Thursday, May 15, 2008

பொன்னூஞ்சல் - எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி

ஊஞ்சலின் ஒரு உந்துதல் இன்னொரு உந்துதலை உருவாக்குவதைப் போல இந்தப் பேட்டிப் பகுதி ஒரு கேள்விக்குண்டான பதில் இன்னொரு கேள்வியைத் தோற்றுவித்து, அதற்குண்டான பதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பும் விதமாய் அமைந்திருக்கிறது. மனதை உற்சாகப்படுத்தி, புத்தியை குளுமையாக்கும் ஒரு ஊஞ்சலின் அசைவு போல ஆரோக்கியமான கேள்வியும், அர்த்தமுள்ள பதிலுமாய் இந்தப் பகுதி இருப்பதால் இது பொன்னூஞ்சல்.







கிருஷ்ணதுளசி: எழுத்துப்பணி உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? ஆமெனில் எதனால் இந்த திருப்தி ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?




பாலகுமாரன் : என் எழுத்துப்பணி எனக்கு மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கிறது. நான் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்து திட்டமிட்டிருந்தேனோ, அதை மிகச் செவ்வனே செய்திருக்கிறேன். சில சமயம் என் எழுத்துகள் நான் நினைத்ததையும் விட மிக அழகாக என்னிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது என் எழுத்தை நான் படிப்பதால் ஏற்படும் திருப்தி மட்டுமல்ல. என் எழுத்தைப் படித்த வாசகர்கள், என்னிடம் எதிரொலிப்பதால் ஏற்பட்ட சந்துஷ்டியும் கூட.

என்னுடைய எழுத்தை ஆரம்ப காலத்திலிருந்து படித்து, என்னுடனே வளர்ந்து, என் பரிணாம வளர்ச்சிப் போல அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, என்னுடைய எழுத்துகளை தனக்கு, தன் வாழ்க்கையில் சாதகமாய் உபயோகப்படுத்திக் கொண்டு வளர்ந்து பலம் பெற்ற வாசகர்கள் பலர். இதை நேரடியாகவும், கடிதம் மூலமும் பல நூறு முறைகள் கேட்டும், படித்தும் நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

உங்களால் என் வாழ்க்கை செம்மை ஆயிற்று. தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை உதறிவிட்டு நான் வாழ்ந்தேன். என்னுடைய குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு, எனக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதற்கு உங்கள் எழுத்துதான் காரணம் என்றெல்லாம் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். ஒரு படி மேலே போய் தன் குழந்தைக்கு பாலா என்று பெயரிட்டு கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது என்னை சந்தித்தாலும் கை கூப்பி மிகப் பரவசமாய் நமஸ்கரிக்கிறார்கள். எத்தனை எழுத்தாளர்களுக்கு இது கிடைத்தது என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் எனக்கு, என் வாழ்க்கைக்கு உதவி செய்தது என்ற வாசகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் என்னிடம் இருப்பதை நான் உணருகிறேன்.

ஆனால் வலது என்று ஒன்று இருந்தால் இடது என்று ஒன்றிருக்கும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். இந்த உலகம் த்வந்தமயமானது; இரண்டானது. என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாக படித்தவிட்டு அல்லது வேறு எவ ரேனும் படிக்கக் கேள்விப்பட்டு அதைத் தான் படித்ததாய் நினைத்துக் கொண்டு பாலகுமாரன் இப்படி எழுதுகிறார், அப்படி எழுதுகிறார் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.

நம்முடைய தமிழ் இலக்கியத்தில் சரியானபடி படித்துவிட்டு விமர்சனம் செய்கிற ஒரு பாங்கு வளரவே இல்லை. அபிப்ராயங்கள் தான் அல்லது புத்தகத்தைப் பற்றிய மேலோட்டமான செய்திதான் வலம் வருகின்றன. விமர்சனக் கலை என்பது தமிழில் இல்லவே இல்லை. அப்படி சிலர் ஆரம்பித்தும் அது அடாவடித்தனத்தில்தான் முடிந்தது. உண்மையாக இல்லை. விமர்சனம் இல்லாது போயினும், நல்ல வாசகர்கள் தமிழில் இருக்கிறார்கள். புத்தக திருவிழாவில் புத்தகம் விற்பதும், அடிக்கடி புத்தகத் திருவிழா நடப்பதும் நல்ல படிப்பாளர்கள் பலமாக வளர்வதும் இதற்கு நல்ல உதாரணங்களாக கொள்ளலாம்.


