பாலகுமாரன் அவர்களே , நீங்கள் நேரடியாக, வெளிப்படையாக இந்தப் பதிவை எழுதலாமே , ஏனிப்படி ஒரு முகமூடிக்குள்ளிருந்து எழுத விரும்புகிறீர்கள் என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு எங்கள் பதில் இதோ…………..
அறிவன் அவர்களுக்கு வணக்கம்.
ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தபடி இ ந்த வலைப்பக்கங்கள் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களாகிய எங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் பாலகுமாரன் எழுத்துக்களை நன்கு படித்தவர்கள். விரும்பி அனுபவித்தவர்கள். அவருடைய எழுத்துக்களை நேசித்து ஜீரணித்து உரம் பெற்றவர்கள். தெளிவு பெற்று அவரவர் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள். செம்மை அடைந்ததாலேயே நன்றி பகர அவரைத் தொடர்பு கொண்ட போது நேரடியாக பல விஷயங்களுக்கு விளக்கங்கள் பெற்று மேலும் தெளிவு பெற்றவர்கள்.
எங்களைப் போல திரு. பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்கள் மூலம் ஒரு நல்ல பக்குவத்தை மற்ற வாசகர்களும் அவர் எழுத்தை புரிந்து கொண்டு அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் எழுத்துக்களைக் கொண்டாடும் பல வாசகர்களை மேலும் உற்சாகமூட்டுவதற்காகவும் இந்த வலைப்பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திரு. பாலகுமாரன் எல்லோரோடும் சகஜமாகப் பேசிப் பழ க மாட்டார் என்பது பலரும் அறிந்ததே. அளவாகவே பேசுவார். ஆனால் நண்பர்களுக்கு மத்தியில் கேள்விகள் கேட்டால் பதில் கங்கை எனப் பொங்கிப் பாயும். கேட்ட அடுத்த வினாடியே பதில் ஆ ரம்பித்து விடும். கேள்விக்கு அப்பாலும் போய் அவர் சொல்லும் விளக்கங்கள் அற்புதமானவை.
மழை பொழிவது போல் விளக்கி முடித்த பின் அதை பதிவு செய்து கொடி பறக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு நாளும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட முயற்சிகளையும் அவர் இத ற்கு முன்னர் ஆதரித்ததுமில்லை. ஆ னால் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எங்களுடைய நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்டு எங்கள் செயலுக்கு ஆதரவு தந்து வருகிறார். அவ்வளவே.
எல்லா விஷயங்களிலும் ஒளிவு மறைவில்லாமல் நேர்மையாகச் செயல்படும் எங்கள் குருநாதர் எழுத்துச் சித்தருக்கு எந்த முகமூடியும் எந்த நாளும் தேவைப்பட்டதில்லை. “ எழுதுவது மட்டுமே என் வேலை . அதை பிராபல்யப்படுத்துவதோ , என் எழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதோ என் வேலை இல்லை” என்று தெளிவாக தன் எழுத்து வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் எழுத்துச்சித்தருக்கு இந்த வலைப்பக்கத்தைப் பராமரிக்க நேரமுமில்லை என்பதே நிஜம். அதுவும் தவிர வலைப்பக்கங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும் அவர் முயற்சித்ததில்லை. எனவே நாங்கள் இந்த நல்ல முயற்சியில் இறங்கினோம்.
