Monday, January 10, 2011

சொர்க்கம் நடுவிலே - வாசகர் குரல்

ஜெய விஜயீ பவ !

டியர் மாஸ்டர்,

சொர்க்கம் நடுவிலே படித்து முடித்த பிறகு, உங்களை இப்படித் தான் முகமன் சொல்லி வரவேற்க வேண்டும்; அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கேசவன் நாராயணனோடு பயணித்துவிட்டு, இப்போது தான் பூமியில் இறங்கியது போலிருக்கிறது.

மரணத்தைப் பற்றிய அறிவைத் தந்து, மனித மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் பயத்தை ஒரே வீச்சில் துடைத்தெறிந்து விட்டீர்கள்.

எல்லோருக்கும் நீங்கள் பார்த்தசாரதி. ஆனால், இந்த பார்த்தன் உங்களுக்கு சாரதி. இது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப் பேறை விட மிக உன்னதமான விஷயம் உங்களோடு காரில் பயணிக்கும் போது, நீங்கள் எழுதப் போகும் கதையைப் பற்றி விவரிப்பதைக் கேட்பது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன். “பாலாஜி, நான் மரணத்திற்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதாக நிச்சயித்திருக்கிறேன். எமப்பட்டினம் என்றால் என்ன என்று ஒரு அரை மணி நேரம் உனக்கு சொல்லுகிறேன். கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுவாயா” என்று கேட்டீர்கள். உடனடியாகத் தயாரானேன்.

மரணம் என்றால் என்ன?  எமப்பட்டினம் என்பது என்ன?    எமகிங்கரர்கள் யார்?   மரணம் ஏன் வலி?   வலியில்லா மரணம் உண்டா?   நரகம் உண்டா?   சொர்க்கம் உண்டா?   நரகம் எது?   சொர்க்கம் எது?   என்ற  வாழ்வின் அடிப்படையான கேள்விகளை நீங்களே எழுப்பி, அதன் பதில்களை நீங்களே தெளிவாக விவரித்துக் கொண்டு போக, என் மனம் கை கட்டி, வாய் பொத்தி, உங்கள் உபநிஷத விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. கார் தன்னிச்சையாக ஓடிக் கொண்டிருந்தது அதிசயமே.

கனத்த ஒரு அமைதி என்னை சூழ்ந்து கொண்டது. நன்றாக புரிந்தது போலவும் இருந்தது. புரியவில்லையோ என்ற சந்தேகமும் இருந்தது.

இவ்வளவு கடினமான ஒரு விஷயத்தை இவர் எப்படி நாவலாக்கப் போகிறார்? அப்படி நாவலாக்கினால் படிப்பதற்கு உவப்பாக இருக்குமா என்ற கவலையும் எழுந்தது. ஆண்-பெண் உறவு சிக்கல்களை விளக்கி வளமான வாழ்விற்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறைதேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற பெரிய கேள்விக்குறி என் முன்னே நின்றது.
என்றோ ஒரு நாள் மரணம் நிகழப் போகிறது. அதைப் பற்றி இன்று தெரிந்து கொண்டு ஏன் வாழ்வின் சுவையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? வாழும் வாழ்க்கையையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் மரணத்தைப் பற்றி ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும். உங்களின் இந்த முயற்சி அவசியம் இல்லாத ஒன்றோ என்றும் தோன்றியது.




ஆனால்,

“நான் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர்த் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆயிற்று. இன்னும் பிறக்கவில்லை. இப்போது பூமியிலுமில்லாமல், பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். மரணத்திற்குப் பின் உடலில்லாத உலகத்திற்கு வருபவர்களுக்காக உதவிகள் செய்ய உத்தேசித்து இங்கே காத்திருக்கிறேன்”    

 என்று ஆரம்பிக்கப் போகிறேன் பாலாஜி’, என்று நீங்கள் கூறியவுடன் I understood that the magician is back at his work.

மரணம் மற்றும் மறுபிறப்பு என்ற சுழற்சியைப் பற்றி நீங்கள் விவரித்த விஷயங்கள் அறிவியல் உலகின் அடிப்படை விதிகளோடு மிகச் சரியாகப் பொருந்தியது கண்டு ஆச்சரியப்பட்டேன்.

For every action there is an equal and opposite reaction-

இது நியூட்டனின் மூன்றாம் விதி.