கிருஷ்ணதுளசி: நீங்கள் ஆரம்பத்தில் பாலியல் பற்றி எழுதுவதாகவும் இப்பொழுது ஆன்மீகம் பற்றி எழுதுவதாகவும் முற்றிலும் மாறுபட்டதாகவும் குறை சொல்கிறார்களே சில வாசகர்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




பாலகுமாரன் : நான் நுனிப்புல் மேயும் வாசகர்கள் என்று சொன்னது இவர்களைப் பற்றித்தான். பாலியல் பற்றி நான் மிகக் குறைந்த அளவில் தான் எழுதியிருக்கிறேன். பாலியல் வாழ்க்கையில் மிக ஆதாரமான விஷயம். நிறைய பேர் திருமண வாழ்க்கை இங்கு குப்பைத் தொட்டியாய் போனதற்கு காரணம் பாலியல் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாததும், பெண்களை அன்பாக அணுகாததும் தான் காரணம். ஆண் என்ற மமதை, அலட்சியம் அல்லது ஆணாதிக்கம் என்று எகிறுகின்ற பெண்கள் எண்ணிக்கை அதிகமானதும் காரணம். இந்தப் பாலியல் குளறுபடிகள் வாழ்க்கையில் இருப்பதை நான் கண்ட பிறகு எப்படி இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை செய்து இது தொடர்பாக வெகு சில கதைகளே எழுதியிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை, வேலை, வருமானம், குழந்தைகள், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பர்கள் என்றெல்லாம் நகர்ந்து அதிலே பெண்களுடைய பங்கும், ஆண்களுடைய பங்கும், காமத்தினுடைய பங்கும் என்னவென்று யோசித்து எழுதியிருக்கிறேன். வெறும் பாலியலோ, வக்கிரமான பாலிய லோ நான் எழுதியதில்லை. பாலியல் விஷயத்தில் தவறான அணுகுமுறை முகத்தில் அடித்து வீழ்த்தும் என்பதை சொல்லுவதற்காகவும் சில கதைகள் எழுதியிருக்கிறேன்.

பாலியல் மட்டுமே எழுதியிருக்கிறேன் என்ற பார்வை வக்கிரமான பார்வை. அப்பா அம்மா கதை தானே எழுதியிருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வது படிப்பின்மை. படித்தது பற்றிய தெளிவின்மை. இவர்கள் தான் நுனிப்புல் மேய்ந்து விட்டு, மேலாக படித்து விட்டு, என் எழுத்தை சரியாக அணுகாமல் புறம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் எவரையாவது குறை சொல்லிக் கொண்டிருப்பது சிலருடைய வாழ்க்கை. இவர்கள் தானும் உருப்படியாக செய்ததில்லை. மற்றவர் உருப்படியாக செய்ததையும் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய பரிணாம வளர்ச்சி என்னவோ அதைத் தான் என் கதைகள் வெளிப்படுத்துகின்றன.

இருபது வயதில், இருபத்தி ஐந்து வயதில், பெண் ஒரு பிரமிப்பாகவும் மிக அவசியமானதாகவும் இருந்தது. இது மெல்ல மெல்ல மாறி பல்வேறு விதமான உருவகம் எடுத்து குழந்தைகளோடு கூடிய ஒரு தாய். அவள்தான் மனைவி என்ற அழகும் சேர்ந்தது. திருமணத்திற்கு நிற்கின்ற பெண்களைப் பற்றி கவலைப்படுகின்ற கணவன் மனைவியாக இருப்பவர்கள் பற்றிய கதைகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பாலியல் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட விஷயம். பெண்கள் போகப் பொருளாகக் கருதப்பட்ட விஷயம். இதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மிகச் சில கதைகள் எழுதியிருக்கின்றேனே தவிர என் எழுத்துகளில் பலவும் பல்வேறு விதமான கோணங்களைக் கொண்டவை. தன்னைத் தேடுபவை. ஆத்ம விசாரம் கொண்டவை. தனிமையை ரசிப்பவை. மற்றவர்களுக்கு எளிதில் உண்மையாக விட்டுக் கொடுப்பவை. போலித்தனத்தைச் சாடுபவை. சத்தியமாக வாழ்க்கையில் இருக்கின்ற சந்தோஷத்தை இனம் காட்டுபவை. இதைப் புரிந்து கொண்டு இதை நன்றாக என் கதைகள் மூலம் அறிந்துக் கொண்டு தனக்குள் விவாதித்து தெளிவு பெற்று தேர்ந்த வாசகர்கள் எனக்கு
மிக அதிகம். அதனாலேயே நான் கொண்டாடப்படுகிறேன். அதனாலேயே பலர் பொறாமைக்கும் ஆளாயிருக்கிறேன்.