ஆறு பாகத்தில் . கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பக்கங்களில் . சோழர்களின் சிறப்பை, தமிழ் நாகரிகத்தை மிகச் சிறந்த முறையில் பிரம்மாண்டமாக நெய்த எழுத்துச்சித்தர் பாலகுமாரன் எந்த புத்தக வெளியீட்டு விழாவோ , பாராட்டு விழாவோ எவரையும் நடத்த விடவில்லை என்பதிலிருந்து அவர் தன்மை எத்தகையது என்பதை தெளிவுள்ளவர்கள் புரிந்துக் கொண்டிருப்பர். அ ப்படிப்பட்ட உன்னதமான படைப்பை முடித்த கையோடு அடுத்த வேலையாக இராஜேந்திர சோழனைப் பற்றிய நாவலுக்காக படிப்பதும், ஆ வ ண க் குறுந்தகடுகளைப் பார்த்துத் தகவ ல் சேகரித்துக் கொண்டும் , இ ன்னொரு மிகக் கடினமான நாவ லான “ ம ரண த்திற்குப் அப்பால் வாழ்க்கை” எ ன்பதற்காகத் தன் மூப்பின் அய ர்ச்சியையும் தாண்டி தன் வேலையைக் காதலோடு செய்து கொண்டிருக்கும் எங்கள் ஐயா ஓய்வு நேரத்தில் எங்களோடு பகிர்ந்து கொள்வதை இந்த வலைப்பக்கத்தில் நாங்கள் ஜனரஞ்சகமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்.
முத்துச் சிப்பி முத்தை உருவாக்குவதோடு அது தன் வேலையை நிறுத்திக் கொள்ளும் . முத்துக்குளிப்பவர் அந்த முத்துக்களை இவ்வுலகிற்குக் கொண்டு வந்துக் கொடுப்பர். கடலுக்கு வெறுமே காலை நனைக்க வருபவருக்கு இது பற்றித் தெரிய நியாயமில்லை தான்.
- கிருஷ்ணதுளசி மற்றும் நண்பர்கள்.
26 comments:
அறிவன் அவர்களின் கேள்விக்கு மிக்க நன்றி
முக்குத்தி தொலைந்ததால் முற்றம் சுத்தம் ஆயிற்று
உங்கள் கேள்வியால் பாலகுமாரனைப் பற்றி நல்ல விளக்கம் கிடைத்தது
நல்ல பதில் தருவதற்கு சரியான கேள்வி அவசியம்.
கேள்வி கேட்டவரைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி இந்திரா.......
Hats Off... to Krishna Thulasi and Friends.
GREAT WORKS DEMAND GREAT EFFORTS.
It is the basic truth. It is quite unfortunate that many people FAIL to understand this simple truth.
Krishna Thulasi, you have nicely described the travel of a Good Creator towards his Fine Creation.
This blog will be Ever Green.
Kudos to the Team
Thank you babu
It is indeed a rare occasion to witness a creator to fully concentrate on his next work without claiming anything immediately after his completion of a magnum opus of his literary life.
Iyya's dedication towards his creations is awesome.
This sincerity and his vast knowledge have inspired us to start this blog.
It is infact 'WE' who are benefitted by this effort.
thanks a lot for your wishes.
நல்லது, ஒரே ஒரு யோசனை:
அவரது புகைப்படங்களை பதிவில் மிகுதியாக வெளிவருவதைக் குறைக்கலாம். அவரது அன்பர்களுக்கு அது மிகுந்த இன்பத்தினை தருவதாக இருந்தாலும். அவரை புதிதாக அறிய விரும்புபவர்களுக்கு எரிச்சலைத் தரலாம் என்கிற எண்ணத்தில் விளைந்த யோசனை, தவறாகக் கொள்ள வேண்டாம்.
உங்கள் அக்கறையான யோசனைக்கு நன்றி ஜீவா....கண்டிப்பாகப் பரிசீலிக்கிறோம்.
கற்றுக்கொள்ளும் ஆசையுள்ளவர்களை பதிவுகளின் சாராம்சம் கவர்வது போல், படைப்பாளியின் முற்றத்தில் நுழையும் ஆசையையும் தோற்றுவிக்கின்றது போலும் தங்கள் நேர்த்தியான படைப்புக்களும் அதற்கான உற்சாகமூட்டும் பின்னூட்டங்களும்.
