைப் பார்த்துத் தகவ ல் சேகரித்துக் கொண்டும் , இ ன்னொரு மிகக் கடினமான நாவ லான “ ம ரண த்திற்குப் அப்பால் வாழ்க்கை” எ ன்பதற்காகத் தன் மூப்பின் அய ர்ச்சியையும் தாண்டி தன் வேலையைக் காதலோடு செய்து கொண்டிருக்கும் எங்கள் ஐயா ஓய்வு நேரத்தில் எங்களோடு பகிர்ந்து கொள்வதை இந்த வலைப்பக்கத்தில் நாங்கள் ஜனரஞ்சகமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்.


முத்துச் சிப்பி முத்தை உருவாக்குவதோடு அது தன் வேலையை நிறுத்திக் கொள்ளும் . முத்துக்குளிப்பவர் அந்த முத்துக்களை இவ்வுலகிற்குக் கொண்டு வந்துக் கொடுப்பர். கடலுக்கு வெறுமே காலை நனைக்க வருபவருக்கு இது பற்றித் தெரிய நியாயமில்லை தான்.



- கிருஷ்ணதுளசி மற்றும் நண்பர்கள்.









Friday, May 2, 2008

“ரோபோ” படத்திற்கு நீங்கள் வசனம் எழுதுகிறீர்களா ?

“ரோபோ” படத்திற்கு நீங்கள் வசனம் எழுதுகிறீர்களா ? பத்திரிக்கைகளிலும், வலைத்தளத்திலும் இது பற்றி செய்திகள் வருகின்றனவே….


இல்லை.இல்லை.இல்லவே இல்லை.

சில சந்தேகங்கள் – எழுத்துச்சித்தரின் விளக்கங்கள்

எழுத்துச்சித்தரின் பிரார்த்தனைப் பற்றிய பதிலுக்கு எதிரொலியாய் வாசகி சந்தியா எழுப்பிய “ பூஜை ஏன் செய்ய வேண்டும்.கடவுள் பெயரை ஜபித்தால் போதாதா.பூஜை முதலியவைகளை செய்ய வேண்டுமா” என்ற கேள்விக்கு ஐயாவின் பதில் இதோ…….


சந்தியா அவர்களுக்கு வணக்கம்.

உங்களுடைய கேள்வி மிக நியாயமான கேள்வி. இதுவரை இந்தக் கேள்வியை என்னிடம் யாரும் கேட்டதில்லை. ஆனால் நீங்கள் பிரார்த்தனை செய்வது வேறு, பூஜை செய்வது வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அல்லது பிரார்த்தனை என்பதை மனதோடு செய்வது, பூஜை என்பதை விமர்சையாக செய்வதும் என்றுமாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பிரார்த்தனை செய்வது என்பதை கூர்மையாக்கும் முயற்சியே பூஜை . அதாவது பூஜை என்பது பிரார்த்தனையை உள்ளடக்கியது. பூஜை என்பது பிரார்த்தனையை உள்ளடக்கியதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அர்த்தமும் இல்லை. வெறுமே இறைவன் புகழை பாடக்கூடிய, வெறுமே எந்தப் பிரார்த்தனையும் இல்லாமல் இறைவனை துதிக்க கூடிய விஷயமாகவும் இரருக்கலாம்.

பிரார்த்தனை செய்கிற போது மனம் ஒருமுகப்படாமல், வேறு ஏதேனும் நினைப்போடு இப்படி இருந்தால் தேவலாம் என்று அரைகுறையாக எண்ணாது எனக்கு இன்னாருடைய சுகமும், வளர்ச்சியும் முக்கியம். என் குழந்தைகள் இந்த உலகை ஆளக்கூடிய வல்லமையராக விளங்க வேண்டும் என்ற பிரார்த்தனை இருப்பின் அது எவ்வளவு பெரிய விஷயம். அந்த பிரார்த்தனை பலிக்க வேண்டுமாயின் எத்தனை கூர்மையாக உள்ளுக்குள் பார்க்க வேண்டும். அந்தப் பிரார்த்தனையை வலுப்படுத்துவது, நல்ல அஸ்திவாரம் போட்டு பலமாக எழுப்புவது என்பதை தான் பூஜை செய்கிறது.