என் ஆன்மீகம் என்பது மிக ஒழுங்கான, சீரான வளர்ச்சியைக் கொண்டது. ஆன்மீகம் திடுமென்று நான் எழுதவில்லை. என்னுடைய முதல் கதையிலேயே கூட ஆன்மீகம் கலந்திருக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளிலே கூட கடவுள் தேடல் என்ற விஷயத்தினுடைய சாயல் உண்டு.பாசுரங்களூம், தேவாரங்களும் மேற்கோள் காட்டுவது மட்டுமல்லாது,எல்லோராலும் கொண்டாடப்படும் நான் எழுதிய குதிரை கவிதைகளில் கூட இந்த ஆன்மீகத் தேடல் மிகப் பலமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவலான இரும்பு குதிரைகளிலேயே இந்தக் குதிரைக் கவிதைகள் இடம் பெற்று விட்டன. இந்த ஆன்மீகம் எனக்கு என்னுடைய தாயாரால் அ றிமுகபடுத்தப்பட்டு, பல புத்தகங்களால் பலமாக்கப்பட்டு, என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களால் பூரணமாக்கப்பட்டது. குருவருளால் எனக்குள் மிகப்பெரிய மலர்ச்சியை, என் இருப்பை, என் உயிர் அசைவை, எனக்குள் இருக்கின்ற அந்த ஆன்மாவின் தரிசனத்தை, கடவுள் சிறப்பை நான் மனமார உணர்ந்தேன். பல்வேறு ஆன்மீக அனுபவங்களுக்கு ஆட்பட்டேன். அவைகள் தான் என் எழுத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம் என்பது குடும்ப வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டது, தள்ளி நிற்பது, துறவறம் போன்றது என்ற விஷயத்தை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை; சொன்னதுமில்லை. உலக வாழ்க்கையில் புரண்டு விழுந்து தன்னை இடையறாது அவதானிப்பதே என்னுடைய கொள்கை. அந்த அவதானிப்பைக் கூர்மையாக்கிக் கொள்ள என்னவெல்லாம் தேவை என்பதை நான் சொல்லியிருக்கிறேன்.

என்னுடைய ஆன்மீகம் கற்பனையானது அல்ல. நான் அனுபவித்தது. எனக்கு தெளிவாக ஊட்டப்பட்டது. என்னிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய சத்தியம் அது. அ து வாழ்க்கையோடு இரண்டற கலந்திருக்கும் விஷயம் என்று நான் சொல்வது இன்று புரிந்துக் கொள்ளப்படாவிட்டாலும் பிறகு ஒரு நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதில் எனக்கு நெல்முனையளவும் ஐயம் இல்லை.

21 comments:

said...

SATHIYAM,iyyavin ezhuthe ennai matritru, adhuve ennai mana arokkiyum ullavanaga ennai matriyadhu.

Chandru...

said...

Keelvzhi bathil paguthi megavum arumai, vazhum kaalathil entha oru gzhaniayum perumpaanmayana makkal purinthukolvathillai, athu intha desathin saabham, purinthu kondavarkalukku ithu oru pokkisham

said...

Thank you Thulasi.
Very kind of you.
God Bless and our Namaskarams to Aiya. THis PONNUNJAL has to be read several times to completely GRASP its import.
good wishes and Warm Regards,
srinivasan.

said...