கதிரவனொளி கண்கூசச்செய்தால் அதில் கதிரவனின் பங்கென்னவென்பது பலருக்கும் தெரியும்.
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்-” – மீசைக்கவிஞன் சொல்லிவிட்டுப்போய்விட்டான் அதை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள மட்டுமே பயன்படுத்துவதானால் இறுதிவரை
“என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ? “ என்று அதே மீசைகவிஞனின் வரிகளைக்கூறிக்கொண்டு மற்றவர்களின் வெளிச்சப் புகழ் கண்டு “அளவற்றதும்,அநியாயமானதும் !!!!!” என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்….
பின்னூட்டங்களையே படைப்பாக்கும் முட வான்கோழிகளுக்கு கானமயிலாடுவதைக்கண்டால் இப்படித்தானிருக்குமோ
எனது குறிப்புக்காக ஒரு பதிவின் மூலம் விளக்கம் அளித்ததற்கு நன்றி.
///////தெளிவுள்ளவர்கள் புரிந்துக் கொண்டிருப்பர்////////
அவரவர் தெளிவு அவரவர்க்கு !
/////கடலுக்கு வெறுமே காலை நனைக்க வருபவருக்கு இது பற்றித் தெரிய நியாயமில்லை தான்.//////
நான் பாலகுமாரனின் எழுத்துக்களை மெர்க்குரிப்பூக்களில் இருந்து,இப்போதெழுதிய உடையார்,காதலாகிக் கனிந்து' வரை படித்தவன்தான்.
அதே நேரம் திருமுறைகளிலிருந்து,திருமந்திரம் வரையிலான பரிச்சயமும் இறை, அன்போடு எனக்களித்த கொடை.
எவை கடல் என்பதில் கிணறு,சிறுகுளம்,ஏரி,உண்மையான கடல் ஆகியவற்றை,தனித்தனியே அவை மட்டும்,மற்றும் அனைத்தையுமாக அறிந்தவர்களிடையே,மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது உலக நியதி.
மற்றபடி உங்களையோ பாலகுமாரனேயோ குறைத்து மதிப்பிடுவதோ எள்ளுவதோ என் நோக்கமல்ல.
அவரின் எழுத்துக்களில் தோன்றும் அதே தொனி இங்கும் தெரிந்ததும்,பல முன்னணி எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது வழமையாகி விட்ட நிலையிலும் எனது மேற்கண்ட கருத்து அமைந்தது.
அது புண்படுத்தும் விதத்தில் இருப்பின் வருந்துகறேன்.
புரிதலுக்கும் நீண்ட விளக்கத்திற்கும் நன்றி.
கிருஷ்ண துளசியின் இந்த அருமையான விளக்கத்தின் மூலம், அறிவன் மேலும் பலவற்றை அறிந்துக்கொண்டிருப்பார்! இந்த ப்ளாக் ஒரு மிகப் பெரிய வலைதளமாக மாற எனது பணிவான வாழ்த்துகள்
நடராஜன்
Thanks for your efforts, you're blessed indeed and thanks for sharing the blessings!
All your posts are lucid (especially the one on prayers was excellent) and help us in our quest for more knowledge.
I have a small query,grateful if you can get Balakumaran guruji's clarification on the same:
If our karmas alone determine our lives,what is the role of God?
Why should we worship God when we know that we HAVE to go through our current lives for what we've done before & we HAVE good future lives if we do good karma now?
This was borne out of observing people attributing good human beings' sufferings to karma of earlier births.
Great blog,thanks for all the lucid explanations.
Have a small query-if our karmas determine our lives,what is the role of God?
Why should we worship God when we know that we HAVE to go through our current lives for what we've done before & we HAVE good future lives if we do good karma now?
Its a very clear answer....
Thanks to krishna thulasi....