இதோ என் குழந்தைகளுக்காக, அவ ர்களின் வல்லமைக்காக நான் இந்தப் பூஜையை செய்கிறேன். இம்மாதிரியான அஷ்டோத்திரத்தை சொல்கிறேன். இம்மாதிரியான அபிஷேகத்தை செய்கிறேன். இம்மாதிரியான பூக்களைப் போடுகிறேன். இம்மாதிரியான மூலமந்திரத்தை சொல்கிறேன் என்று ஒரு அழகிய, அமைதியான நியமத்தை ஏற்படுத்திக்கொண்டால் உள்ளுக்குள்ளே அந்தப் பிரார்த்தனை என்கிற எண்ணம் வலுப்படுகிறது. உங்கள் எண்ணம் வலுப்பட்டால் அது செயலாக மாறியது போலத்தான். எண்ணம் வலுப்படவே பூஜை உதவி செய்கிறது. பிரார்த்தனை வலுப்படவே பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. பிரார்த்தனையின் வெளிப்பாடு, செயல்பாடு பூஜை என்று புரிந்துக்கொள்ளுங்கள். ஆனால் பிரார்த்தனையோடு தான் பூஜை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Monday, April 28, 2008

எழுத்துச் சித்தரின் - இரும்பு குதிரைகள் – கவிதை














ல்தோன்றி மண்தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழி வளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆ ண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்.
வீட்டிற்கு ஒரு குதிரை வளர்க்க வேண்டும்
வேண்டுகின்ற உதவிகள் அரசு செய்யும்
குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்;
போர் வந்தால் புரவிகளை அரசே வாங்கும்.

போர்காலம் காணாத அரசு இல்லை
போராட்டம் இல்லாத காலம் இல்லை
போர்க்காலம் முன்கருதி புரவி வளர்ப்பீர்
பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர் .
மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்
மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார் உறுதி
பறையடித்து ஊர்முழுவதும் சேதி சொல்ல
ஜனம் கூடி தெரு நடுவே புலம்பலாச்சு.














வன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
திடுமென்று குதிரைக்கு எங்கே போக...
குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன
கொள்ளுமட்டும் பயரிடவா வயலும் நீரும்
ஆ டுகளோ உணவாகும் மாடுகளோ பயிர்வளர்க்கும்
மேய்ப்பதொன்றும் கடினமில்லை;கோல் அசையக் கூட வரும்.
குடும்பத்துப் பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்;
குரல்கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?


ன் என்ன பேயரசன் குதிரை வெறியன்
பார்ப்பனர்கள் சிலர் கூடி தமக்குள் பேசி
முடிவாக திடமாக சபைக்குள் சென்று
தமக்கு மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு
பணிவாக அறிவித்தார்; காரணம் சொன்னார்.
வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும் ;
பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப் போகும்.
தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது
வாரின்றி குதிரைகள் வசப்படாது .
போருக்கும் பார்ப்பனர்களுக்கும் பொருத்தமில்லை
போரில்லாத வாழ்க்கையிதே எங்கள் கொள்கை
பேரரசன் யோசித்தான்; தலையசைத்தான் .
பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான் ;
பார்ப்பனர்கள் சபை நீங்கி வணங்கி வந்தார் .













வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்து கொண்டார்
எங்களுக்கும் விலகளிப்பாய் தேரா மன்னா
வணிகத்தில் எருதுகளே உதவியாகும் ;
பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு
ஊர் சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க
பெண்டுகளே பிற வேலை செய்தல் வேண்டும்.
புரவிகளைப் பெண்டுகளால் ஆளமுடியுமா?
பேரரசே தயைசெய்யும் இது தாங்க முடியுமா.
மன்னவனும் மனு ஏற்றான்; விலக்கு என்றான்
வந்தவர்கள் சபை மீள கூட்டமாக

தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்
குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை
முன்பின்னே இது குறித்துப் பழக்கமில்லை
கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்
போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்
குதிரைகள் சுமை எமக்கு உதவி தராது
உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது
மன்னவனும் தலையசைத்தான் சரியே என்றான்.

டைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்
முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்.
போர்க்காலம் குதிரைகள் தேவையெனினும்
போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்
குதிரைகள் என் செய்யும் கலைந்து போகும்
படைவீரர் தெருவுக்கு ஒரு யானை வளர்ப்பார்
முறைபோட்டு அனுதினமும் பேணிக் காப்பார்
வீட்டுக்கொரு குதிரையென்ற விதியினின்று
பேரரசே விலக்களிப்பீர் ; யானை தருவீர்.
பேரரசன் யோசித்தான்; கவலை சூழ
கையசைத்தான் மறவர்கள் கலைந்துபோக















றுநாளே சபைகூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமி பேசலானான்.
குதிரையெனச் சொன்னது விலங்கா மக்கள்
புரவியதன் மகிமையைத் தெரியா ஜனமே
வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று
நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர் ?
குதிரையதை சபை நடுவே நிறுத்திப்பாரும்.
உடல் முழுவதும் கைதடவி உணர்ந்து பாரும்

வ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு
கண்மூடி நின்றாலும் காது கேட்கும்
காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும் .
உடல்வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
குதிரை குணம் கொண்டவர்கள் உயர்ந்தோர் ஆ வார்
போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல ;
மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல

பெருவாழ்க்கை தனை நோக்கி காலம் போகும்
தன்மையினைப் போரென்றேன்; வேறொன்றில்லை
புரியாத என்மக்காள் மந்தை ஆ டே
உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்
வெறும் பதரைக் கோல்பிடித்து காப்போர் உண்டோ?
உணர்வில்லா ஜனத்துக்கு அரசன் கேடா .
ஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்














குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
விரல் நுனியில் விசையறிந்து வேகம் காட்டும்
உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
ஊர்விட்டு ஊர்போகக் கருவியாகி
விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்
குதிரையே முன் நின்று நடத்தும் கண்டீர் .
கலியென்ற காலமுண்டு இத்தரை மீதில்
கடவுளெனக் குதிரைவரும்; ஆ ட்சி செய்யும்.

ல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே
குதிரையெனும் பெருணர்வே கைக்கொடுக்கும்
வளமான வாழ்வுண்டு; மனிதர் அன்று
தேவரென வலம் வருவார் சொல்வேன் கண்டீர்
கால்நடையில் ஆ டுகளே செல்வம் என்ற
மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டா .
பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து
குதிரையிது வீணையிலே வேதம் பேசும்
காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்
போய் வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்
உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்
பெருமன்னன் வாள்வீசி தன் தலை துணித்தான் .

லியென்னும் குதிரையதன் ஆ ட்சியின்று
கண்திறக்கத் துவங்கி விட்ட நேரம் கண்டோம்.
தலைதுணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்
முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு
குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்
குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார் .
கலியென்ற குதிரை தன் ஆ ட்சி துவங்கும்
மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும் ;
யாகங்கள் பூஜைகள் பூர்த்திசெய்யா
ஸ்நேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்

குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்
குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்
குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்
கலியென்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன் .

Monday, April 21, 2008

திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில்




ஐயா, திபெத் ஒரு சூட்சமமான தேசம் என்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது ஒரு வாக்கியம் சொல்லிருக்கிறீர்கள். திபெத்தில் அப்படி என்ன சூட்சமம் இருக்கிறது?




திபெத், உட்கார்ந்து தியானம் செய்வதற்கு இயற்கை அளித்த அற்புதமான இடம். திபெத்தினுடைய உயரமும், மலைச் சரிவும், குகைகளும், தட்ப வெப்ப நிலையும் ஆ ழ்ந்து உள்ளுக்குள்ளே அமர்வதற்கு உதவி செய்யும். வெயிலடித்தால் மின்விசிறி வேண்டும். ஆ னால் குளிர் காற்று வீசுகின்ற திபெத்தில் ஒரு கம்பளி இருந்தால் போதும். அங்கு பசி குறைவாக எடுக்கும். மலை மீது ஏறி இறங்குவதால் நுரையீரல்கள், ஹிருதயகோசம் மிக நன்றாக இயங்கும். இவை இரண்டும் நன்றாக இயங்குவதால் ரத்த ஓட்டம் நல்ல துடிப்போடு இருக்கும். வெயிலால் ஏற்படுகின்ற ரத்தக் கொதிப்பு திபெத்தில் இருக்காது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிகம் போக்குவரத்து இல்லாத இடமாக இருப்பதால் சப்தம் குறைவு. அது தவிர இந்த இடத்தினுடைய செள க ரியத்தால் பரம்பரை பரம்பரையாக பலர் அந்த இடத்தில் இடையறாது மந்திர உச்சாடனம் செய்து அந்த இடத்தை பலப்படுத்திருக்கிறார்கள். எனவே சுமாராக தியானம் தெரிந்தவர் அங்கு போனாலும் ஆ ழ்ந்து இறுக்கி உட்கார்ந்து விட முடியும். மந்திர ப்ரயோகம் என்று தியானத்தில் ஒரு நிலை உண்டு. ஒரு இடம் நோக்கி மந்திரத்தால் சில காரியங்களை செய்து கொள்ளலாம். அப்படி மந்திர ப்ரயோகம் செய்வதால் நல்லது, கெட்டது நடைபெறலாம். இவ்வளவு வலிமை இருந்தும் சீனாவிடம் உதவி வாங்கிக் கொண்டிருக்கிறதே அந்த தேசம் என்று தோன்றுகிறதா. இந்தியாவின் ஈசானியத்தில் இருக்கும் திபெத்தில் சீனா தவறாக கால் வைத்து விட்டது. திபெத்தை அடக்க முடியாது. திபெத்தில் அத்து மீற முடியாது. திபெத்தில் ஆளுமை எந்த விதமாகவும் செய்துவிட முடியாது. அங்கே தவறாக நுழைந்தவர்கள், தப்பாக இருப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சீனா தாக்கப்படும் என்பதற்கு திபெத்தில் நடந்த சில விஷயங்கள் சொல்கின்றன. இஸ்லாமியர்களோ, பிரிட்டிஷ்காரர்களோ திபெத்தை சீர் குலைக்கவேயில்லை. சீனர்கள்தான் முதன் முதலில் செய்து இருக்கிறார்கள். அனுபவிப்பார்கள்.