"என்னுடைய எழுத்தை ஆரம்ப காலத்திலிருந்து படித்து, என்னுடனே வளர்ந்து, என் பரிணாம வளர்ச்சிப் போல அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, என்னுடைய எழுத்துகளை தனக்கு, தன் வாழ்க்கையில் சாதகமாய் உபயோகப்படுத்திக் கொண்டு வளர்ந்து பலம் பெற்ற வாசகர்கள் பலர்”

இதை எத்தனை முறை சொன்னாலும் தகும். வெறும் வார்த்தைகளை விழுங்குவதான வாசிப்பை கொண்டவர்களுக்கு கற்றுக்கொள்ளுதல் கைவராமலே போகிறது. அதனாலேயே கத்துக்குட்டி விமர்சனங்களும் தேவேயற்ற ஒப்பீடுகளும், ஒரு சார்பான பார்வைகளும் படைப்பாளியையும் படைப்பையும் பற்றி உருவாகிறது..

“உலக வாழ்க்கையில் புரண்டு விழுந்து தன்னை இடையறாது அவதானிப்பதே என்னுடைய கொள்கை” ஆன்மீகத்தின் பன்முகத்தன்மையை இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது. மீண்டும் கேட்டு உள்ளத்தில் இருத்திக்கொள்ளவேண்டிய உண்மை. மேலோட்டமான கேள்விகளைப்போல் தோன்றினாலும் அதன் இலக்குகள் மிகவும் ஆழமான பதில் என்பது படிக்க படிக்கப் புரிகிறது. எழுத்துச்சித்தரின் எழுத்துக்களை நேசிக்கும் வாசகனுக்கு இந்தப்பக்கங்கள் பொக்கிஷம் போன்றவை. மீண்டும் மீண்டும் முத்துகுளித்து நல்முத்துக்களையே தரும் உங்களுக்கு என் நன்றிகள்.

said...

Thank you very much Krishna Tulasi for giving pon unjal for us.

Ayyavin ezhuthukkal manidha vazhvin arambathil irundhu mudivu
adhavadhu kadavulai aridhal varai vazhi kattum vedham. Muzhumaiyanadhu.

Sincerely,
Jayapradha
Connecticut,USA

said...

எழுத்து சித்தர் எங்கள் ஆன்மீக குரு பாலகுமாரன் அவர்களை பற்றி
ஒரு ஊடகம் ,இன்டெர்னெட்டில் படிக்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
உண்மையான சத்தியமான வார்த்தைகளை படிக்க பரவசமாக உள்ளது.

KRISHNA THULASI ..YOU ARE BLESSED. some years back when I was in US, some of my internet
friends and me wanted to come up with one like this, but it could not get materialized.
Great Begining.


"எழுத்து என்பது இறைவன் கொடுக்கும் வரம்.அதன் மூலம் அடுத்தவர் வாழ்க்கையை
மாற்ற முடியுமா? ..மாற்றி கொண்டு இருக்கிறாரே! இதோ!

ஆன்மிகம் என்பது என்ன ? யாரால் கடவுளை உணர முடியும் ??
வாழ்க்கை என்ன சொல்கிறது?
எப்படி தொடர்பு கொள்வது இங்கே?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் அய்யா அவர்களின் எழுத்துக்கள் தான்!!!

All these questions were not answered in every one's life ,till he or she reads ayya's words.
My life has changed only totally after I read "Thalaiyanai pookkal, Pandhayapura, kadalora kurivigal"

Suggestion :
Every book of Ayya has full of life changing lines.Like given below in the book of என் கண்மணி தாமரை.

"உன் ஒவ்வொரு செயலிலும் உன்னை வேடிக்கை பார்க்க கற்றுக்கொள். உன்னையே நீ விலக்கி பார்.
உன்னை வேறு யாரோவாகவோ நினைத்துக் கொள்.அப்போது அது எளிதில் கை கூடும்."
-என் கண்மணி தாமரை
"அக்னி எல்லாத்தையும் பஸ்பம் பண்ண முடியுமோ?.. எதை பண்ண முடியுமோ அதைத்தான் பண்ண முடியும்.
குப்பையை எரிச்சிட்டு , அக்னி மாரைத் தட்டிக்கலாமோ?"
-என் கண்மணி தாமரை
These lines are life changing lines.

Could you please start sharing some of the words from each books of அய்யா by making one new chapter the blog.