திருமந்திரம் படிப்பதால் மட்டுமே படிப்பாளி ஆகிவிட்ட அறிவன் 250 புத்தகங்களும் உடையார் போன்ற மிகப்பெரிய படைப்பையும் செய்த படைப்பாளியை வான்கோழி என்று அழைத்ததற்கு ஐயா எந்த பதிலும் சொல்லவில்லையா?
இல்லை. ஐயாவிடம் இதைப் பற்றி சொன்ன போது அவர் வெறுமே சிரித்து விட்டு நகர்ந்து விட்டார்.
thanks sivakumar
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நடராஜன்...
அறிவது அவ்வளவு எளியதா என்ன ?
welcome prasanna
many thanks for your wishes.
We will inform iyya about your question and let you know his answer very soon .
பெரியவர்கள் அப்படித்தான்
பெருந்தன்மையாக போய்விடுவார்கள்
நிறைகுடம் என்றும் தளும்பியதில்லை
அறியாதவர்கள்தான் அலட்டிக்கொண்டிருப்பார்கள்
பார் போற்றும் கவியாக பாரதி என்றும் இருப்பதற்கு அவன் தன் சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாமல் சத்தியத்தோடு வாழ்ந்தது தானே காரணமாக இருக்க முடியும் கிருத்திகா....
அது எல்லோருக்கும் சாத்தியமா என்ன?
Mr.Srinivasan,
Your comment sent on 07/05/2008 to our post was inadvertently deleted by us during moderation of the comment. We regret for the same. However we have reproduced the contents of your comments from your e-mail.
Sorry for the inconvenience caused.
"Vanakkam Thulasi.
Can you please bring the following to Aiya's kind attention, when possible.
This is a reference about a film, connected with " Shree Chakram ". I came to know this and wanted to share with Aiya.
Thanks a Lot and Good wishes,
Anbudan,
Srinivasan.
The Last Mimzy (2007)
" Shree Chakram is the MAP of the Past & Future "
The siblings Noah and Emma travel with their mother Jo from Seattle to the family cottage in Whidbey Island to spend a couple of days while their workaholic father David Wilder is working. They find a box of toys from the future in the water and bring it home, and Emma finds a stuffed rabbit called Mimzy, and stones and a weird object, but they hide their findings from their parents. Mimzy talks telepathically to Emma and the siblings develop special abilities, increasing their intelligences to the level of genius. Their father becomes very proud when Noah presents a magnificent design in the fair of science and technology, and his teacher Larry White and his mystic wife Naomi Schwartz become interested in the boy when he draws a mandala. When Noah accidentally assembles the objects and activates a powerful generator creating a blackout in the state, the FBI arrests the family trying to disclose the mystery. But Emma unravels the importance to send Mimzy back to the future. Written by Claudio Carvalho, Rio de Janeiro, Brazil
This was a very well written film about two young and quite brilliant children. They have a frantic mother and a somewhat aloof father. But the story ties them together well. If you are expecting this to be a simple film for the young,you will be disappointed. My children loved it. The mathematics and science are brilliantly weaved into this story of everything good and pure about us, or rather, what could be. E.T. for a new generation? It really could be. I have seen where some have said that children might be a bit bored with this movie. The theater I was in wasn't full of bored children. The children I saw were on the edge of their seats; as was I.
http://www.imdb.com/title/tt0768212/plotsummary
http://en.wikipedia.org/wiki/The_Last_Mimzy"
Thank you very much for your continued support.
நன்றி துளசி.
ஐயாவின் ஆர்வமான ஆழமான புது தொகுப்பு மாவீரன் ராஜேந்திர சோழன் குறித்து என்பதை தெரிந்து கொள்ளும்போது மிகவும் குதுகலமாக இருக்கிறது.
இரண்டாம் முறையாக நிதானமாக உடையாரை படித்து முடித்து - இன்றைய என் அன்றாட வாழ்வுக்கான பல ஊக்கங்களை - யுக்திகளை தெரிந்துகொண்ட நன்றியிலே என் நமஸ்காரங்களை மீண்டும் ஐயாவுக்கு சமர்ப்பிக்கேறேன்.