நாம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று நீங்கள் விளக்கும் கர்மா theoryஐ மறுக்கவே முடியவில்லை. நமது செயலின் எதிர்வினைகள் மரணத்திற்குள் முடிந்து விடுவதில்லையே என்று யோசிக்கும் போது, மரணத்திற்குப் பின்னும் இந்த வாழ்வின் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வாழ்விற்குள்ளேயே வினைகளை நிறுத்தியவருக்கு ஏது மறுபிறப்பு, அப்படிப்பட்டவர்கள் தான் ஞானிகளோ!

இப்போது அறிவியலின் மற்றொரு விதியும் நினைவுக்கு வருகிறது.

‘Energy can neither be created nor be destroyed. It is transformed from one form to another’.

----இது   Law of conservation of energy.

விஞ்ஞானத்தின் அதிஉன்னத நிலை ஞானமோ. சத்தியத்திற்கு ஏது பிரிவினை.

இதுவரை பலப்பல ஞானிகளைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்போது பகவான் ரமணர் போன்ற மகரிஷிகளின் ஞான தத்துவங்களை சர்க்கரை மிட்டாயாகத் தந்து கொண்டிருக்கிறீகளோ.

உலகம் இரண்டு மாறுபட்ட நிலைகளுக்கிடையே இயங்கிக் கொண்டிருக்கிறது. விருப்பு-வெறுப்பு, இரவு-பகல், இன்ப-துன்பம், பாஸிடிவ்-நெகடிவ் என்பது உண்மையெனில் zero point என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா. இந்த zero point தான் நீங்கள் சொல்லும் நடுநிலையோ. இந்த நடுநிலையிலேயே இருந்து நாம் செயலாற்றும் போது there won’t be any reaction, Isn’t it? இப்படித் தானே பிறப்புச் சங்கிலியை அறுக்க வேண்டும். இது தானே நீங்கள் சொல்வது.

“சொர்க்கம் நடுவிலே” படித்து முடித்த பிறகு “சக்தி விகடனில்” நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் தத்துவார்த்த விளக்கங்களை மீண்டும் படித்தபோது நன்கு புரிந்தது. Thank you master.

இதைவிட எளிமையாக வேதாந்த கருத்துகளை யாரால் எழுத முடியும்? Hats off எழுத்துச் சித்தரே.




வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்து விடவில்லை. மரணத்திற்கு அப்பாலும் தொடர்கிறது. ஒவ்வொரு செயலின் எதிர்வினயையும் நாம் அனுபவித்தேயாக வேண்டும். தப்பித்துக் கொள்ளவே முடியாது என்பதை “சொர்க்கம் நடுவிலே” படித்துத் தெளியும் போது ‘நம் வாழ்க்கை நம் கையில்’ என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பதும் புரிகிறது.

வாழ்வை பயம் கலந்த மரியாதையுடன் அணுக வேண்டும் என்ற பொறுப்பை எங்களையும் அறியாமல் எங்களுக்குள் ஏற்படுத்தி விடுவதே “சொர்க்கம் நடுவிலே”யின் வெற்றி. இதைவிட பெரிய சமூக சேவை வேறு என்ன இருக்கக் கூடும். தனி மனிதன் மாறாமல் இங்கு என்ன மாற்றம் கொண்டு வந்து விட முடியும். உங்கள் எழுத்தின் மூலம் சப்தமே இல்லாமல் பெரும்புரட்சி செய்து விட்டீர்கள்.

பாரத கலாசாரத்தின் ஆணிவேரான ஞான தத்துவங்களை மேற்கத்திய மோகம் நிறைந்த இந்த சூழலில் convincing ஆக விளக்கி, மக்கள் மனதை நேர்வழிபடுத்தும் உங்கள் எழுத்து இலக்கிய உலகின் உயரிய விருதான “சாகித்ய அகாடமி” விருதால் கெளரவிக்கப்பட வேண்டும்.

ஒரு வினைக்கு எதிர்வினை உண்டெனில்... விருது நிச்சயம் உண்டு.

‘நான் வெறும் உடலல்ல, நான் யார் என்று என் மனதைப் பார்க்கும் போது, என் எண்ணங்கள் புரிகிறது. எண்ணங்கள் புரிய தியானம் இயல்பாகிறது. நடுநிலையில் நின்று இந்த உலக விஷயங்களை உற்று நோக்க ஆரம்பிக்க நானும் கேசவன் நாராயணனாகி விட்டேனோ!’

‘சொர்க்கம் நடுவிலே’ படிக்கும் ஒவ்வொருவரும் கேசவன் நாராயணன் ஆவதைத் தவிர்க்க முடியாது.
Is the act witnessing itself Kesavan Narayanan, I think so.