Bhagwan Yogi Ramsuratkumar's words are ringing in my ears
" Balkumar is mahaa kavi! Balkumar is my pen,his writings will be remembered here for long long time"

--Natarajan
Frankfurt,Germany

said...

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சந்துரு.....

said...

"கடை விரித்தேன் கொள்வாரில்லை"

என்று கூறிச் சென்ற ஞானியர் பல கோடி.

தங்கத்தைப் போன்றே பலப்பல போலிகளும் இவ்வுலகில் இருப்பதால் விளம்பரம் இல்லாத ஞானிகளின் வழிகாட்டுதல்கள் புரிந்து கொள்ளப்படுவதில்லை. இதன் பெயர் மாயை.

உங்கள் ஆதங்கம் புரிகிறது பாஸ்கர்.

நல்ல எண்ணமே நல்ல வழிகாட்டுதலை செய்ய வைக்கும்.அப்படி ஒரு நல்ல வழிகாட்டியின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் காட்டும் முயற்சியே இந்தப் பதிவுப்பக்கம்.

said...

அரைவேக்காடான விமர்சனங்களின் ஆணிவேரை மிகச் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் கிருத்திகா..

எந்த ஒரு விஷயத்தையும் விமர்சிப்பதற்கு முன் சார்பற்று முழுமையாக அதைப் பற்றி அறிந்து கொள்வதே விமர்சனம் செய்வதற்கான முதல் தகுதி என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...நன்றி...

said...

சரியான கண்ணோட்டத்திலான பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள் ஐயாவின் கதைகளின் மூலம் நாம் பெறுவதை மறுக்க முடியாது.

இது நம்மை அறியாமல் நம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பலத்தையும் அளிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதைப் புரிந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள் தானே ஜெயப்ரதா..

said...

Thank you Srinivasan,

We sincerely appreciate your regular attendance and immediate feedback.

Such enthusiasm is helping us to solidify our aim and accelerate our efforts.

We have informed iyya about "the last Mimzy" and have made arrangements to provide him the CD.


Thanks a lot once again....

said...

வருக நடராஜன்..

உங்கள் குதூகலம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நீங்களும் உங்கள் நண்பர்களும் எடுத்த முயற்சி உண்மையிலேயே பாராட்டுதற்குரியது. அதே விஷயத்தை செய்யும் எங்களை உற்சாகப்படுத்தும் உங்கள் உள்ளம் விசாலமானது.

உங்கள் suggestion-ஐ செயலாக்க முயற்சிக்கிறோம்.

முக்காலமும் உணர்ந்தவர்கள் போல் ஐயாவின் எழுத்தின் வயதை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் கத்துக்குட்டிகளுக்கு மகாஞானியான பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் சத்திய வாக்கை எடுத்துச் சொன்னதற்கு என் பணிவான வணக்கங்கள்.

உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. .. நடராஜன்......

said...

AIYA WIN EZUTHUKKAL PADITHU VAZKAIL VETRI PETRU KONDU IRUKKUM LASHA KANAKANA KUDUBAMGALIL ENGAL KUDUMBAUM ONRU. EDUTHU KATTAGA KATHAL ENBATHU VITTU KODUTHAL ENABATHAI NAGAL IRUVARUM AIYA WIN EZUTHUKALIL IRUNTHU PADITHU ATHAI UNARTHU ENRU VARAI VITTU KODUTHU VAZUN THU KONDU IRUKKIRUM.ETHU POL EVALAO UTHARNAM SOLLI KONDU POGALALM.
ENTHA ORU GANIUM VAZUM KALATHIL POTRAPADUVATHUILLAI. ITHU MANITHA VARGATHIN ORU MIGA PERIA SABAKEDU.AIYA AVARGAL EVALLAU ARUMAINA BOOKS EZUTHINALUM (EN KANMANI THAMARAI,PATTAABISHEKAM, PON VATTIL KADAVUL VEEDU KADAL ARANGAM) PERUMPANMAINA MAKKALAL PURINTHU KOLLA MUDIVATHUILLAI. AVARGALIN PARVAI SITRU INBATHIL IRUKIRATHU. ANTHA SITRU INBA PARVAI MARINAL THAN PERINBA PARVAI PIRAKKUM.ARUMAINA QUESTION THERNTHU EDUTHU KETTA KRISHNA THULASI AVARKALUKKU ENGAL NANRI. VINOD SELVI

said...