ஒளி மயமான வலிமையான ராஜேந்திர சோழாரின் காலத்தை கட்டியம் கூறும்விதமாக பலப்பல விஷய விதைகளை அங்கேங்கே, ஐயா உடையர் நாவலிலே தெளித்திருக்கிறார்.
அதன் விருக்ஷங்களின் முழு பரிமாணங்களை ஐயாவின் துல்லிய நெய்தலிலே படிக்க, கிரகிக்க, மீண்டும் மீண்டும் அசை போட மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.
" மரணத்துக்கு அப்பால் வாழ்வு " என்கிற தலைப்பிலே ஏதாவது முன்னுரையாக ஏதேனும் கருத்து தொகுப்பு கைவசம் இருந்தால், ஐயாவின் அனுமதி கிடைத்தால், இங்கே தயை கூர்ந்து வெளியிடவும்.
தெரிந்து கொள்ள ஆவலுடேன் இருக்கிறேன்.
" வியந்து பார்க்க முடியுமேயன்றி அருகேவந்து தொடமுடியது " என தன் நிலையை கூறாமல் கோடி காட்டியிருக்கும் ஐயாவின் சமிபத்திய குமுதம் பெட்டியை கேட்டு மகிழ்ந்தேன். எங்கள் நமஸ்காரங்களை சொல்லவும்.
நன்றி.
தங்கள் முயற்சிகளுக்கும் தங்கள் நண்பர்களின் ஆர்வச் செழுமைக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
மிகுந்த நன்றி.
அன்புடன்.
ஸ்ரீனிவாசன்.
( சமிபத்திய குமுதம் பேட்டியைக் குறிப்பிட்ட அந்த நண்பருக்கு நன்றி. )
THE EXPLANATION TO ARIVANS QUESTIONS WHICH WAS GIVEN BY KRISHNA THULASI AND FRIENDS WAS EXCELLENT.HATS OFF.IYA EPPOZUTHUM SOLLUVATHU POL SATYAM(TRUTH) ATHUVAGA THANANI VELIPADUTHINAL OZIA ATHAI YARUM UNARTHUKOLLA MUDIATHU.ATHU EN ARIVAN UNARAVILLAI. ANY WAY ELLORUKKUM ARIVAN MOLAMAGA UNARTHIA KRISHNA THULASI AVARKALUKKU ENGAL IDYAM KANITHA NAMASKARANGAL.VINOD SELVI
மக்களுக்கு கடல் என்றால் நீலப்பெருங்கடல் மட்டுமே மாக்களுக்கு வேண்டுமானால் கடலுக்கு மாற்றுக்களை அறிந்திருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதென்பது போல் அதிகம் வாசிப்பவர் மட்டுமே மிகுந்த அறிவுடையவர் என்று எண்ணுபவர்களுக்கு ஒருவேளை கடலுக்கென பல விளக்கங்கள் இருக்கலாம். கற்றல் அதன் படி நிற்றலே அறிவென்பவர்க்கு இத்தகைய சாத்தியக்கூறுகள் இருக்க வழியில்லை.
மேலும் இந்த வலப்பக்கத்தின் நோக்கத்தைதான் ஏற்கனவே தங்கள் முதல் பதிவில் பதிவிட்டுவிட்டீர்களே ஆழ உழாதவர்க்களுக்காய் ஏனிப்படி தங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள்.
பயனுள்ள மற்ற பதிவிற்காய் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
What book has Iyya have written about Cholas? where can I get them?
Is Rajaraja Chola a different book?
welcome dalavai,
The book on Rajaraja chola written by Balakumaran is 'UDAYAR'. It consists of six volumes .
This collection is available in VISA PUBLICATIONS, 54, VENKATNARAYANA ROAD, T.NAGAR, CHENNAI-17.
He is now writing about Rajendra Chola.
Post a Comment