Saturday, March 29, 2008

சிலை சொல்லும் செய்தி - எழுத்துச்சித்தரின் பார்வையில்

எழுத்துச்சித்தரோடு பல ஊர்களுக்கு அவரது நண்பர்கள் பயணப்படுவதுண்டு. குறிப்பாய் கோயில்கள் நிறைந்த நகரங்களுக்கு விரும்பி செல்வார்கள். வெறும் பிரார்த்தனைக்காக மட்டுமில்லாது வரலாறு அறியவும் , தத்துவங்கள் தெளியவும் அந்த சுற்றுலா உதவியாக இருக்கும். சிற்பங்களை எப்படி ரசிப்பது என்றும் சொல்லித் தருவார்.


மற்ற படங்களைப் பார்க்க போட்டோவின் மீது "க்ளிக்" செய்யவும்.
நரசிம்மரும் பிரகலாதனும்


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் எழுத்துச்சித்தருக்கு மிகவும் பிடித்த கோயில். அங்குள்ள சிற்பங்களை தூண் தூணாய் நின்று தடவி விவரிப்பார். எழுத்துச்சித்தர் ரசிக்கும் ஸ்ரீரங்கசிற்பங்களில் அவர் மிகவும் நேசித்து விவரித்த சிற்பம் இது.

ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதி நேர் எதிரே உள்ள நாற்கால் மண்டபத்தின் ஒரு தூணில் இந்த நிற்கும் நரசிம்மர் சிலை உள்ளது. அருகே உள்ள பிரகலாதனை மெல்ல விரல் பற்றி ஆறுதலாய் நிற்கும் நரசிம்மரின் ஒன்றரை அடி உயர சிற்பத்தில் நரசிம்மரின் கனிவு தெளிவாகத் தெரியும். நிற்றலில் ஒரு ஒயில் இருக்கும். புஜபலம் புரியும். இரணியனை அடித்துத் துவைத்துக் கொன்று விட்டு "நானிருக்கிறேன்" என்று பிரகலாதனுக்கு சொல்லாமல் சொல்கின்ற ஆபத்பாந்தவம் விளக்கப்பட்டிருக்கும்.

2 comments:

said...

ரங்கநாதர் கோவிலுக்கு பலமுறை சென்றுன்ளேன். சிலைகளை கவனித்ததில்லை.படங்களும் அதன்விள்க்கமும் பிரகலாதனையும் நரசிம்மரையும் கண்முன் நிறுத்துகிறது. நம்முடைய பழங்காலசிற்பக்கலையை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டுகிறது. இனி கோவிலுக்கு செல்லும் போது ச்லைகளையும் பார்க்கிறென். ஐயாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. புதியதாக நீங்கள் தொடங்கியுள்ள பட்க்காட்சி தொகுப்பு நன்றாக உள்ளது அருமையான பணி. நன்றி.

said...

வருக சரோஜா

ஸ்ரீரங்கத்தில் மேலும் பல சிறப்புகள் உள்ளன. எல்லாவற்றையும் இந்த வலைதளத்தில் அளிக்க முயற்சி செய்வோம்....