Monday, April 14, 2008

சிலை சொல்லும் செய்தி- மூன்று - எழுத்துச் சித்தரின் பார்வையில்….

தன்னுடைய எண்ணத்திற்கும், அதிலிருந்து வெளியாகும் செயலிற்கும் நேர்மையாக இருப்பவர்களே இறைத்தன்மை உடையவர்கள் ; காலங்கடந்து நிற்கக்கூடிய தகுதியைப் பெற்றவர்கள் என்பதை சொல்லும் ஒரு அற்புதமான கதையை நினைவூட்டும் சிலையைப் பற்றி எழுத்துச்சித்தர் விவரிக்கிறார். கண்ணப்ப நாயனாரின் உண்மையான அன்பைக் கண்டு பிரமிப்பதா அல்லது அந்த உணர்வை தன் கலைப்படைப்பில் மிகச் சரியாக வெளிக்கொணர்ந்த சிற்பியைப் பாராட்டுவதா….
இதோ எழுத்துச் சித்தரின் பார்வையில்….



Saturday, April 12, 2008

சினிமாவில் எழுத்துச்சித்தர் கற்றுக் கொண்ட முதல் பாடம்.

இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சினிமாவில் நான் சேர்ந்தது சினிமாவுக்காக அல்ல என்று தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி கதைகள் எழுதும் எண்ணத்தில் சினிமாவின் மீது ஆசைபட்டிருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் சினிமாவைப்பற்றி கதை எழுதிக் கிழித்து விடவில்லை.

சினிமா எனக்கு வேறு ஒரு உலகை, வேறுவிதமான மனிதர்களை, நல்ல அனுபவங்களை, அந்த அனுபவத்தால் புத்தி தெளிவை, நிதானத்தை கொடுத்திருக்கிறது. வாழ்க தமிழ் சினிமா. ஒரே ஒரு சம்பவத்தை இங்கு சொல்லி சினிமா எப்படி உதவி செய்தது என்பதை உங்களோடு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

சினிமாவில் நான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அந்த உதவி இயக்குனர் வேலையில் ஒன்று கன்டின்யுடி. அதாவது ஒரே ஒரு சீனை முதல் நாள் எடுத்து, பிறகு இரண்டு நாள் கழித்து எடுத்து, பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் தொடர்வார்கள். அதாவது தோட்டத்தில் ஆடி பாடிய பெண் அதே உடைகளோடு தானே வீட்டிற்குள் நுழைவாள். தோட்டத்தில் ஆடி பாடியது ஜனவரி 1-ம் தேதி என்றால், வீட்டிற்குள் நுழைவது பிப்ரவரி 3-ம் தேதியாக இருக்கும். அப்படித்தான் ஷுட்டிங் நடக்கும்.

அந்த நேரம் வீட்டிற்குள் நுழையும் போது தோட்டத்தில் ஆடிய போது என்ன நகைகள் அணிந்திருந்தாளோ அதோடு இருப்பதுதான் சிறப்பாக இருக்கும். இதற்குத்தான் கன்டின்யுடி என்று பெயர். காதில் தோடு, கை வளையல்கள், கழுத்து நகைகள், மூக்குத்தி, கால் மெட்டி, புடவை, ரவிக்கை, தலை வாரலுடைய அமைப்பு இவையெல்லாம் ஒரு உதவி இயக்குனர் குறித்துக் கொள்ள வேண்டும்.

அவர் மிகப் பெரிய நடிகை. நன்கு நடிக்க கூடியவர். அவர் படப்பிடிப்பில், நான் அவருடைய நகைகளை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு நமுட்டுச் சிரிப்பு அவரிடம் இருந்தது. படப்பிடிப்புமுடிந்த போது தயவு செய்து அந்த நகைகளை கழட்டி கொடுத்து விடுங்கள் அது மறுபடியும் கன்டின்யுடிக்கு தேவைப்படுகிறது என்று சொன்னேன். அவர் இப்பொழுது வேண்டாம் களைப்பாக இருக்கிறது. நாளைக்கு காலையில் வந்து தருகிறேன் என்று சொன்னார். அவர் கிளம்பிபோனதும் நாளைக்கும் இதே இடத்தில் இதே சீனை எடுக்கப்போகிறேன் என்று டைரக்டர் சொன்னார்.