Vanakkam THULASI.
God Bless you and our Namaskarams to Balakumaran Aiya.
Few thoughts have been revolving over me again and again and hence this note.
On the first instance of reading this particular PONNUNJAL itself I felt the difficult feeling that Aiya ought to have experienced during that interview with Gnani. But extraordinay GRACE that Shri. Balakumaran Aiya showered in return to him was very unique. I made efforts to listen to the interview again at leisure and noted down several points to write my detailed TAMIL submission on the EXTRAORDINARY GREATNESS of Aiya Balakumaran and on the INSIGHTS that I learned & I am cherishing from this recent interview. Those points that I jotted down & gathered from that interview are still in my pocket for my elaborate reply. Because of my family life and work schedule, I am unable to do justice to my earlier thought of composing a long reply to Shri. Balakumaran Aiya to convey my sincere love & GRATITUDE for him. I may write on such a submission to Aiya in the days ahead. But before that, Kindly convey our affectioante enquirries and Namaskarams to him.
God Bless and Thank you so much.
affectioantely,
srinivasan.

said...

Nice...Its very Nice

Iyyavin ezhuthukal verum ezhuthukal allaa... adhu Sepu Pattiyam.

Indha ezhuthukal palla thallimuraiku poi seeravendayavi...Nichiyam Seendradium.

I can clearly see the difference of my Past and Present. Tons of Thanks to Iyya.

KrishnaThulasi, ungallaku mikka Nandri.

Keep Up...

said...

பொன்னூஞ்சல் ஆரம்பமே அதிரடியாக உள்ளது குடும்ப அமைப்பிலிருக்கும் பாலியல் குழப்பங்களை எளிதில் பகிர்ந்து கொண்டு தீர்வுகான உண்மையான அக்கறை உள்ளவர்கள் அருகில் இல்லாததாலேயே பல திருமணங்கள் தோல்வியை தழுவுகின்றன.அருகிலிருந்து ஆற்றுப்படுத்துவது போல இருக்கும் ஐயாவின் வன்மையான எழுத்துக்கள் பலரின் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை

பட்டினியில் தவிப்பவர்க்கே உணவின் அருமை தெரியும். பிரச்சனை இருளில் உழலுபவர்க்கு நல்ல ஒரு கைவிளக்கு பெரிய வரப்பிரசாதம்

துறவு மேற்கொள்ளாமால் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே கடவுள் தேடலை செய்ய முடியும் என்றும் அப்படி தேடுதலில் உள்ள சாதக, பாதகங்களையும் பல கதைகளின் மூலம் ஆரம்பகாலத்திலேயே புரிய வைத்ததாலேயே அவருடைய எழுத்துக்கள் பலப்பல வாசகர்களை சென்றடைந்து பிராபல்யமானது. இதை அவருடைய வாசகர்கள் நன்கு அறிவர்.அறியாதவர்க்கு இந்த பேட்டி தெளிவுபடுத்துகிறது.

நன்றி கிருஷ்ணதுளசி

said...

I really say's thanks to Mr.bala for kadarolra kurivikal,few night's really affect me very deeply,No words to explain,this is real felling,still am reading this book when I have time.
once again thanks to this blog.
krishna

said...

I really say's thanks to Mr.bala for kadarolra kurivikal,few night's really affect me very deeply,No words to explain,this is real felling,still am reading this book when I have time.
once again thanks to this blog.
krishna

said...

His writtings makes me think about everything in a very different way, in a way the truth lies.

I repeatedly read his books and as for me, it is 'THIRUPOONDHURUTHI' is a masterpiece and is in a different league.
May lord shower his love on our EZHUTHU SITHAR

said...

I am basically born & bought of from a Muslim family. I was able to understand Quran in It's depth after reading Bala Sir's Noval. It made me understand myself, my fellow beings, all the Holy scriptures and God. It is not at all possible to simply thank him. We are happy to have you around us. We simply cann't thank enough Bala Sir. Thanks for your great work. We appreciate. - Shafiullah A. Sabiri

said...

Looking for a book by name "Kadavul Veedu". I have tried in many places in Chennai, but couldnt find out. Let me know when can i get this book in Chennai