சொர்க்கத்தை எந்த ஜென்மத்தில் அடைவோம் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையையே சொர்க்கமாக்கி விட்டீர்கள். பயனுள்ள வாழ்வு, பயமில்லா வாழ்வு சொர்க்கம் தானே!

இறப்பதற்கு முன்னாலேயே சொர்க்கத்தை அனுபவித்தால் அதைவிட பெரிய பேறு வேறு என்ன இருக்க முடியும்.

Your ‘sorgam naduvile’ is a tribute to mankind.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் கேசவன் நாராயணன் அறிமுகப்படுத்திக் கொள்வது ஒரு புதுமை. மிக அருமை.

அந்த கமாண்டோ வீரனின் மரணம் மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை நினைவூட்டியது. அங்கு மாய்ந்த வீரர்களும் இப்படித் தான் சொர்க்கம் சென்றிருப்பார்களோ என்ற மனமயக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி.

உங்கள் எழுத்தின் மற்றுமொரு தாக்கம் என் உடனடியான ஸ்ரீரங்கப் பயணம். துலுக்க நாச்சியார் சந்நிதியில் உருகி நின்ற மணித்துளிகள்.

விதம் விதமான மரணங்களைச் சொல்லி அதன் நிலையையும் விளக்கி இருக்கிறீர்கள். ஞானியை பேச வைத்து பல சிறிய, பெரிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுகிறீர்கள். மரணத்தருவாய் எப்படி இருக்கும் என்பதை ஒரு கிழவர் மூலம் விளக்குகிறீர்கள். உயிர்ப் பிரிவதை நேரடியாகப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

கொலை செய்யப்பட்டவன் கூட மரணத்திற்குப் பின் அமைதியாகிறான். ஆனால், தற்கொலை மரணத்திற்குப் பின்னும் மிகப் பெரிய வேதனை என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு அப்பாலும் கேள்விகள் எழும். வாசகர்கள் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு தெளிய வேண்டியது தான்.


நீங்கள் வாழ்வதற்கு மட்டும் நல்ல வழிகாட்டி அல்ல. நல்ல மரணத்திற்கும் உங்களால் வழிகாட்ட முடியும். இந்த நாவலை படித்து முடித்த பிறகு இனி எந்த மரணத்தையும் முன் போல் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.

இந்த பார்த்தன் மீண்டும் தயாராக இருக்கிறேன். கண்ணனோடு அடுத்த கார் பயணம் எப்போது.

At your service,
Your’s ever

Balaji Arun

Divisional Manager ,
Brakes India Ltd.

7 comments:

said...

Thank you Shri Thulasi,
Thank you for this FANTASTIC introduction.
OUR Namaskarams.
Migundha Anbudan,
Seenuvaasan. V.
Perth.

said...

thanks seenuvaasan

have you read 'sorgam naduvile'

said...

Dear Shri. Thulasi,
I was LONGING to know more about this recent writings of Shri. Balakumaran.
Seeing this post, searched in the net and got to read the first 5 episodes.
What Can i Say. ?
Extraordinary clarity on this topic.
I have arrranged to buy copies of this book, to be given to my aged grand Mother, 84 now living behind our Tanjore Big Temple. My father, at his 72age now, will be very GLAD to DWELL deep into the pages & CLARITY of this Great writing.
Thank you.
Our Namaskarams to Sir.
Migundha Anbudan,
Srinivasan. V.

said...

Hi

Pranams. What a blessed person Balaji sir is to be with Ayya. He exactly said this sentence,"Ayya teaches in our life time and also after it ends". I can understand these lines ayya, not enough matured to realize that. I need your blessings ayya. thank you so much krishna tulsi for doing a great job.

Thanks,
Rajesh Anand

said...

ஜெய விஜயீ பவ.
வணக்கம் துளசி.
வணங்கி மகிழ்கிறேன்.
நலந்தானா. ?
இரண்டு நாள் முன்புதான் சொர்க்கம் நடுவிலே படித்து முடித்தேன்.
பெரியவர் கேசவ நாராயணனோடு கூடவே பயணித்து முடித்தேன் என்றும் சொல்லலாம்.
அப்படித்தான் சொல்லவேண்டும்.