சரி .காலையில்தான் நடிகை நகைகளை கொண்டுவந்து விடுவாரே என்று நான் சந்தோஷமானேன். மறுநாள் காலை நடிகை வந்து இறங்கியதும் ஓடிப்போய் நகைகளைக் கேட்டேன். கழுத்துச்செயின், மூக்குத்தி , கைவிரல் மோதிரங்கள், உடுப்பு, ரவிக்கை, தலைவாரல் எல்லாம் அப்படியே இருந்தது. காதில் வேறு தோடு போட்டிருந்தார். அந்த தோடு இல்லையே என்று கேட்டதற்கு அது காணவில்லை. எங்கேயோ தொலைந்து விட்டது என்று சாதாரணமாக சொன்னார்.

தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் .அந்த தோடு வேண்டும் என்று கூறினேன். என்னிடம் இல்லை . நேற்றே வாங்கி வைக்க வேண்டியதுதானே. ஏன் இப்போது வந்து உயிரை வாங்குகிறீர்கள் என்று சள்ளென்று என் மீது எரிந்து விழுந்தார். காலங்காலையில் உரக்க ஒரு நடிகை என்னைப் பார்த்து கோபமுறுவதை யூனிட்டில் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது.

நான் என்ன செய்வது என்று காஸ்ட்யூமரோடு போய் ஒட்டிக் கொள்ள,அந்தக் காஸ்ட்யூமர் மிகவும் பிரயத்தனப்பட்டு கிட்டத்தட்ட அதே போல ஒரு நகையை தேர்ந்தெடுத்து அவரை அணிய சொன்னார். அவரும் ஆஹா கிட்டத்தட்ட அதே நகையை கொண்டுவந்து விட்டீர்களே பாராட்டுக்கள் என்று கூறி அணிந்து கொண்டார். நான் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

ஆனால் அந்த காஸ்ட்யூமர் அப்படி மகிழவில்லை. கோபமாக அந்த நடிகையை திட்டிக்கொண்டே நகர்ந்து போனார். அவர் திட்டியது என் காதில் மட்டும்தான் விழுந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்தது. இரண்டு டேக்குகள் முடிந்தன. மூன்றாவது டேக்கு ஆரம்பிக்கிறபோது ஒரு க்ளோசப் ஷாட் வைத்திருந்தது.

நடிகை டைரக்டரை கூப்பிட்டார். இந்த தோடு நேற்று போட்டதல்ல, வேறு மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார். டைரக்டருக்கு கடுங்கோபம். என்னைக் கூப்பிட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். காஸ்ட்யூமரை அழைத்தார். என்ன இது என்று கேட்டார். நாங்கள் விவரிக்க முயல்வதற்குள் நடிகை மேலும் தூண்டிவிட, கோபத்தின் உச்சிக்குப் போனார். நான் புதியவன் என்பதால் என்னை அதிகம் திட்டவில்லை. காஸ்ட்யூமருக்கு பலமாக இரண்டு அடி விழுந்தது.

காஸ்ட்யூமர் தலைக்குனிந்து பல பேர் முன்னால் அவமானத்தோடு மெளனமாக நின்றார். ஒன்றும் பெரிதாக தெரியாது என்று மற்றவர்கள் சொல்ல, காமிராமேன் வாக்குறுதி கொடுக்க, காது அருகில் தெரியாதபடி க்ளோசப் ஸாட் மாற்றி வைக்கப்பட்டு அந்த சீன் எடுக்கப்பட்டது. அந்த நடிகை அன்று மாலை படப்பிடிப்பு விட்டு போகும்போது நான் நகைகளை கொடுத்தே ஆ க வேண்டும் என்று நிற்க, அவர் மிகவும் ஒழுங்கு பிள்ளையாய் நகைகளை கழட்டிக் கொடுத்தார். பெட்டியிலிருந்த முந்தைய நாள் நகையையும் எடுத்துக் கொடுத்தார். நான் திகைத்துப்போனேன்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று கெஞ்சலாக கேட்டேன். வாழ்க்கை போரடிக்கிறது என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பிப் போனார். எனக்குத் திகைப்பாய் இருந்தது.

காஸ்ட்யூமரிடம் இதைப் போய் சொன்னேன். அவர் பலப் படங்களுக்கு பணியாற்றியவர் . மறுபடியும் கோபமாக திட்டினார். நான் திகைத்துப் போனேன்.

அந்த நடிகை அதற்குப் பின்னால் ஒரு உச்சிக்குப் போய் மெல்ல சரிந்து, கல்யாணம் என்று ஆரம்பித்து, விவாகரத்து என்று மாறி, குழந்தை வேண்டும் என்று சொல்லி, குழந்தை வேண்டாம் என்று தள்ளி, சொத்துபற்றி வழக்குப் போட்டு, சொத்து சேர்ப்பதற்காக பொய் சொன்னார் என்று வழக்குப் போட்டு விதவிதமான சிக்கல்களில் சிக்கிக் கொண்டார். அவமானப்பட்டார்.

நான் யோசித்துப் பார்த்தேன்.

வாழ்க்கை போரடிக்கிறது என்பதற்காக இவைகள் எல்லாம் செய்கிறாரோ என்று யோசனை செய்தேன். மனிதர்கள் எது வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள் என்று எனக்கு அப்போது புரிந்தது. எல்லோர் மீதும் எப்போதும் சந்தேகத்தோடு இருப்பதே சரி என்பதும் எனக்கு உறுதி ஆயிற்று.

மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான் .சில சமயம் மனிதர்களுக்கு கிறுக்குப் பிடிக்கும். பொறுத்துக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவும் பழகிக் கொள்ளவேண்டும். இது சினிமா எனக்குக் கற்றுத் தந்த முதல் பாடம்.

Monday, April 7, 2008

சில கேள்விகள் – எழுத்துச் சித்தர் பதில்கள்

ஐயா, தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

ஏதேனும் ஒன்றை சொத்தாக அவன் நினைத்துக் கொள்ள வேண்டும். தங்கம் முக்கியமாக இல்லாத போது, ஆடு, மாடுகள் முக்கியமாக இருந்தன. ஆடு, மாடுகளுக்கு முன்பு நிலங்கள் சொந்தமாக இருந்தன. எது அபூர்வமோ அதை தன் சொந்தமாக நினைப்பது மனித இயல்பு. நாளையே கடலுக்கு அடியிலிருந்து நாற்பது டன் தங்கம் வெளிவந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தை யாரும் வாங்கமாட்டார்கள். அது செலாவணி ஆகாது. தங்கம் கிடைப்பது குறைவாக இருப்பதால் இந்த அலையல் ஏற்படுகிறது. வைரம் அதிகம் கிடைக்கிறது. ஆனால், கிடைத்த வைரத்தை திரும்ப குப்பையிலேயே கொட்டி விடுகிறார்கள். வைரம் அதிகம் கிடைக்காமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வைரம் அதிகம் கிடைத்தால் மரியாதை போய்விடும் என்பதற்காக அவர்களே இயற்கை கொடுத்ததை புறந்தள்ளி விடுகிறார்கள். எது எளிதில் கிடைக்காததோ அதற்கு பெரிய மரியாதை இருக்கும். கடவுள் என்பதற்கு மரியாதை ஏன் இருக்கிறது? கடவுள் என்பது மாயையான விஷயம். புரியாத விஷயம். புரிந்து போனால் அலட்சியப்படுத்தி விடுவார்கள். புரியாத வரை மிக முக்கியமானதாக, பெரிய வியாபாரமாக நடந்து கொண்டுதான் இருக்கும்.


ஐயா, பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்தினால் என்ன?

ஆஹா! செய்யாலாமே. மற்ற எல்லா விஷயங்களையும் வரைமுறைப்படுத்தி விட்டோம். பாலியல் தொழில் ஒன்றுதானே பாக்கி. இதையும் வரைமுறைப்படுத்தி விடலாமே. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் நம் அனுமதிக்காகக் காத்திருப்பதில்லை. பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்துவது என்பது நடக்கத்தான் போகிறது. வெகு விரைவில் செய்யதான் போகிறார்கள். ஆனால் இது மனிதரின் திருட்டு புத்தி. இருட்டுப் பக்கம். விலங்கின உறவு. மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது வேகமாய் எழுகின்ற அலட்சியம். மற்றவரை அவமானப்படுத்துவதில் உண்டான ஆனந்தம். பிணத்தை தழுவுவது போல என்கிறார் வள்ளுவர். மனம் செத்துப் போனவர்கள் தான் பிணத்தை தழுவுவார்கள்.

ஐயா, பீஜாட்சரம் என்றால் என்ன?