என் சகோதரனின் உதவியுடன் நான்கு புத்தகம் உடுமலை பதிப்பகத்திலே வாங்கினேன் சில மாதம் முன்பு. அதாவது மார்ச்சில்.
தஞ்சை பெரிய கோவில் பின் வசிக்கும் என் எண்பது வயது பாட்டியிடம் ஒன்றும், சென்னையிலே அப்பா அம்மாவிடம் ஒன்றும் , தபாலிலே அனுப்பவதற்கு என்று எனக்கொன்றும் வைத்துக்கொள்ளச் சொல்லி இன்னொரு பிரதியை, எழுபத்தைந்து வயதான சுவாமிநாதன் என்கிற ஒரு நண்பருக்கு சீர்காழிக்கு அனுப்பிட ஏற்பாடு செய்தேன். ஐந்து மாதங்களாகியும் என் பிரதியை எனக்கு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப என் சகோதரன்னு ஓய்வோ அவகாசமோ அமையவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ! குறையொன்றுமில்லை.

சொர்க்கம் நடுவிலே படித்து ரசித்து மகிழ்ந்த அந்த பெரியவர் சீர்காழி சுவாமிநாதன், கருணையோடு, அந்த புத்தகத்தை, நூற்றி ஐம்பது ருபாய் தபால் செலவு செய்து எனக்கென இங்கே ஆஸ்திரேலியாவுக்கு பத்து நாள் முன் கிடைக்கும்படி போஸ்ட் செய்தார். போன் செய்தும் சொன்னார். இந்த பெரியவர் சுவாமிநாதன்தான், பத்து வருஷம் முன்பு எங்களுக்கு என்று நாங்கள் வசித்த சீஷேல்ல்ஸ் தீவுக்கு, " என் கண்மணித் தாமரை " அனுப்பின மகான்.

இதுதான் பின்னணி. இவ்வோளவுதான் நடந்தது. இதுவரை.

இரண்டு நாட்களாக, பலமுறை பெரியவர் கேசவ நாராயணனோடு அளவளாவி வருகிறேன். பல மாதங்களாகவே கனவுகளை கண்காணிக்கத் துவங்கி உள்ளேன். ஞானியும் அந்த முதிர்ந்த அம்மாவும் இன்ன பிற நல்ல ஜோதி ரூபங்களும் சதா சர்வ காலமும், மேலே நான் பார்க்கும் ஆகாச வெளியிலே எப்போதும் இருந்து கனிவோடு கவனித்து என்னை வழி நடத்துவதை பூரணமாக உணருகிறேன்.
நன்றி.
வேறொன்றும் சொல்லத் தகுதியில்லை எனக்கு.
பெரியவர் ஐயா பால குமரன் சாருக்கு எங்களின் நமஸ்காரங்களைச் சொல்லவும்.
அவரின் நலத்துக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
கொடவாசல் அருகே ஓகையிலே பிறந்து சிமிழி கிராமத்திலே விளையாடி திருவாரூரிலே படித்து சென்னையிலே CA முடித்து இப்போ இங்கே பெர்த்தில் வசித்து வரும் எனக்கு, இன்று இந்த காலக்கட்டத்திலே எது அவசியமோ, எது முக்கியமோ, எது ஸ்ரேஷ்டமோ அதை சுவையாக உருட்டித் திரட்டி சுகமான லேகியமாக அளப்பரிய கருணையோடு பெரியவர் ஐயா பாலா குமாரன், இந்த கேசவ நாராயணன், மூலமாக அனுப்பி இருக்கிறார்.
நமஸ்கரிக்கிறேன்.
பெரியவர் கேசவ நாரயணனின் அந்த பிரமாதமான பூரணமான மேலட்டை வண்ண ஓவியத்தை, இங்கே நகல் எடுக்கும் வசதியிலே பெரிது படுத்தி, அன்றாடம் கண்ணோடு கண் பார்த்து, ஆசிர்வதங்களையும் ஆலோசனைகளையும் பணிவோடு பெறும் வண்ணம் - நான் இங்கே புழங்கும் அறையிலே , கருவூரார் படத்துக்கருகே மரியாதையோடு அமர்த்தி உள்ளேன்.
மீண்டும் மீண்டும் பல தடவை படிப்பேன்.
நன்றியோடு இருப்பேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
ஜெய விஜயீ பவ.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.

said...

Hey- I am an ardent fan of Bala and wish to read his books. Where can I get an online copy of Sorgam Naduvile and other Bala's creations. I am in US. Please advise.

Ramanan
aramanan@yahoo.com

said...

please contact

VISA PUBLICATIONS
Ph. 044-24342899, 044-24327696
email ID : enquiry@thirumagalnilayam.com

Website:

www.tirumagalnilayam.com