பீஜம் என்றால் அடி, ஆரம்பம், நுனி. தோன்றும் இடம். அட்சரம் என்றால் வார்த்தை, சப்தம். உலகில் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு சப்தம் இருக்கின்றது. அந்த அசைவின் அடி, அந்த அசைவின் நுனி, அந்த அசைவின் கரு இவைகளிலிருந்து அந்த சப்தம் கிளம்புகிறது. அந்த சப்தத்திற்குதான், அந்த அசைவிற்குதான் பீஜாட்சரம் என்று பெயர். உதாரணமாக ஹ்ருதயம் அசைகிறது. அந்த ஹ்ருதயத்தினுடைய சப்தம் என்ன என்பதை கவனித்திருக்கிறார்கள். "செளஹு" என்ற சப்தம் ஹ்ருதயத்தின் சப்தம். மூளையினுடைய சப்தம் என்ன என்று கவனித்திருக்கிறார்கள். "ரும்" என்பது மூளையின் சப்தம். இதை போல நாடி நரம்புகளுக்கு, நுரையீரல்களுக்கு, வயிற்றுக்கு, தொண்டைக்குழிக்கு, முதுகெலும்பின் அடிப்பகுதிக்கு என்று பல சப்தங்கள் உண்டு. இந்த வெளியுனுடைய சப்தம் "ஓம்". இந்த "அஉம்" என்ற சப்தம் தான் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்றது. இது எப்பொழுதோ ஏற்பட்ட அசைவினால் தொடர்ந்து கேட்கின்ற சப்தம். ஒரு அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி, அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னொரு அசைவை உண்டாக்கி அந்த அசைவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எப்பொழுது துவங்கியது என்று யோசித்து தடம் பார்த்து போக ஒரு பீஜத்தில், ஒரு கருவில், ஒரு நுனியில் முடியும். அங்கிருந்து தோன்றிய சப்தம் என்பதால் அதற்கு பீஜாட்சரம் என்று பெயர். இந்த பதிலின் மூலம் நான் சொன்னதை உங்களால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாது. இதை யோசித்து, யோசித்து, யோசித்து அடி ஆழம் போய் உணர்வதின் மூலம் இதை ஒரு வேளை புரிந்து கொள்ளலாம். அதுவே தன்னை காட்டினால் ஒழிய அதை புரிந்து கொள்ள முடியாது.


ஐயா, கர்நாடக சங்கீதத்தில் தியாகராஜரை அதிகம் கொண்டாடுகிறார்களே ஏன்?

தியாகராஜரை கொண்டாடவில்லை. தியாகராஜரின் பாடல்களில் இருக்கும் சத்தியத்தை கொண்டாடுகிறார்கள். சத்தியத்தை எல்லோரும் எல்லா நேரமும் உணர்ந்து கொண்டாட முடியாது. ஏதோ ஒரு தொந்திரவை சத்தியம், மனித மனத்தில் ஏற்படுத்தும். அதை சத்தியம் என்று தெரியாதவர்கள் தியாகராஜரை ரூபமாக உணர்ந்து கொண்டாடுவார்கள். "கன கன ருசிரா கனக வசனுமு நின்னு" என்ன அற்புதமான ருசி உன்னுடைய தங்க நிற முகம் என்று தியாகையர் பேசுகிறார். உள்ளே ராமனை கற்பனை செய்து உறவாடி வந்த வார்த்தைகள் வெளியே எளிதாய் கவிதையாய் மாறுகின்றன. தியாகராஜர் ராமன் என்று கொண்டாடியது சத்தியத்தை. சத்தியம் என்பதற்கு ஒரு மனித ரூபம்
கொடுக்கப்பட முடியுமானால், அதற்கு ராமன் என்று பெயர். அதனால்தான் தியாகராஜருடைய வாழ்வில் அரசாங்கம் பொருள்களும், பெரும் நிதியும் கொண்டு வந்து கொடுத்தப்போது "நிதி சால சுகமா" என்று அழகாக பாடி மறுத்து விடுகிறார். பணம் என்று ஒன்று வந்தால் அது தன்னை எவ்வளவு கீழே இறக்கும் என்பதை புரிந்துக் கொண்டு சத்தியத்தை இறுகப்பற்றி கொள்கிறார். இன்னும் அதோடு நெருக்கமாகிறார். இது எனக்கு தேவையில்லையே என்கிறார். அவர் வாழ்வு சத்தியத்தோடு நெருக்கமாகி தெளிவானது. அந்த தெளிவுதான் அவர் பாடல்களிலும் இருக்கின்றன.. எங்கு தெளிவு இருக்கின்றதோ அங்கு கவிதை நயமும், சுகமும் வந்து விடும். சொல்லும் அதன் பொருளும் அதை தூக்கி கொண்டுவரும் ராகமும் ஒன்றாக இணைந்து, குழைந்து இருக்கிறபோது அதை மற்றவர்கள் விரும்பி உண்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏன் ஜாங்கிரி இனிக்கிறது என்று யோசித்துக் கொண்டா சாப்பிடுகிறார்கள். ஜாங்கிரி இனிக்கிறது.சாப்பிடுகிறார்கள். எதனால் இனிக்கிறது என்ற கணக்குக்கு யாரும் போவதில்லை.

ஐயா, அநியாயமாக வாஸ்துவைப் பற்றி இப்போது எல்லோரும் அலட்டிக் கொள்கிறார்களே. இது நியாயமா?

உங்களுக்கு வாஸ்துவைப் பற்றி தெரியுமா? தெரிந்திருந்தால் அநியாயமாக என்று பேச மாட்டீர்கள். உங்களுக்கு அணுகுண்டைப் பற்றியும் தெரியாது. ஆனால் அணுகுண்டு உபயோகப்படுத்தப்படும் என்பது நம்புகிறீர்கள். உங்களுக்கு செவ்வாய் கிரகம், சந்திரன் பற்றியும் தெரியாது. ஆனால் அங்கெல்லாம் போக முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். வாஸ்துவை மறுப்பதற்கு முன்பு வாஸ்துவைத் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்த பிறகு மறுப்பதும், ஏற்பதும்தான் தெளிவு. தெரியாமல் மறுப்பதற்கு பெயர் திமிர். வாஸ்து என்பது இந்தியாவின் புராதன மான ஒரு கலை. இந்திய புராதன விஷயங்கள் தொடர்புகள் அற்று போய் மறைபொருளாக இருக்குமே தவிர, ஒருகாலும் புராதன விஷயங்கள் பொய்யாக இருந்ததில்லை. ஒன்றை அலட்சியபடுத்தும் முன்பு ஆராய்ந்து பிறகு செயல்படுங்கள்.

ஐயா, பித்ருக்கடன் என்ற விஷயத்தை ஆண்கள் மட்டும் செய்கிறார்களே. பெண்களுக்கு இதில் பங்கு இல்லையா?

இந்தியா என்று அழைக்கப்படும் பரத கண்ட சம்பிரதாய வாழ்க்கையில் ஆணுக்கு எந்த விதமான நேர்த்திக்கடனையும் பெண்ணில்லாமல் செய்வதற்கு உரிமையே இல்லை. மனைவி இல்லாதவர் பித்ருக்கடன் செய்யும்போது ஒரு தர்ப்பைக் குச்சியை அருகே நிற்க வைத்துவிட்டு அதை மனைவியாக பாவித்துதான் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.பித்ருக்கடன் செய்வது ஆண்கள் மட்டுமே அல்ல இந்திய சம்பிரதாய சாஸ்திரப்படி பெண் உத்தரணியிலிருந்து ஜலம் எடுத்து அந்த தட்சணையில் ஊற்றினால்தான் அந்த தட்சணையை அவன் செய்து வைக்கும் புரோகிதருக்கு தரமுடியும். அதாவது எவ்வளவு தட்சணை கொடுக்கிறார்கள் என்பதை பெண் அறிந்திருக்க வேண்டும். யாருக்கு கொடுக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். பித்ருக்கடனின் ஒவ்வொரு இடத்திலும் ஆணின் வலப்பக்கத்தில் நின்று தர்ப்பை முனையை ஆண் தோளில் படும்படி பிடித்துக்கொண்டு அவன் பேச்சை, செயலை கவனித்திருக்க வேண்டும். இரண்டு பேரும் சேர்ந்து செய்வதை விட, ஒருவர் செய்ய அடுத்தவர் அதை கவனமாக பார்த்து செய்ய தூண்டுவதுதான் விஷேசம். ஒரு நாளும் பெண்களை இந்து சம்பிரதாய வாழ்க்கை புறக்கணித்ததே இல்லை. மனம் முழுவதும் செய்யும் காரியத்தில் ஈடுபட அழகான ஒரு அமைப்பில் வைத்திருக்கிறார்கள். அருகே இருந்து கவனிப்பது என்பது செய்வதைக் காட்டிலும் கூர்மையானது.



ஐயா, இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்மீகம் என்ற விஷயத்தை பெற்றோர்கள் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்?

பெற்றோர்கள் ஆன்மீகமான வாழ்வை வாழ்வது பார்த்தே குழந்தைகள் தானாக கற்றுக்கொள்ளும். நீங்கள் அலட்டலாய், ஆரவாரமாய், ஆபாசமாய் இருந்தால் குழந்தைகள் அதை உடனே பின்பற்றும். நீங்கள் அமைதியாய், அன்பாய், அறிவார்த்தமாய் இருப்பின் குழந்தைகள் அதை எளிதில் கிரஹித்து கொள்ளும். அன்பாகவும், அடக்கமாகவும் இருப்பதே ஆன்மீகம். கடவுள் வழிபாடோடு ஆன்மீகத்தை சம்பந்தபடுத்த வேண்டாம். கடவுள் வழிபாடு செய்து கொண்டே காட்டுக் கூச்சலாய் இருக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கத் தெரியுமானால் அது குழந்தைகளை சந்தோஷப்படுத்தும். அவைகள் வெகு எளிதில் எதிர்ப்பார்ப்பில்லாத நேசத்தைப் பொழியத் துவங்கிவிடும். நீங்கள் நடக்கும் பாதையில் உங்கள் குழந்தைகள் பின் தொடரும். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை.